தேவனுடைய கிருபை வரம்
நான் பணியாற்றிக்கொண்டிருந்த கல்லூரியில் கட்டுரை எழுதும் வகுப்பிற்கான பேப்பர்களை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட தாள் என்னைக் கவர்ந்தது. மிகவும் நன்றாக எழுதப்பட்டிருந்தது! அது நன்றாக எழுதப்பட்டது என்பதை துரிதமாய் கண்டுபிடித்தேன். சற்று உன்னிப்பாய் அதை கவனத்துப் பார்த்துபோது, அது ஆன்லைனிலிருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க நேரிட்டது.
மாணவியின் இந்த தந்திரமான தவறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் வகையில் நான் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவள் இந்தத் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்னையே பெறுகிறாள். ஆனால் அவள் இன்னொரு ஒழுங்கான தாளை எழுதமுடியும். அதற்கு அவள், “நான் அவமானமாய் உணர்கிறேன், மிகவும் வருந்துகிறேன். தகுதியற்ற எனக்கு நீங்கள் காட்டும் கிருபைக்காய் நன்றி” என்று பதில் அனுப்பியிருந்தாள். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் இயேசுவின் கிருபையைப் பெற்றே ஜீவிக்கிறோம், அப்படியிருக்கும்போது உன் மேல் கிருபை காண்பிக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்” என்று அவளுக்கு நான் பதிலளித்தேன்.
தேவனுடைய கிருபை நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், நம் தவறுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும் பல வழிகள் உள்ளன. அது இரட்சிப்பை அளிக்கிறது என்று பேதுரு கூறுகிறார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே... நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோம்” (அப்போஸ்தலர் 15:11). அது பாவம் நம்மை மேற்கொள்ளாதிருக்கும்படி செய்கிறது என்று பவுல் சொல்லுகிறார்: “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14). பேதுரு, கிருபை நம்மை உதவிசெய்யத் தூண்டுகிறது என்கிறார்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” (1 பேதுரு 4:10).
கிருபை. தேவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டது (எபேசியர் 4:7). மற்றவர்களை நேசிக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த வரத்தைப் பயன்படுத்துவோம்.
- டேவ் பிராணன்

புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள்
சமையலறையில் நின்றுகொண்டிருந்த என் மகள், “அம்மா, தேனில் ஒரு ஈ இருக்கிறது!” என்றாள். “வினிகரை விட தேனில் எப்பொழுதும் அதிக ஈக்களை நீ கண்டெடுப்பாய்” என்ற வழக்கமான பழமொழியைச் சொல்லி நான் அவளை கேலி செய்தேன். நான் தேனில் ஒரு ஈயை காண்பது இதுவே முதல்முறை என்றாலும், ஞானத்தைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு இந்த பழமொழியை மேற்கோள் காண்பித்தேன். அதின் நியதி என்னவென்றால், கசப்பான அணுகுமுறையை விட அன்பான கோரிக்கைகள் மற்றவர்களை எளிமையாய் வசப்படச் செய்யும்.
நீதிமொழிகள் புத்தகம் தேவனுடைய ஆவியால் ஈர்க்கப்பட்ட ஞானமான பழமொழிகள் மற்றும் சொற்களின் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. இந்த வெளிப்படுத்தப்பட்ட வசனங்கள் நம்மை வழிநடத்தவும், தேவனை கனப்படுத்தும் விதங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான உண்மைகளை கற்பிக்கவும் உதவுகின்றன. பல பழமொழிகள், நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை உள்ளடக்கி, ஒருவரோடு ஒருவருக்கு இருக்கவேண்டிய உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.
சாலெமோன் ராஜாவின் பழமொழி தொகுப்பின் ஒரு பகுதியில், அண்டை வீட்டாருக்கு எதிராகப் பொய்யாகப் பேசுவதால் ஏற்படும் தீமைக்கு எதிராக அவர் எச்சரிப்பை பதிவுசெய்கிறார் (நீதிமொழிகள் 25:18). “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்” (வச. 23) என்று ஆலோசனை கூறுகிறார். தொடர்ந்த சண்டையிட்டுக்கொண்டேயிருப்பதினால் ஏற்படும் விளைவுகளையும் சாலெமோன் தொடர்ந்து பதிவிடுகிறார் (வச. 24). நன்மையை அறிவிக்கும் நம்முடைய வார்த்தைகள் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரக்கூடியது என்று ராஜா வலியுறுத்துகிறார் (வச. 25).
இந்த சத்தியங்களைப் பிரயோகிக்க நாம் முற்படுகையில், நம்முடைய நாவிலிருந்து “திவ்ய வாக்கு” பிறக்கக்கூடும் (16:1). அவரிடத்திலிருந்து ஊக்கத்தைப் பெறும்போது, நமது வார்த்தைகள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- லிசா சாம்ரா

எழுத்து கலையும் அரசியலமைப்பும்
இந்திய அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வ நகல் ஒரு சட்டப் புத்தகம் மட்டுமல்ல, இது கறுப்புத் தோலினால் கட்டப்பட்டு தங்கத்தால் பொறிக்கப்பட்ட கலைப் படைப்பும் கூட. பிரேம் பிஹாரி நரேன் ரைஸ்தா 15 வகையான மை முனைகளைப் பயன்படுத்தி கையால் எழுதப்பட்ட இந்த ஆவணம் கலை முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது அழகான எழுத்து கலை அரசியலமைப்பின் பக்கங்களுக்குக் காலத்திற்கும் நிலைக்கும் நேர்த்தியளிக்கிறது. சாந்திநிகேதனைச் சேர்ந்த கலைஞர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் சித்திரங்களால் அதின் பக்கங்களை அலங்கரித்து, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பழங்குடியினரின் கலைவடிவங்களைக் கொண்ட ஓவியங்கள் கொண்டு மேலும் அழகு சேர்க்கின்றனர். தற்போது ஹீலியம் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, இது இந்தியக் குடியரசின் மிகவும் பொக்கிஷமான உடைமைகளில் ஒன்றாகும்.
குடிமக்களாகிய நமக்கு விலையேறப்பெற்ற அரசியலமைப்பைப் போலவே, கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நமக்கு வேதாகமம் ஒரு பொக்கிஷமான உடைமையாகும். காரணம், இந்த வார்த்தைகள் சரியான பாதையில் நாம் நடக்க உதவுகின்றன (வ.9). இது ஒரு சுமை அல்ல, மாறாக மகிழ்ச்சியும் களிப்புமாகும் (வ.14-16). சங்கீதக்காரன் வேதாகமத்தை "திரளான" செல்வத்தோடு ஒப்பிடுகிறார் (வ.14) இது அவரது இதயத்தில் "பொக்கிஷமாக" இருப்பதாக அவர் கூறுகிறார், ஏனெனில் அது அவரது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மதிப்பைச் சேர்க்கிறது என்பதை அவர் அறிவார் (வ.11).
வேகமான நம் உலகில், தேவனுடைய வார்த்தையுடன் நேரத்தைச் செலவிடுவது முக்கியத்துவமற்ற ஒரு வேலையாகத் தோன்றுகிறது. ஆனால் அது ஒரு பொக்கிஷம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெரும்பாலும் கடினமான முடிவுகளை நாம் எதிர்கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தையே நமக்கு வழிகாட்டுதலையும், ஆறுதலையும், கண்டிப்பையும் தருகிறது. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் நாம் தினமும் வேதவசனங்களைப் படித்து, தியானித்து, அதில் ஈடுபடும்போது, தேவனின் மாறாத வார்த்தை எவ்வளவு பொக்கிஷமாக இருக்கிறது என்பதை நாம் உண்மையில் புரிந்துகொள்வோம்.
- ரெபேக்கா விஜயன்

விசித்திரமான இடங்கள்
ஒரு கணவனாகவும், சிறு குழந்தைகளின் அப்பாவாகவும், தீவிரமான புற்றுநோய் கண்டறிதலுடன் நான் மல்யுத்தம் செய்தபோது, இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக சிறுபிள்ளைகளை ஆண்டவருக்குள் வழிநடத்தும் ஒரு கிறிஸ்தவ மிஷன் குழுவோடு சேர்ந்து நாங்கள் குடும்பமாய் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். தேவனுக்காய் கனிகொடுக்கிற குடும்பமாய் நாங்கள் இருந்தோம். அது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை?
எஸ்தர் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்டு விசித்திரமான ஒரு தேசத்திற்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டதும், தேவ சமூகத்தில் கேள்விகளையும் ஜெபங்களையும் முன்வைத்திருந்திருக்கக்கூடும் (எஸ்தர் 2:8). அவள் அனாதையான பிறகு அவளுடைய உறவினர் மொர்தெகாய் அவளை தனது சொந்த மகளாக வளர்த்தார் (வச. 7). ஆனால் பின்னர் அவள் ஒரு ராஜாவின் அரண்மனையில் வைக்கப்பட்டாள். இறுதியில் அவனுடைய ராணியாக பணியாற்ற உயர்த்தப்பட்டாள் (வச. 17). மொர்தெகாய் எஸ்தருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலையுற்றான் (வச. 11). ஆனால் காலப்போக்கில், தேவன் அவளை இப்படிப்பட்ட காலத்துக்கு” (4:14) உதவியாயிருக்கும்படிக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்தனர். இது அவர்களுடைய சொந்த ஜனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு ஏதுவாயிருந்தது (அதி. 7-8).
தேவன் தனது நேர்த்தியான திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்தரை ஒரு விசித்திரமான இடத்தில் வைத்தார் என்பது தெளிவாகிறது. என்னிடமும் அவ்வாறே செய்தார். புற்றுநோயுடன் ஒரு நீண்ட போரை நான் சகித்திருந்ததால், பல நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் உங்களை எந்த விசித்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்? அவனை நம்புங்கள். அவர் நல்லவர், அவருடைய திட்டங்களும் நன்மையானவைகளே (ரோமர் 11:33-36).
- டாம் ஃபெல்டன்

கேட்பதற்கு தீவிரமாய்
ஒரு அன்பான நண்பர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டை மறுப்பதற்காக நான் வாயைத் திறந்தபோது என் இதயத்துடிப்பு அதிகரித்ததை உணர்ந்தேன். நான் ஆன்லைனில் பதிவிட்டதற்கும், அவள் சொன்னது போல அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் பதிலளிக்கும் முன், நான் ஒரு ஜெபம் செய்தேன். நான் மௌனமாயிருந்தேன், அவள் சொல்வதையும் அவள் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள காயத்தையும் கேட்டேன். என்னுடைய பதிவு வரம்பை மீறியது என்பதை உணர்ந்துகொண்டேன். என் தோழி வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய வலியை நிவர்த்தி செய்ய நான் அவளுக்கு உதவ தீர்மானித்ததால், என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நான் தொலைக்க நேரிட்டது.
இந்த உரையாடலின் போது, யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன், “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” (1:19). கேட்பது என்பது அவர்களின் வார்த்தைகளுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க நமக்கு உதவக்கூடும். மேலும், “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” (வச. 20) என்பதை புரிந்துகொள்ள வழிவகுக்கும். பேசுபவரின் இருதயத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வேளையில் மறுத்து பேசுவதற்கு பதிலாக, நான் மனதிற்குள் ஜெபித்தது எனக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன். நான் என்னுடைய குற்றத்தைக் குறித்து வருந்துவதைக் காட்டிலும் அவளுடைய வேதனையை மிகவும் பொருட்படுத்த நேரிட்டது. ஒருவேளை நான் ஜெபிப்பதை நிறுத்தாமல் இருந்திருந்தால், என்னுடைய செய்கை மாறியிருக்கக்கூடும், என்னுடைய தரப்பில் நான் எவ்வளவு புண்படுத்தப்பட்டேன் என்பதை பதிலளிக்கு நானும் சொல்லியிருக்கக்கூடும்.
யாக்கோபு கோடிட்டுக் காட்டும் அறிவுரையை நான் எப்போதும் சரியாக கடைபிடித்ததில்லை என்றாலும், அந்த நாளில் அதை நான் செய்தேன் என்று நினைக்கிறேன். கோபப்படுவதற்கு முன்னர் நான் நின்று ஜெபிக்க முடிவுசெய்தது, கேட்பதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாயும் செயல்பட என்னை அனுமதித்து. இதை அடிக்கடி செய்ய தேவன் எனக்கு ஞானத்தைத் தருவார் (நீதிமொழிகள் 19:11) என்று ஜெபிக்கிறேன்.
- கடாரா பேட்டன்