வகை  |  odb

காலையை போல வாழ்

நான் பல வேறுபட்ட நேரமுடைய பகுதிகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது, ​​விண்பயண களைப்பை தவிர்க்க பல்வேறு தீர்வுகளை முயற்சித்திருக்கிறேன். நான் அவை அனைத்தையும் முயற்சித்தேன் என்று நினைக்கிறேன்! ஒரு சந்தர்ப்பத்தில், நான் பயணிக்கும் நேர மண்டல பகுதிக்கு ஏற்றவாறு எனது விமானப் பயணத்தின் உணவை உண்ணுவதன் மூலம் சரிசெய்ய முடிவு செய்தேன். உடன் பயணிக்கும் பயணிகளுடன் இரவு உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, நான் ஒரு படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்து உறங்க முயற்சித்தேன். நான் தேர்ந்தெடுத்த அந்த உண்ணாமலிருந்த நேரம் கடினமாக இருந்தது, நாங்கள் தரையிறங்குவதற்கு முன்பே வந்த காலை உணவு மிகவும் விரும்பத்தக்கதாக இருந்தது. ஆனால் என்னுடன் இருந்தவர்களுடன் "பலவீனப்பட்டது" பயனளித்தது. இது எனது உடல் கடிகாரத்தை ஒரு புதிய நேர மண்டலத்திற்குள் செல்ல அதுவே உந்தியது.

இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே அவரை பிரதிபலிக்க வேண்டுமென்றால், அவர்களை சுற்றியுள்ள உலகத்தை விடுத்து வாழ வேண்டும் என்பதை பவுல் அறிந்திருந்தார். அவர்கள் “ஒரு காலத்தில் அந்தகாரமாயிருந்தார்கள்” ஆனால் இப்போது அவர்கள் “ஒளியின் பிள்ளைகளாக” வாழ வேண்டியிருந்தது (எபேசியர் 5: 8). அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? பவுல்அந்த உருவகத்தை இவ்வாறு நிரப்புகிறார்: "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." (வச.. 9).

இரவு உணவு வேளை முழுதும் நான் தூங்கியது என்னுடன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு முட்டாள்தனமாய் தோன்றி இருக்கலாம், ஆனால் உலகத்திற்கு நள்ளிரவாய் இருந்தாலும், விசுவாசிகளாக, காலையை போல வாழ அழைக்கப்படுகிறோம்.  இது இகழ்ச்சி மற்றும் எதிர்ப்பைத் தூண்டக்கூடும், ஆனால் இயேசுவின் மூலம் நாம் "அன்பின் வழியில் நடக்க" முடியும், "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, அதை உதாரணமாகக் கொண்டு நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்."(வச.. 2).

விசுவாசத்தின் சர்க்கரைப் பூச்சு

கையோடு கைகோர்த்து, என் பேரனும் நானும் பிறந்தநாளுக்காக ஒரு சிறந்த ஆடையை வாங்க வாகன நிறுத்துமிடத்தைத் கடந்து சென்றோம். இப்போதுஒரு பள்ளி பாலனாகிய அவன் எல்லாவற்றையும் குறித்து உற்சாகமாக இருந்தான், அவனுடைய மகிழ்ச்சியை இன்னும் ஆனந்தமாக்க வேண்டுமென்று தீர்மனித்திருந்தேன். ஒரு காபி குவளையின் மீது இப்படியாக அச்சிடப்பட்டிருந்தது, "பாட்டி அதிக சர்க்கரைப்பூச்சு  கொண்ட அம்மாக்கள்." சர்க்க்கரப்பூச்சு என்றால் வேடிக்கை, பளபளப்பு, மகிழ்ச்சிக்கு சமம்! அவனது பாட்டியாக நான் அவனுக்காக செய்யும் பணியின் விளக்கம், சரிதானே? அதுவும் . . . அதற்கு மேலும்.

தனது ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், பவுல் தனது நேர்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார், அதனோடு அதன் தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாள் மற்றும் அவரது தாயார் ஐனிக்கேயாள் (2 தீமோத்தேயு 1: 5) ஆகியர்வர்களைகொண்ட அவரது பரம்பரையை பாராட்டினார். இந்த பெண்கள் விசுவாசத்தில் வாழ்ந்த இவ்வழியில் தீமோத்தேயுவும் இயேசுவை விசுவாசிக்கும்படி வந்தார். நிச்சயமாகவே, லோவிசாளும் ஐனிக்கேயாளும்  தீமோத்தேயுவை அதிகமாக நேசித்தார்கள், அவருடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தனர். ஆனால் உண்மையாகவே, அவர்கள் இன்னும் அதிகமாக செய்தார்கள். இவர்கள் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்தை பிற்காலத்தில் தீமோத்தேயு தம் வாழ்வில் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்திற்கு ஆதாரமாக பவுல் குறிப்பிடுகிறார்.

ஒரு பாட்டியாக பிறந்தநாள் ஆடைக்கான எனது பணி இந்த  “சர்க்கரைப்பூச்சு” தருணத்தை உள்ளடக்கியதாகும் . ஆனால் அதற்கும் மேலாக, நான் என் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அது இன்னும் சர்க்கரைப்பூச்சு நிலை தருணங்களாக மாறுகிறது: கோழி பிரியாணி-க்கு முன் தலை குனிந்து பிராதிப்பது . வானத்தில் தேவதூதர் போன்ற மேக அமைப்பு தோன்றுவது தேவனின் கலைப் படைப்புகளாகும். தொலைக்காட்சியில் காட்டப்படும் இயேசுவை பற்றிய பாடலை கிண்டல் செய்வது. நம் விசுவாசம் வாழ்க்கையில் சர்க்கரைப்பூச்சாக மாற அம்மாக்கள் மற்றும் யூனிஸ் மற்றும் லோயிஸ் போன்ற பாட்டிகளின் உதாரணத்தால் நாம் கவரப்படுவோமாக, அதனால் நம்மிடம் உள்ளதை மற்றவர்களும் பெற விரும்புவார்கள்.

எளியோருக்கு உதவுதல்

அவர் பெயர் ஸ்பென்சர். ஆனால் எல்லோரும் அவரை "ஸ்பென்ஸ்" என்று அழைக்கிறார்கள். அவர் உயர்நிலைப் பள்ளியில் மாநில தடகள சாம்பியனாக இருந்தார்; பின்னர் அவர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் படித்தார். அவர் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில் வசித்து வருகிறார், மேலும் ரசாயன பொறியியல் துறையில் மிகவும் மதிக்கப்படும் நபராக  இருக்கிறார். ஆனால் இன்றுவரை ஸ்பென்ஸின் மிகப்பெரிய சாதனைகளை என்றூ நீங்கள் அவரிடம் கேட்டால், அவர் மேற்கண்ட விஷயங்களில் எதையும் குறிப்பிட மாட்டார். சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் தேவை மிகுந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணங்கள் மூலம்  நாட்ட்டின் வறுமை நிறைந்த பகுதிகளில் தான் நிறுவுவதற்கு உதவிய பயிற்சி திட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க உற்சாகமாக கூறுவார். அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவரது வாழ்க்கை எவ்வளவு வளமானதாக இருந்தது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்லுவார்.

"இவர்களில் மிக சிறியவர்கள்." இந்த சொற்றொடரை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவர், எனினும்,, உலக வழக்கத்தின்படி, நமது சேவைக்கு கைம்மாறாக  நமக்கு வழங்குவதற்கு சொற்பமாக வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றும் இல்லாதவர்களை விவரிக்க இயேசு இதைப் பயன்படுத்தினார். அவர்கள் உலத்தால்  பெரும்பாலும் கவனிக்கப்படாத - முற்றிலும் மறக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆயினும்கூட, "நீங்கள் [அவர்களுக்காக] எதை செய்தாலும், எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25:40) என்று சொல்வதன் மூலம் அவர்களை இயேசு அத்தகைய சிறந்த நிலைக்கு அந்த மக்களை உயர்த்துகிறார். இந்த “சிறியவர்களுக்கு” உதவி செய்வது கிறிஸ்துவுக்கு  சேவை செய்வதற்கு சமம்: என்று கிறிஸ்து சொல்லும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டியதில்லை. இதை உண்மையில் எற்றுக்கொள்ள விருப்பமுள்ள இதயம் மட்டுமே போதும்.

நேர்த்தியற்ற திட்டங்கள்

ஒரு புதிய சமூக மையத்தின் கீழ் தளத்தில் ஒரு நூலகத்தை நான் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ​​மேலிருந்து ஒரு சப்தம் திடீரென அந்த அறையை அதிரச் செய்தது. சில நிமிடங்கள் கழித்து அது மீண்டும் நடந்தது,. இறுதியில் எரிச்சலடைந்த ஒரு நூலகர், நூலகத்திற்கு நேராக மேல் பகுதியில் ஒரு பளு தூக்கும் பகுதி அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கினார், ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் எடையைக் கீழே வைக்கும் போதெல்லாம் சத்தம் ஏற்பட்டது. கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இந்த அதிநவீன வசதியின் பல அம்சங்களை கவனமாக திட்டமிட்டிருந்தனர், எனினும் யாரோ ஒருவர் நூலகத்தை இந்த செயல்பாடுகள் உள்ள இடத்திலிருந்து வேறு இடதிற்கு மாற்ற மறந்துவிட்டார்.

வாழ்க்கையிலும், நமது திட்டங்கள் பெரும்பாலும் குறைபாடுள்ளதாக இருக்கிறது. முக்கியமான கருத்தாய்வுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.  நம் திட்டங்கள் விபத்துகளும் அல்லது எதிர்பாராத  சூழ்நிலைகளிலும் எப்போதும் கைகொடுப்பதில்லை. நிதி குறைபாடுகள், நேர நெருக்கடிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றைத் தவிர்க்க திட்டமிடுவது நமக்கு உதவுகிறது என்றாலும், மிக சிறப்பான  உத்திகள் கூட நம் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்சனைளையும் அகற்ற முடியாது. நாம் ஏதேனுக்குப் பிந்தைய உலகில் வாழ்கிறோம்.

தேவனின் உதவியுடன், எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர் கொள்வதற்கும் (நீதிமொழிகள் 6: 6–8) சிரமங்களை கையாள்வதற்கும் இடையே உள்ள சமநிலையையும் நாம் காணலாம். பெரும்பாலும் தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கும் கஷ்டங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நம்மிடம் பொறுமையை வளர்க்கவோ, நம்முடைய விசுவாசம் பெருகவோ அல்லது நம்மை அவரண்டையில் நெருங்கி சேரவும் அதை அனுமதிக்கலாம்.  வேதம் நமக்கு நினைவூட்டுகிறது, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.” (நீதிமொழிகள் 19:21).  நம்முடைய இலக்குகளையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் நாம் இயேசுவிடம் அர்ப்பணிக்கும்போது, நம்மிடத்திலும், நம் மூலமாகவும் என்ன செய்து முடிக்க விரும்புவதை அவர் நமக்குக் காண்பிப்பார்.