வகை  |  odb

எளிமையாக கேள்வி

அவளுடைய மருத்துவர், பிரிந்து காணப்படும் அவளுடைய விழித்திரை சரிபார்க்கக் கூடிய நிலையில் இல்லை என்றார். 15 ஆண்டுகள் பார்வையில்லாதவளாய், பிரெயில் முறையைக் கற்றுக் கொண்டு, ஒரு கோலையும், பழக்குவிக்கப் பட்ட நாயையும் பயன் படுத்தி வாழக் கற்றுக் கொண்டபின்பு, ஒரு நாள் அவளுடைய கணவன் வேறொரு மருத்துவரை அணுகி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டார் “அவளுக்கு எப்படியாகிலும் உதவ முடியுமா?” என்றார். உடனடியாக “ஆம்” என்ற பதில் வந்தது. அந்த மருத்துவர் அவளுக்குச் சாதாரண கண் புறை நோய் (cataracts) இருப்பதைக் கண்டுபிடித்தார். முதலாவது, அதனை அவளுடைய வலது கண்ணிலிருந்து நீக்கினார், அப்பொழுது அவளுடைய பார்வை 20/20 என்றிருந்தது. பின்னர், அவளுடைய இடது கண்ணிலும் அறுவை சிக்கிச்சை செய்தார், அதுவும் வெற்றியாக முடிந்தது.

ஒரு எளிய கேள்வி நாகமானின் வாழ்வை மாற்றியது. மிக வலிமையான இராணுவ வீரன் குஷ்டரோகத்தால் பாதிக்கப் பட்டான். ஆனால், எலிசா தீர்க்கதரிசி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம்     ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (2 இரா.5:10) என்று அறிவுரை கூறியதைக் கேட்ட போது, அவன் கோபமடைந்தான். நாகமானின் வேலைகாரன் அந்த படைத்தலைவனிடம் ஓர் எளிய கேள்வியைக் கேட்டான். “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச்   சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?” (வ.13) என்றான். அதற்குச் சம்மதித்த நாகமான் ஸ்நானம் பண்ணினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14).

சில வேளைகளில், நாமும் நம்முடைய வாழ்வில் சில பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம், காரணம், நாம் தேவனிடம் கேட்கவில்லை. நீர் உதவுவீரா? நான் போகலாமா? நீர் வழி நடத்துவீரா? என்று சந்தேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மிடமிருந்து சிக்கலான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்” என்று தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கின்றார் (ஏசா.65:24). எனவே, இன்றே அவரிடம் கேள்.

விடுவிக்கும் நம்பிக்கை

இந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.

ஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.

மீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர்! அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).

சந்ததியினருக்கு கடத்தப்படும் அன்பு

என்னுடைய மகள், நான்சி டிரூவின் துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டிருந்தாள். கடந்த மூன்று வாரங்களில், அவள், ஸ்லூயத் என்ற பெண்ணை பற்றிவரும், கிட்டத்தட்ட 12 புத்தகங்களை வாசித்தாள். அவளுடைய துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டாள். நானும் குழந்தையாக இருந்த போது இத்தகைய புத்தகங்களின் மீது ஆவல் கொண்டிருந்தேன். 1960 களில் என்னுடைய அம்மா வாசித்த,  நீல அட்டைகொண்ட இந்த புத்தங்கள், அவளுடைய அலமாரியில் இன்னமும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பாசம் சந்ததிகளுக்கும் கடந்து வருவது, வேறென்ன காரியங்களை நான் கடந்து வரச் செய்கின்றேன் என்பதைச் சிந்திக்கச் செய்தது. தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதும் போது பவுல், அவனுடைய பாட்டி மற்றும் தாயாரின் “மாயமற்ற விசுவாசத்தைப்” பற்றி நினைக்கின்றார். இந்த மர்மக் கதைகளின் மீது அவளுக்கு இருக்கின்ற ஆவலோடு, அவளுடைய பாட்டியும் தாத்தாவும் கொண்டிருந்த விசுவாசத்தையும் ஊழியத்தையும் பற்றிக் கொண்டு, ஜெபத்திலும் “கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத் தத்தத்தினையும்” (1 தீமோ.1:1) பற்றிக் கொள்வாள்.

பாட்டியும் தாத்தாவும் இல்லாதவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதையும் காணமுடிகின்றது. தீமோத்தேயுவின் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பவுல் அவனை “பிரியமுள்ள குமாரன்” (வ.2) என்று குறிப்பிடுகின்றார். விசுவாசத்தைக் கொடுப்பதற்கு குடும்பம் இல்லாதவர்களுக்கு, பெற்றோரும் பாட்டிகளும் தாத்தாக்களுமாக இருந்து, அவர்களைப் பரிசுத்தமாக வாழ அழைக்கும் (வ.9) நபர்களையும் ஆலயத்தில் காண்கின்றோம். தேவன் நமக்கு ஈவாக கொடுத்துள்ள பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை (வ.7) நாம் அணைத்துக் கொள்வோம். உண்மையில் நாம் ஓர் அழகிய பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம்.

மீண்டும் துடி

2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க  நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக  முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.

நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம்,  ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?......தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).

நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை    இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.