வகை  |  odb

ஒரு ஆபத்தான மாற்றுப்பாதை

ஹேமா நினைத்தாள் “என்ன ஒரு வீணான நேரம்”. அவளுடைய காப்பீட்டு முகவர் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மற்றொரு சலிப்பான விற்பனைக் காரியம் என்று ஹேமாவுக்குத் தெரியும், அனால், அவளுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேச ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தாள்.

முகவரின் புருவங்கள் பச்சை குத்தப்பட்டிருக்கிறதை கவனித்த அவள், தயக்கத்துடன் ஏன் என்று கேட்டாள். அந்தப் பெண் இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பி இப்படி செய்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டாள். ஹேமாவின் கேள்வி, எப்போதும் வழக்கமாக பேசும் நிதியைப் பற்றிய பேச்சிலிருந்து ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையியிருந்தாலும், அதிர்ஷ்டம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி உரையாடவும், தான் ஏன் இயேசுவை சார்ந்து வாழ்கிறார் என்பதைப் பற்றி பேசவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்ந வீணான நேரம் ஒரு தெய்வீக நியமனமாய் மாறியது.

இயேசுவும் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் சென்றார். யூதேயதவிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணப்படும்போது, ஒரு யூதன் நினைத்துப் பார்க்க முடியாத காரியமான, ஒரு சமாரியப்பெண், மற்ற சமாரியர்களும் அவளை தவிர்த்த ஒரு விபச்சார பெண்ணிடம் பேசுவதற்தான மாற்றுப்பாதையை தெரிந்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய உரையாடல் அனேகரை இரட்சிப்புக்குள்ளாக  நடத்தும்படியாக முடிந்தது (யோவா. 4:1-26, 39-42.).

நீங்கள் பார்கக்கூட விரும்பாத ஒருவரை சந்திக்கிறீர்களா? நீங்கள் சாதாரணமாக தவிர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் மோதிக்கொண்டிருக்கிறீர்களா? “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்”  எப்போதும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் நாமக்கு நினைவுபடுத்துகிறது (2 தீமோ. 4:2). ஒரு ஆபத்தான மாற்றுப்பாதையைக் கருத்தில் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும். தேவன், அவரைக்குறித்துப் பேச ஒரு தெய்வீக வாய்ப்பை இன்றைக்குக் கொடுக்கலாம்!

சிக்கலுடன் சமாதானம் செய்தல்

நாங்கள் அதை கவனித்தப்போது கிட்டத்தட்ட வீட்டில் இருந்தோம் - எங்கள் காரின் வெப்பநிலை அளவின் ஊசி உயர்ந்துக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வந்த பிறகு என்ஜினை நிறுத்திவிட்டு வெளியே குதித்தேன். முன்பக்கத்திலிருந்து புகை எழும்பிக்கொண்டிருந்தது. ஒரு பொரித்த முட்டையைப்போல என்ஜின் வெப்பத்தினால் ‘ஸ்’ என்ற ஒலி உண்டாக்கிக்கொண்டிருந்தது. நான் காரை சில அடிகள் உயர்த்தி பார்த்த போது அடியில் குட்டை (சகதி) இருந்ததைக் கண்டேன். உடனடியாக என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கிருந்த கேஸ்கெட் தூக்கி வீசப்பட்டிருந்தது.

நான் புலம்பினேன். நாங்கள் மற்ற விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு பணத்தை செலவு செய்துள்ளோம்.

ஏன் காரியங்கள் சரியாக வேலை செய்வதில்லை?  நான் மிகவும் கசப்புடன் முணுமுணுத்தேன். பொருட்கள் உடைவது  ஏன் நிறுத்தப்படவில்லை?

நீங்கள் தொடர்புபடுத்த முடியுமா? சில நேரங்களில் நாம் ஒரு  நெருக்கடியைத்  தவிர்க்கிறோம், ஒரு பிரச்சனையைத் தீர்க்கிறோம், ஒரு பெரிய ரசீதுக்காக பணம் செலுத்துகிறோம் - ஆனால் இன்னொரு பிரச்சனையை சந்திக்கிறோம். சில நேரங்களில் சிக்கல்கள் இயந்திரத்தை அழிப்பதை விட மிகப் பெரியவை : எதிர்பாராத நோயறிதல், அகால மரணம், ஒரு பயங்கரமான இழப்பு.

அப்படிப்பட்;ட தருணங்களில், நாம் குறைவாய் உடைக்கப்பட்ட மற்றும் குறைந்த சிக்கலான உலகத்திற்காக ஏங்குகிறோம். இயேசு வாக்குப்பண்ணின உலகம் வருகிறது.  ஆனால் இன்னும் இல்லை : “உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு” யோவான் 16ம் அதிகாரத்திலே இயேசு தம்முடைய சீ ஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். “ஆனாலும் திடன் கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுதல் போன்ற கடுமையான பிரச்சனைகளைக் குறித்து இந்த அதிகாரத்தில் இயேசு பேசியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனை அவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் கடைசியானதாயிருக்காது என்று அவர் கற்பித்தார்.

சிக்கல்கள் சிறிதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மை சோர்வில் கொண்டு செல்லும். ஆனால், அவருடன்  இருக்கும்போது ஓர நல்ல நாளையை நமக்கு கொடுக்கும் இயேசுவின் வாக்கால், நம்முடைய சிக்கல்கள் நம்மை ஒருபோதும் கீழே தள்ளிவிடாது என்று ஊக்குவிக்கப்படுகிறோம்.

வதந்திகளை நிறுத்துதல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள புனித திருத்துவ தேவாலயத்தில் ஊழியராக சார்ல்ஸ் சிமியோன் நியமிக்கப்பட்ட போது அநேக ஆண்டுகள் அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. சிமியோனுக்கு பதிலாக இணை ஊழியர் நியமிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான சபையினர் விரும்பியதால் அவரைக் குறித்து வதந்திகளைப் பரப்பி அவருடைய ஊழியத்தை நிராகரித்தனர் - மட்டுமல்லாமல் சில நேரங்களில் அவதை ஆலயத்திற்கு வெளியே விட்டு பூட்டினர். ஆனால் தேவனின் ஆவியால் நிரம்பப்பட விரும்பிய சிமியோன், வாழ்வதற்கு சில கொள்கைகளை உருவாக்கி கொண்டு வதந்திகளை சமாளிக்க முயன்றார். “ஒருவர், வதந்திகள் முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டால், நம்பக்கூடாது. மறுபக்கத்தை கேட்டால் வதந்திகளின் வித்தியாசமான விஷயங்களை கேட்க நேரிடும்”.

இந்தச் சூழ்நிலையில், சிமியோன் “வதந்திகளும், தீங்கிழைக்கும் பேச்சுக்களும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்த முடியாது. இப்படிப்பட்டவைகளை பேசக்கூடாது” என்று தேவன் தம்முடைய மக்களுக்கு கொடுத்த கட்டளையைப் பின்பற்றினார். தேவனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது : “பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:16). “அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக (யாத். 23:1) என்று  யத்திராகமத்தில் மற்றொரு கட்டளை இதை வலுப்படுத்துகிறது.

நாம் ஒவ்வொருவரும் வதந்திகளையும் தவறான அறிக்கைகளையும் பரப்பாவிட்டாலும், அவைகளைக் கேட்ட அந்த கணத்திலே அவைகளை நிறுத்தியிருந்தால் இந்த உலகம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் அன்பினால் உண்மையைப் பேசி தேவனுக்கு மகிமையுண்டாக நம்முடைய வார்த்தைகளை உபயோகிக்க பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவோமாக.

கவனத்துடன்.

எழுத்தாளரான மார்க் ட்வைன் நம் வாழ்க்கையில் எதைப் பார்க்கிறோம் – எப்படி பார்க்கிறோம் - என்பது நம்முடைய அடுத்த அடியில் செய்வதில் மட்டுமல்ல நம்முடைய விதியைக் கூட பாதிக்கும் என்று பரிந்துரைக்கிறார். “உங்களுடைய கற்பனை உங்கள் கவனத்திற்கு அப்பாற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் கண்களை சார்ந்திருக்க முடியாது” என்று ட்வைன் கூறுகிறார்.

பேதுருவும், யோவானும், நாடோறும் அலங்கார வாசலில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சப்பாணியை சந்தித்த போது பார்வையைக் குறித்து பேதுரு பேசினார் (அப். 3:2). அந்த மனிதன் அவர்களிடம் பிச்சை கேட்டபோது பேதுருவும் யோவானும் அந்த மனிதனை உற்றுப்பார்த்து “எங்களை நோக்கிப்பார்” (வச. 4)என்றார்கள். 

அவர் ஏன் அதைச் சொன்னார்? கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் பேதுரு அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய சொந்த வரம்புகளையும், அவனுடைய பணத்தேவைகளையும் பார்ப்பதை நிறுத்த வேண்டுமென்று விரும்பினார். அந்தப் பிச்சைக்காரன் அப்போஸ்தலரைப் பார்த்தபோது தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதின் உண்மையைக் கண்டார்.

பேதுரு அவனைப் பார்த்து “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ எழுந்து நட” என்று சொல்லி “வலது கையினால் அவனைப் பிடித்து தூக்கி விட்டான். உடனே அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்து தேவனைத் துதித்தான்” (வச. 7-8).

என்ன நடந்தது ? அந்த மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தான் (வச. 16).  சுவிசேஷகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் “உங்களுடைய கண்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கட்டும்” என்று வலியுறுத்தினார். இப்படி செய்யும் போது நாம் தடைகளைப் பார்ப்பதில்லை. நம்முடைய வழிகளைச் செவ்வைப்படுத்தும் தேவனையே நாம் பார்க்கிறோம்.