
“இருப்பினும்”
2017 ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய சூறாவளியின் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் ஒரு குழுவாக ஹியூஸ்டன் நகருக்குப் பயணித்தோம். எங்களுடைய இலக்கு, புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்துவது தான். அவர்களின் உடைந்துபோன ஆலயம் மற்றும் சிதைந்து போன வீடுகளின் மத்தியில் அவர்களைக் காணும்போது எங்களது விசுவாசமே ஆட்டம் கண்டது.
இந்த விதமான கடினமான சூழ்நிலையில் ஹார்வே நகர மக்கள் வெளிப்படுத்தின பிரகாசமான விசுவாசமானது, கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆபகூக் வெளிப்படுத்தின விசுவாசத்தினை நமக்குக் காட்டுகிறது. தீர்க்கதரிசியானவர் கடினமான காலங்கள் வரப் போகிறது என்பதை முன்னறிவித்தார் (1:5-2:1). காரியங்கள் நலமாவதற்கு முன்னே, அவைகள் மிகவும் மோசமடையப் போகின்றன. அந்தத் தீர்க்கதரிசனத்தின் இறுதியில், அவர் பூலோக இழப்புகளைச் சுற்றி தன் சிந்தனைகளை செலுத்திய, பிறகு 'இருப்பினும்" என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். மூன்று வகையான தோற்றத்தை உருவாக்குகிறது. 'அத்திமரம் துளிர் விடாமற்போனாலும்... ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்... தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்... மந்தையில் முதலற்றுப் போனாலும்" (3:17).
இயற்கைப் பேரழிவு அல்லது பிரியமானவர்களின் மரணம், சுகத்தை அல்லது வேலை இழத்தல் போன்ற கற்பனைக்கெட்டாத இழப்புகளை நாம் சந்திக்கும் பொழுது நாம் எந்த நிலையில் நின்று அவைகளை மேற்கொள்ளுகிறோம்? ஆபகூக்கின் 'கடினமான காலங்களின் கீதங்கள்" நம்மை தேவன்மேல் உறுதியான விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வைக்க அழைக்கிறது. அவரே நம்மை மீட்கக்கூடிய காரணர் (வச. 18) பெலன், உறுதிப்படுத்துகிறவர் (வச. 19). நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இறுதியாக, அவரை நம்புகிறவர்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள்.

உற்சாகப்படுத்துதலின் வல்லமை
பெஞ்சமின் வெஸ்ட் ஒரு சிறுவனாக இருந்தபோது தன் சகோதரியின் படத்தை வரைய முற்பட்டான். ஆனால் அவனால் அதை சிறப்பாக வரையமுடியவில்லை. ஆனால் அவனுடைய அம்மா அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டி அவன் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிற்காலத்தில், அந்த முத்தமே அவரை ஒரு சிறந்த ஓவியனாக உருவாக்கினது என சாட்சி கூறினார். அவர் அமெரிக்காவின் சிறந்த ஒரு ஓவியனாக மாறினார். உற்சாகப்படுத்துதல் என்பது ஒரு வலிமையுள்ள ஆயுதம்.
ஒரு பிள்ளை வரையக் கற்றுக்கொள்ளுவது போல பவுலுக்கும் அவருடைய ஊழியத்தில் அந்தக் காலத்தில் போதுமான அனுபவம் கிடையாது. ஆனால், பர்னபாஸ் பவுலின் அழைப்பைக் குறித்து உறுதியாக இருந்தார். பர்னபாவின் உற்சாகப்படுத்துதலின் மூலமே, சபையானது சவுலை ஒரு சக விசுவாசியாக ஏற்றுக்கொண்டது (அப். 9:27). பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள வளர்ந்துவரும் திருச்சபையை உற்சாகப்படுத்தி, அப்போஸ்தலர் நடபடிகளிலேயே ஒரு சிறப்பான திருச்சபையாக உருவாக்கினார் (அப். 11:22-23). அதுமட்டுமல்லாமல், பர்னபாவின் உற்சாகப்படுத்துதலினாலும், பவுலின் ஊக்கப்படுத்துதலினாலும் எருசலேம் திருச்சபை, புறஜாதியாரை சக விசுவாசக் கிறிஸ்தவர்களாகத் தழுவிக்கொண்டது (15:19). எனவே, ஆதித்திருச்சபையானது, பல வழிகளில் உற்சாகப்படுத்துதலின் கதையாக அமைந்திருக்கிறது.
இதே காரியம் நம்முடைய வாழ்க்கையிலும் பொருத்தப்பட வேண்டும். உற்சாகப்படுத்துதல் என்றால் நாம் மற்றவர்களிடம் ஒரு சில நல்ல வார்த்தைகளைப் பேசுவது என்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம். ஆனால், அப்படி நாம் நினைத்து விடுவோமானால், அதன் வல்லமையை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இது நம்மையும், நம் திருச்சபையின் வாழ்வையும் உருவாக்க தேவனால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். நாம் நம்முடைய வாழ்வில் பெற்றுக்கொண்ட ஊக்கப்படுத்துதல்களுக்காகவும், அதில் நாம் மற்றவர்களுக்குக் கொடுத்த தருணங்களுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.

அழிக்கமுடியாத அன்பு
முதலில் எங்கள் வீட்டிற்குப் பின் அமைந்துள்ள ஆற்றினைக் காணும்பொழுது, கோடையின் வெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே அதன் பாறைகளில் வழிந்தோடியது. அதை நாங்கள் எளிதாகக் கடந்து செல்ல உறுதியான மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல மாதங்கள் கழித்து, மிகவும் அதிகமான மழை எங்கள் பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருந்தபடியால், எங்களது சிறிய ஆறானது அதிகமான வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அது 4 அடி ஆழமாகவும் 10 அடி அகலமாகவும் ஓடியது. அந்தத் தண்ணீரின் வேகமானது, மரப்பாலத்தை உடைத்து வேகமாக வீசி எறிந்தது.
வேகமாக ஓடும் தண்ணீர், தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் தாண்டி அவைகளின் மேல் செல்லக் கூடியதாகவுள்ளது. ஆனால், கடினமான வெள்ளத்தினாலோ, அல்லது அழிவினை உண்டாக்குகிற எந்த சக்தியாலும், அழிக்கமுடியாத ஒன்று உள்ளது. அதுதான் அன்பு. 'திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டது" (உன்னத. 8:7). அன்பின் விடாப்பிடியான பெலமும், உறுதியும், உலகப்பிரகாரமான அன்பினால் வெளிப்படுத்தப்படும். ஆனால், இந்த அன்பின் முழுப் பரிமாணமும், மனிதர்கள் மேல், தேவன் தன் குமாரனின் மூலம் வெளிப்படுத்தும் அன்பாக அமைகிறது.
நாம் எவைகளையெல்லாம் நமக்கு சார்ந்திருக்கப் பயன்படுத்துகிறோமோ அவைகளெல்லாம் ஒரு நாளில் அழிக்கப்பட்டுப் போய்விடும். நம்முடைய ஏமாற்றம் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள உதவும் கதவினை திறக்கக் கூடியதாக அமையும். அவருடைய பிரியமானது உயரமான, ஆழமான, பெலமான மற்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும்.
நாம் எவைகளையெல்லாம் சந்திக்கிறோமோ, அவைகளெல்லாம் அவரோடு கூட நமக்கு அருகிலும், நம்மைத் தாங்குகிறதாகவும், நமக்கு உதவி செய்கிறதாகவும், நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டக் கூடியதாகவும் அமைகிறது.
விசுவாசம் எனும் சாசனம்
பில்லி கிரஹாம், தன் 16ஆம் வயதில், கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, தன் பெற்றோருக்கு இயேசுவின் மேல் உள்ள தாகம் அவருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. இருவருமே, கிறிஸ்தவ குடும்பத்திற்குள் இருக்கும்போதே விசுவாசத்திற்குள் வந்துவிட்டார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, பில்லியின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த உறுதியான விசுவாசத்தினை அன்போடுகூட தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். திருச்சபைக்கு ஒழுங்காகச் செல்லுதல், வேதவாசிப்பு, ஜெபம் போன்றவற்றில் அவர்களைப் பழக்கினார்கள். பில்லி கிரஹாமின் பெற்றோர்கள் அமைத்த உறுதியான அஸ்திபாரத்தினடிப்படையில், தேவன் அவரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து, இறுதியில் அவரை ஒரு தைரியமான சுவிசேஷகராக உருவாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுலின் இளம் சீஷனான தீமோத்தேயுவும், உறுதியான ஆவிக்குரிய அஸ்திபாரத்தினால் பயனடைந்தார். பவுல், 'உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறது" (2 தீமோ. 1:5). இந்த உறுதியான சாசனமானது, தீமோத்தேயுவின் இருதயத்தை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு நேராக திருப்ப உதவினது.
இப்பொழுது பவுல், தீமோத்தேயுவின் பாரம்பரிய விசுவாசத்தில் தொடரும்படியாக அவரை துரிதப்படுத்துகிறார். 'உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்" (2 தீமோ. 1:6). 'நீ வெட்கப்படாமல் தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி" (2 தீமோ. 1:8) என்று கூறுகிறார். ஒரு உறுதியான சாசனமுள்ள ஆவிக்குரிய பின்னணி மட்டுமே நம்மை விசுவாசத்திற்குள் கொண்டுவரமுடியாது. ஆனால், மற்றவர்களின் சாட்சிகள் மற்றும் உருவாக்குதலின் மூலமே அதற்கான வழியை ஆயத்தப்படுத்த முடியும். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகே, ஆவியானவர் நம்மை நம்முடைய ஊழியத்தில் நடத்தவும், அவருக்காக வாழவும், மட்டுமல்லாது, பிறரை விசுவாச வாழ்க்கையில் வளர்ப்பதற்குமான சிலாக்கியத்தை தந்தருளுவார்.

