போர்க்களத்திற்குச் செல்லாமல்
ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.
நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.
தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது 'இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்." ஆனால் தாவீது 'எருசலேமிலேயே தங்கிவிட்டார்" (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து
தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.
தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், 'நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்". இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).
நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.

நீங்கள் திரும்ப வருவீர்களா?
ரான் மற்றும் நான்சியின் திருமணமானது, நாளுக்கு நாள் வேகமாக முறிந்து கொண்டே வந்தது. அவளுக்கு ஒரு தவறான தொடர்பு இருந்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு இந்தப் பாவத்தை தேவனுக்கு முன்பாக ஒத்துக் கொண்டாள். தேவன் அவளை என்ன செய்யச் சொல்கிறார் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அது அவளுக்குக் கடினமாக இருந்தது. உண்மையை அவள் ரானிடம் பகிர்ந்து கொண்டாள். விவாகரத்தினை செய்வதற்கு பதிலாக, ரான் அவளுக்குத் தன்னோடு உண்மையாக மனந்திரும்பி வாழ தன் மனமாற்றத்தை நிரூபிக்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அற்புதமான முறையிலே தேவன் அவர்களின் திருமணத்தை சரிசெய்தார்.
ரானின் நடவடிக்கையானது பாவிகளான நம்மைப் போன்றவர்களின் மேல் தேவன் வைத்த அன்பிற்கும், மன்னிப்பிற்கும் அடையாளமாக இருக்கிறது. தீர்க்கதரிசியான ஓசியா இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தவறான வாழ்க்கை வாழ்ந்த உண்மையில்லாத ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி தேவனால் கட்டளையிடப்படுகிறார். அதன் விளைவாக இஸ்ரவேலர்கள் தனக்கு விரோதமாக எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் (ஓசியா 1) அதைவிட மிகக் கடினமான காரியம், ஓசியாவின் மனைவி அவனைவிட்டு பிரிந்து போனபின்பு, தேவன் மறுபடியும் அவளை ஓசியாவிடம் திரும்பி வரும்படி சொன்னதுதான். அவர், விபச்சாரியான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் (ஓசியா 3:1) என்று கூறுகிறார். அவர்களுடைய எல்லா கீழ்படியாமைக்கு மத்தியிலும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு நெருக்கமான உறவினை வைத்துக் கொள்ள விரும்புகிறார். எவ்வாறு ஓசியா தன் உண்மையில்லாத மனைவியை நேசித்தாரோ, தேடிச்சென்றாரோ, தியாகம் செய்தாரோ அதைப்போல தேவன் தம் ஜனத்தை நேசித்தார். அவருடைய நீதியான கோபாக்கினையும், அவருடைய வைராக்கியமும் அவருடைய மிகப்பெரிய அன்பினால் ஆட்கொள்ளப்பட்டது.
இதே தேவன் நம்மை அவருக்கு அருகில் வரும்படி விரும்புகிறார். விசுவாசத்தோடு நாம் அவருக்கு அருகில் வருவோமானால், அவருக்குள் நாம் முழுமையடைகிறோம் என்பதை நாம் விசுவாசிக்க முடியும்.

அப்பங்களும், மீன்களும்
ஒரு சிறு பையன் ஆலயத்திலிருந்து மிகவும் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அன்றைய நாள் முழுதும் பிடித்தப் பாடமான அப்பங்களும் மீன்களும் ஒரு சிறுவனைக் குறித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து சொன்னான். அவன், அந்தச் சிறுவன் எவ்வாறு தன் அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இயேசுவானவர் அன்று நாள் முழுவதும் மக்கள் கூட்டத்திற்கு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள், அவர்கள், ஊருக்குள் போய் அப்பங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். இயேசு அவர்களுக்கு, 'நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்", என்று கூறினார். (மத். 14:16) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் அங்கு இருந்தபடியால் சீடர்கள் கலக்கமடைந்தார்கள். மீதமுள்ள கதை உங்களுக்குத்தெரியும். அந்தச் சிறுவன் தன்னுடைய மதிய உணவைக் கொடுத்தான் - ஐந்து சிறிய அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் - இதைக் கொண்டுதான் இயேசுவானவர் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை போஷித்தார் (வச. 13-21). ஒரு கற்பனை கதை என்னவெனில், இந்த சிறுவனின் தாராள மனப்பான்மையைக் கண்டு, மற்றவர்களும் தங்கள், மதிய உணவைக் கொடுத்தார்கள் என்பதாகும். ஆனால், மத்தேயு தெளிவாக இது ஒரு அற்புதம் என நாம் புரிந்து கொள்வதற்காக விளக்கம் அளிக்கிறார். இந்த சம்பவமானது, நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.
நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? குடும்பம், அயலகத்தார், நண்பர்கள், உடன் ஊழியர்கள், மற்றும் பலர் பல்வேறு விதமான தேவைகளோடு நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை விட அதிகம் வசதிபடைத்தவர்களிடத்திற்கு நாம் அவர்களை அனுப்பலாமா? உண்மையாகவே சிலருடைய தேவைகள் நம்முடைய சக்திக்கும் மீறினதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல. உங்களிடத்தில் என்ன உள்ளதோ, ஒரு கட்டிபிடித்தல், ஒரு அன்பான வார்த்தை, கவனிக்கும் காதுகள், ஒரு சுருக்கமான ஜெபம், நீங்கள் பெற்ற ஞானத்தினையும் இயேசுவண்டைக் கொடுத்து அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் எனப் பாருங்கள்.

ஒன்றினை சொந்தமாக்கிக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்
1900களின் ஆரம்பத்தில் பேக்கார்ட் மோட்டார் கார் கம்பெனி ஒரு வாக்கியத்தை உருவாக்கி, வாங்குபவர்களை ஊக்குவித்தது. அது என்னவெனில், 'ஒன்றினை சொந்தமாகக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்" என்பதே. இது ஒரு வல்லமையான வாக்கியமாக அந்நாளில் திகழ்ந்தது. அது அந்தக் கார் கம்பெனியின் நன்மதிப்பை அதிகரித்து, அந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த, மற்றும் விலையுயர்ந்த காரினை உருவாக்குகின்ற கம்பெனியாய் உயர்த்தியது. இந்த பேக்கார்ட் கார் கம்பெனியின் எண்ணம் என்னவென்றால், கார் வாங்கின தனிப்பட்ட மனிதனின் சாட்சியானது கேட்பவர்களை உற்சாகமூட்டும் எனவும், தன்னுடைய நண்பன் தான் வாங்கின ஒருபொருளைக் குறித்த திருப்தியானது, ஒரு சக்தி மிகுந்த ஆதரவு என்று நினைத்தது.
தேவனோடு நமக்கு உள்ள நெருக்கமான உறவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. தேவன், நம்முடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் அவரோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (சங். 66:1) சங்கீதக்காரன், தன் சங்கீதத்தில், தன் பாவத்திலிருந்து முற்றிலுமாக திரும்பினபோது, தேவன் தனக்கு அளித்த மன்னிப்பினைக் குறித்து மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொள்ளுகிறார் (வச. 18-20).
வரலாற்றிலே தேவன் மகத்துவமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளந்தது (வச. 6). அவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார். அதன்மூலம் நம் பாடுகளின் மத்தியில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்து, அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். நம்முடைய அன்றாடத் தேவைகளையும் அவர் சந்திக்கிறார். நாம் இப்படிப்பட்ட சொந்த அனுபவங்களில் தேவனுடைய இடைப்படுதலைக் குறித்து, மற்றவர்களிடம் கூறும் பொழுது, நாம் மற்றெல்லா காரியங்களையும் விட விலையுயர்ந்த காரியத்தினை அவர்களுக்கு கொடுக்கிறோம் - நாம் தேவனுடைய நன்மைகளை உணர்ந்தவர்களாய் மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்விற்கான பயணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும் காணப்படுவோம்.

அன்பிற்காகவா அல்லது பணத்திற்காகவா
ஐரிஷ் கவிஞர் ஆஸ்கர் வைல்டு இவ்வாறு கூறுகிறார், 'நான் இளைஞனாக இருந்தபோது பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதென்று நினைத்தேன். இப்பொழுதும் நான் வயதான பிறகும் அதையே நினைக்கிறேன்." அவருடைய கூற்றானது நாவிலிருந்து வந்தாலும், அவர் 46ஆம் வயது வரையே வாழ்ந்தார். அதனால் அவர் உண்மையிலேயே வயது சென்று மரிக்கவில்லை. ஆனால் தன் இறுதி நாட்களில் வைல்டு, பணம்தான் வாழ்கைக்கு முக்கியமல்ல என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். பணம் தற்காலிகமானது, அது வரும் அது போகும். எனவே வாழ்க்கை என்பது பணத்தைவிடவும், அது வாங்கும் பொருட்களைவிடவும் முக்கியமானது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் உள்ள சந்ததியாரை. பணக்காரன் ஏழை இருவரும் சமம். மறு அளவீட்டிற்கான மதிப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கியது என்று சவால் விடுத்தார் (லூக். 12:15). '’பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல" என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம்முடைய கலாச்சாரத்தில், அதிகத்தின் மேலும், புதியவற்றின் மேலும், மற்றும் சிறந்தவற்றின் மேலும் நம்முடைய நிரந்தரமான பார்வை படும்பொழுது, பணத்தின் மேலும் ஆஸ்தியின் மேலும் நம்முடைய பார்வையானது, மனத்திருப்தியோடும், உயரிய நோக்கத்தோடும் படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
இயேசுவை சந்தித்த மாத்திரத்தில், ஒரு பணக்கார அதிகாரி, துக்கத்தோடு திரும்பி செல்லுகிறார். ஏனெனில் அவருக்குத் திரளான ஆஸ்திகள் இருந்தது. அதனால் அவைகளை அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை (லூக். 18:18-25). ஆனால் ஆயக்காரனாகிய சகேயு தன் வாழ்க்கையில் முழுவதும் சம்பாதித்தவற்றை விட்டுக்கொடுத்தார் (லூக்.19:8). வித்தியாசம் என்னவெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தைத் தழுவுதலாகும். அவருடைய கிருபையின் நிமித்தம், நம்முடைய ஆஸ்திகளின்மேல் ஆரோக்கியமான கண்ணோட்டத்தை உடையவர்களாய் இருக்கலாம். அவ்வாறு இருப்பின், அந்த பொருட்கள் நம்மை மேற்கொண்டதாக இருக்க முடியாது.