
வெள்ளம் வந்த போது
அமெரிக்காவில் மேற்கத்திய மாநிலமான நான் வசிக்கும் கொலராடோ பாறைகளால் ஆன மலைகளுக்கும் வருடாந்திர பனிப்பொழிவுக்கும் பிரசித்தி பெற்றது. எனினும் எங்கள் மாநிலத்தில் ஏற்படும் மோசமான இயற்கை பேரழிவு பணியினால் அல்ல, மழையினால் ஏற்படுவது. ஜூலை31, 1976ல் அன்று உல்லாசபோக்கிடமான எஸ்டஸ் பார்க்கில் பெரிய தோம்ப்ஸன் (Big Thompson) என்ற வெள்ளம் வந்தது. கால்நடைகளை சேர்க்காமல் 144 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது. இந்த பேரழிவை தொடர்ந்து சாலைகளும் நெடுஞ்சாலைகளின் அடித்தளங்களை பற்றிய ஆய்வுகள் நடைபெற்றன. பாதிக்கப்படாத இடங்களின் சுவர்கள் கான்கிரீட்டினால் கட்டப்பட்டிருந்தது. அதாவது உறுதியான வலிமையான அடித்தளம் இருந்தது.
நம் வாழ்வின் முக்கியமான கேள்வி வெள்ளம் வருமா என்பதல்ல, எப்பொழுது வரும் என்பது தான். சிலசமயங்களில் நாம்முன்னெச்சரிக்கை பண்ணபடுகிறோம். ஆனால் அநேக நேரத்தில் நாம் அறியாமல் இருக்கும்போது நாம் தாக்கப்படுகிறோம். இயேசு இதை குறித்து ஒருவன் தன் வார்த்தைகளை கேட்பதினால் மாத்திரமல்ல சுவிசேஷத்தின்படி வாழ்வதினாலும் நம் அடித்தளமானது உறுதியாக்கப்படுகிறது (லூக்கா 6:47). அந்த பயிற்சி முறையானது ஒரு விதத்தில் கான்க்ரீடை நம் வாழ்வில் ஊற்றுவதை போன்றது. நாம் உறுதியாக கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் வரும்போது நாம் அசைக்கப்படுவதில்லை. இந்த பயிற்சி இல்லை என்றால் நம் வாழ்க்கை சரிவுக்கும் அழிவுக்கும் சுலபமாக பாதிக்கக் கூடியதாக மாறிவிடும். முட்டாளாக செயல்படுவதற்கும் ஞானமாக செயல்படுவதற்கும் இதுவே வித்தியாசம். அவ்வப்போது நம்மை நாம் நிதானித்து அஸ்திபாரத்தை ஸ்திரப்படுத்துவது நல்லது. இயேசு நம் பலவீனமான பகுதிகளை ஸ்திரப்படுத்தி நம்மை வெள்ளம் மேற்கொள்ளாத படி நம்மை பலப்படுத்துவாராக.

அறியப்படாத நீரோட்டம்
நள்ளிரவு மணி சரியாக 12 அடிக்கும்போது, நியூயார்க் நகரத்தின் டைம் ஸ்குவேர்-ல் மக்கள் கூடியிருப்பார்கள். லண்டனின் பிக்பென் மணிக்கூண்டில் மணியடிக்கும் போது கூடியிருக்கும் மக்களும் அதனோடு சேர்ந்து பின்னோக்கி எண்ணுவார்கள் (கவுண்ட் டவுன் ) சிட்னி துறைமுகம் வாணவேடிக்கைகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதத்தில் புதிய ஆண்டையும் அதனோடு சேர்ந்து வரும் ஊதிய துவக்கத்தையும் வரவேற்கிறது. புதிய நட்புகளும் புதிய வாய்ப்புகளும் கண்டுபிடிக்கும்படியாக புத்தாண்டின் முதல் நாளில் நாம் புதிய நீரோட்டத்திற்குள் கடந்து செல்கிறோம்.
புத்தாண்டு எவ்வளவு விசேஷமாக இருந்தாலும் நமக்கு வரும் நாட்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எப்படிப்பட்ட புயல்களை நாம்கடந்து போக போகிறோம் என்று நமக்கு தெரியாது. வாணவேடிக்கைகள் சீனாவில் அசுத்த ஆவிகளை துரத்தி அந்த காலத்தை செழிப்பாக மாற்றுவதற்கு கண்டுபிடிக்கப்பட்டவை என்பது புத்தாண்டுகளை பற்றிய ஒரு சீன மரபு.
பாபிலோனில் பழங்காலத்து பழக்கவழக்கமாக புத்தாண்டு பிறக்கும்போது தங்கள் தேவர்களுடன் சமாதானம் படுத்துவதற்கு புது தீர்மானங்கள் எடுக்கப்படும். இப்படியாக தங்கள் முன் வரும் எதிராக்காலத்தை பாதுகாக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.
தங்கள் தேவர்களுக்கு சத்தியங்கள் செய்யாத நேரத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரவேலர் முதற்கொண்டு மற்ற தேசங்களையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தேவனுடைய வார்த்தை அடிமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்கு வந்தது: “பயப்படாதே… நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:1-2). இதே போன்றுதான் புயலில் மாட்டிக்கொண்ட சீஷர்களை பார்த்து “ஏன் பயப்படுகிறீர்கள்” என்றார் இயேசு (மத்தேயு 8:23-27).
இதே போன்று இன்றும் அறியப்படாத நீரோட்டத்திற்குள்ளாக தள்ளப்படலாம்.ஆனால் எப்பேர்ப்பட்ட அலைகளையும் அமர்த்த அதிகாரம் கொண்ட தேவன் எப்பொழுதும் நம் பக்கத்தில் இருக்கிறார்.

வாழ்க்கையின் வெடிகள்
புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். 'ரிப்பீட்டர்ஸ்" அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.
தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் - இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.
இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.
இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் 'இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்" (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். 'அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).
ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.

உண்மையான வெற்றி
என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.
'நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்" என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்" என்று அவர் முணுமுணுத்தார்.
எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் - அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.
அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.
தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் - நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.
