வகை  |  odb

பேசும் மேசைகள்

தனிமை என்ற உணர்வு, நம்முடைய நலமான உணர்வுகளை அச்சுறுத்தக் கூடிய மிகப் பெரிய தீமையாகும். இது, சமுதாய ஊடகங்களில் நம்முடைய நடத்தை, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் இது போன்றவற்றைப் பாதிப்பதின் மூலம் நம் உடல் நலத்தைப் பாதிக்கின்றது. உலக மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர், வயது, பாலினத்தைச் சாராமல், ஏதாவது சில நேரங்களிலாவது தனிமையை உணர்கின்றனர். பிரிட்டனிலுள்ள ஒரு பெரிய அங்காடியில் “பேசும் மேசைகளை”, அவர்களின் சிற்றுண்டிச் சாலைகளில், மக்களிடையே உறவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கியுள்ளனர். மனிதர்களோடு உறவாட விரும்புகின்றவர்கள், இத்தகைய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள  மேசைகளில் அமர்ந்திருப்பவரோடு இணைந்து கொள்வர் அல்லது அங்கு அமர்வதன் மூலம், தங்களின் விருப்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பர். உரையாடல்கள், அவர்களுக்கு மற்றவர்களோடு தொடர்பையும் சமுதாய உணர்வையும் தருகின்றது.

ஆதி திருச்சபைகள், மக்களுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விசுவாச வாழ்க்கையைப் புதியதாகப் பார்க்கும் உலகில், ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழும் போது, தங்களின் விசுவாச வாழ்க்கையில் ஒரு தனிமையை உணர்கின்றனர். “அவர்கள் அபோஸ்தலருடைய உபதேசத்திலும்” பங்கு பெற்று, இயேசுவைப் பின்பற்ற தேவையான காரியங்களைக் கற்றுக் கொண்டனர், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திரு     ந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு” ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஐக்கியத்தில் நிலைத்திருந்தார்கள் (அப். 2:42,46).

நம் அனைவருக்குமே மனிதர்களின் தொடர்பு தேவை. தேவன் அதற்கென்றே நம்மை உருவாக்கினார்! வேதனை நிறைந்த தனிமை, நம்மைத் இத்தேவைக்கு நேராக வழிநடத்துகின்றது. ஆதி திருச்சபை மக்களைப் போல நாமும் நல்லெண்ணமுடன், மனித தோழமையை ஏற்படுத்துவோம், இத்தேவையோடு இருக்கும் நம் சுற்றத்தாருக்கும் வழங்குவோம்.

தீபத்தைக் காப்பவர்

அவர்களை “ஒளியைப் பாதுகாப்பவர்” என்று அழைத்தனர். அமெரிக்கா தேசத்தில், வடக்கு கரோலினாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஹட்டெராஸ் தீவுகளின் முனையிலுள்ள கலங்கரை விளக்கத்தில், 1803 ஆம் ஆண்டிலிரு  ந்து, அந்த விளக்கு மையத்தை பராமரித்து வந்தவர்களுக்காக, ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. தற்சமயம், கடற்கரை அரிப்பு காரணமாக, அந்த முழு அமைப்பும் உள்பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளது. விளக்கு பாதுகாப்பவர்களின் பெயர்கள், பழைய அஸ்திபார கற்களில் பதிக்கப்பட்டு, புதிய கட்டடத்திலுள்ள ஓர் அறைவட்ட வடிவ அரங்கில், பார்வையாளர்கள் பார்க்கும்படி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய பார்வையாளர்கள் அந்த சரித்திரம் படைத்த விளக்கு பாதுகாவலர்களின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி, இந்த கலங்கரை விளக்கின் மீதும் “கவனம் செலுத்தவும்” என்று அங்கே வைக்கப் பட்டுள்ள தகடுகளில் எழுதப் பட்டுள்ளது.

மெய்யான ஒளியைத் தருபவர் இயேசு கிறிஸ்து. அவர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோ.8:12) என்றார். இது யாவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒளியைப் படைத்தவரும், ஜீவனைத்தருபவரும், தன்னை இவ்வுலகிற்கு அனுப்பினவருமாகிய பரலோகத் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவை உறுதிபடுத்தவே இயேசு இதனைக் கூறினார்.

நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய போதனைகளை கடைபிடித்தால், நாமும் தேவனோடுள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றோம், அவர் நமக்கு புதிய வல்லமையையும், நோக்கத்தையும் தருகின்றார். வாழ்வை மாற்றும் அவருடைய அன்பு “மனுஷருக்கு ஒளியாயிருந்து” (யோவா. 1:4), நம்மைப் பிரகாசிக்கச் செய்து, நம் மூலம் இருளும், ஆபத்தும் நிரம்பிய உலகில் பிரகாசிக்கின்றது.

இயேசுவைப் பின்பற்றும் நாம், “ஒளியைப் பாதுகாப்பவர்கள்”. நம்மில் அவருடைய ஒளி பிரகாசிப்பதை பிறர் காணட்டும், ஜீவனையும் நம்பிக்கையையும் தருபவர் அவர் ஒருவரே என்பதை அவர்களும் கண்டுபிடிக்கட்டும்!

உங்கள் கண்ணீரை தேவனிடம் எடுத்துச் செல்

கடந்த கோடை காலத்தில், டேல்குவா என்று அழைக்கப் பட்ட திமிங்கலம் குட்டி போட்டது. ஆயினும் அது ஆபத்து நிறைந்த விலங்குகளின் மத்தியிலிருந்தது. அந்த புதிய ஜீவன் எதிர்கால நம்பிக்கையோடிருந்தது. ஆனால் அந்த குட்டி சில நிமிடங்கள் தான் உயிர் வாழ்ந்தது. அந்த திமிங்கலத்தின் கவலை நிறைந்த காட்சிகளை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்தனர். டேல்குவா மரித்துப் போன தனது குட்டியின் உடலை, பசிபிக் கடலின் குளிர்ந்த நீரில் பதினேழு நாட்கள் தள்ளிக் கொண்டே சென்று, கடைசியில் கைவிட்டது.

சில வேலைகளில், இயேசுவின் விசுவாசிகளும் தங்கள் கவலைகளோடு என்ன செய்வதென்று தெரியாமல் திணரலாம். நம்முடைய துயரம் நம்பிக்கையற்றதாக காட்சியளித்து, நம்மை பயப்படுத்தலாம். துயரத்தோடு தேவனிடத்தில் கதறும் அநேகரைப் பற்றி வேதாகமத்தில் காண்கின்றோம். உண்மையான பதிலைப் பெற்றுக் கொள்வதில் புலம்பலும், நம்பிக்கையும் ஆகிய இரண்டுமே முக்கிய பங்காற்றுகின்றன.

புலம்பல் என்ற புத்தகத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன, அவை, தங்களின் தேசத்தை இழந்த மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் பகைவர்களால் வேட்டையாடப் பட்டு, சாவின் விளிம்பில் இருக்கின்றனர் (3:52-54). அவர்கள் தேவனை நோக்கி அழுது கூப்பிட்டு, தங்களுக்கு நியாயம் செய்யும் படி கேட்கின்றனர் (வ.64). அவர்கள் நம்பிக்கையிழந்ததால் தேவனை நோக்கிக் கதறவில்லை, தேவன் அவர்களின் கூப்பிடுதலைக் கேட்கின்றார் என்ற நம்பிக்கையில் கதறுகின்றனர், அவர்கள் கூப்பிடும் போது தேவன் அவர்களின் அருகில் வருகின்றார் (வ.57).

இந்த உலகத்தில் அல்லது உன்னுடைய வாழ்வில் உடைந்து போன காரியங்களுக்காகப் புலம்புவதில் எந்த தவறும் இல்லை.தேவன் எப்பொழுதும் கவனிக்கின்றார், பரலோகத்திலிருந்து தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

கத்தி தேவதை

ஐக்கிய இராஜியம்(Uk) எங்கும் கத்தி குற்றங்கள் பெருகின போது, பிரிட்டிஷ் இரும்பு வேலை மையம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. இ       ந்த மையம், உள்ளூர் காவல் துறையோடு இணைந்து, இருநூறு வைப்புப் பெட்டிகளை உருவாக்கி, தேசமெங்கும் வைத்து, பொது மன்னிப்பு பிரச்சாரத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடாமல் ஒரு லட்சம் கத்திகளை ஒப்படைத்தனர், அவற்றுள் சிலவற்றில் இன்னமும் இரத்தக் கறை இருந்தது. பின்னர் அவை கலைஞரான ஆல்ஃபி பிராட்லியிடம் கொடுக்கப் பட்டன. அவர் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்து, சிலவற்றில் கத்திக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளம் நபர்களின் பெயர்களைப் பதித்தார், சிலவற்றில், முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த, வருத்தத்தை தெரிவிக்கும் செய்திகளைப் பதித்தார். பின்னர், அனைத்து 100,000 ஆயுதங்களும் பற்ற வைக்கப் பட்டு, கத்தி தேவதை உருவாக்கப் பட்டது, இருபத்தியேழு அடி உயரம் கொண்ட இந்த தேவதை உருவம், மின்னக் கூடிய இறக்கைகளையும் கொண்டிருந்தது.

நான் இந்த தேவதை சிலைக்கு முன்பாக நிற்கும் போது, இதன் மூலம் எத்தனை ஆயிரம் காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என வியப்படைந்தேன். ஏசாயாவின் புதிய வானம், புதிய பூமியின் தரிசனத்தை நினைத்துப் பார்த்தேன் (ஏசா. 65:17). அங்கு இளம் வயதில் பாலகர்கள் மரிப்பதில்லை (வச. 20), குற்றங்களை  உருவாக்கும்  ஏழ்மையில் அவர்கள் வளர்க்கப்படுவதில்லை (வச, 22-23), கத்தி குற்றங்கள் நடைபெறும் இடமாக அது இருப்பதில்லை, ஏனெனில் எல்லா பட்டயங்களும் ஆக்கப் பூர்வமான வேலைக்குப் பயன்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன (2:4).

அந்த புதிய உலகம் இங்கே இல்லை, அது வரும் வரையிலும் நாம் ஜெபிக்கவும், பணி செய்யவும் கடவோம் (மத்.6:10). தேவன் வாக்களித்துள்ள எதிர்காலத்தின் ஒரு காட்சியை அந்த கத்தி தேவதையும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றாள். பட்டயங்கள் மண் வெட்டிகளாயின, ஆயுதங்கள் கலைப் பொருட்களாயின. வேரென்ன மீட்பின் திட்டங்கள் மூலம் எதிர் காலத்தைப் பற்றிய காட்சியை இன்னும் கொஞ்சம் தர முடியும்?

ஆனந்த தைலம்

ஒரு திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க வேண்டுமானால், அதனை எப்படிச் செய்ய முற்படுவாய்? இது தான் புரூஸ் மார்சியானோ எதிர் நோக்கிய சவால். 1993 ஆம் ஆண்டு, “மத்தேயு” என்ற வேதாகம திரைப் படத்திற்கு, அவன் இயேசுவாக நடித்தான். அவனுடைய நடிப்பின் மூலம் பல மில்லியன் பார்வையாளர்கள் இயேசுவைக் குறித்து தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்த அவனுக்குள் கிறிஸ்துவைப் பற்றி “மிகத்துல்லியமாக” தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான், இயேசுவை நன்கு எனக்கு காட்டும் என வேண்டினான்.

புரூஸ், எபிரெயர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டான். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனை, மற்றவர்களைப் பார்க்கிலும் “ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” என்பதாக எபிரெயரை ஆக்கியோன் எழுதுகின்றார் (1:9). நாம் கொண்டாடக் கூடிய இந்த மகிழ்ச்சி, நாம் முழு மனதுடன் பிதாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் வரும் சந்தோஷத்தால் கிடைக்கும். இத்தகைய மகிழ்ச்சியினால் இயேசுவின் இருதயம் நிரப்பப்பட்டதாக  அவருடைய வாழ் நாள் முழுவதும் இருந்தது. எபிரெயர் 12:2ல் கூறப்பட்டுள்ளபடி, “அவர் தமக்கு முன் வைத்திருந்த ச    ந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் காரியத்தைஎடுத்துக் கொண்ட புரூஸ், வித்தியாசமான மகிழ்ச்சி நிரம்பிய இரட்சகரின் காட்சிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக அவன் “புன்னகை ததும்பும் இயேசு” என்று அழைக்கப் பட்டான். நாமும் முழங்காலில் நின்று, “இயேசுவே என்னை உம்மைப் போல் மாற்றும்” என்று கேட்போமாக. அவர் நம்மை அவருடைய குணங்களினால் நிரப்புவார், நம்மைக் காணும் மக்கள் இயேசுவின் அன்பை நம்மில் காண்பர்.