வகை  |  odb

வனாந்தரத்தில் கேள்விகள்

ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்ப்பதற்கு எங்கள் குடும்பம் ஆவலாக இருந்தது. அங்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டதே என்று எண்ணியபடியே, இரண்டு உள்ளூர் மனிதர்களுடன் உரையாடினோம். அவர்களில் ஒருவர், “ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?” என்று கேட்டார். அங்குத் தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் தழுவிக்கொண்டோம்.

தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, "தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்" (வ.26) தான் பயணிப்பதைக் கண்டுகொண்டார். செல்லும் வழியில், அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார் (வ.27). இந்த நபர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, "அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் (ள)" பிலிப்பு ஏவப்பட்டார் (வ.29). எனவே பிலிப்பு இரதத்திடம் ஓடியபோது, அவர் "ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்" (வ.30) கேட்டார். அந்த மந்திரி பிலிப்பிடம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று கேட்டார் (வ.34). இந்தக் கேள்வியில் தொடங்கி, பிலிப்புக்கு இயேசுவைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது (வ.35). பலர் சத்தியத்தைத் தேடுகிறார்கள், இயேசுவைப் பற்றி யாராகிலும் சொல்லும்படி காத்திருக்கிறார்கள். தேவனின் வழிகாட்டுதலுடன், வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேசலாம்: வேலையில், உடற்பயிற்சி கூடத்தில், உணவகத்தில், பள்ளியில் அல்லது பயணத்தில் என்று எங்குமே. இயேசுவைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும் கேள்வியை ஒருவர் எப்போது கேட்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பவுல் சொல்வது போல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்" (கொலோசெயர் 4:6) இருக்கவேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுத்தால், தேவன் தம் அன்பை உங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும். வனாந்தரத்தில் கேள்விகள் எழும்போது மக்கள் அணுகக்கூடிய நபராக இருங்கள்.

சுவா்கள் மீது தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இந்த போதகா் குடும்பத்திற்குத் தெரியாது. இக்கூட்டம் ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

தேவனிடம் சரணடைதல்

ஒரு பண்ணை வீட்டில் பிறந்த ஜட்சன் வான் டிவென்டர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், ஓவியக் கலை பயின்று, ஒரு கலை ஆசிரியரானார். ஆனால், தேவன் அவருக்கு வைத்திருந்த திட்டம் வேறாயிருந்தது. திருச்சபையில் அவரது பனியின் அருமை அறிந்த நண்பர்கள் அவரை சுவிசேஷ பணிசெய்ய உற்சாகப்படுத்தினர். ஜட்சனும் தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார், ஆனால் ஓவிய பணிக்கான ஈடுபாட்டை விடுவது கடினமாக இருந்தது. அவர் தேவனோடு போராடினார். இறுதியில் அவர், “என் வாழ்க்கையின் முக்கியமான நேரம் வந்தது, நான் அனைத்தையும் தேவனிடம் ஒப்படைத்தேன்” என எழுதினார்.

தேவன் ஆபிரகாமை தன் மகன் ஈசாக்கை பலியாக அர்ப்பணிக்க அழைத்தபோது அவர் மனம் பட்டபாடுகளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. “அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்” (ஆதியாகமம் 22:2). தேவன் நம்மைப் பலியிட அழைக்கும் விலைமதிப்பற்ற பொருள் எது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்? தேவன் இறுதியில் ஈசாக்கைக் காப்பாற்றினார் என நாம் அறிவோம் (வ.12). ஆனால் நோக்கம் நிறைவேறிற்று: “தனக்கு மிகவும் விலைமதிப்புள்ளதை ஆபிரகாம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தார்”. மிகவும் கடினமான அழைப்பின் மத்தியில் தேவன் வழங்குவார் என்று அவர் நம்பினார்.

தேவன் மீது அன்பு கூறுகிறோம் என்கிற நாம், நமக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? சுவிசேஷ பணிக்காகத் தேவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜட்சன் வான் டிவென்டர் பின்னர் “இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்” என்ற அற்புதமான பாடலை எழுதினார். பிற்காலத்தில், தேவன் ஜட்சனை மீண்டும் ஆசிரியரான பணியாற்ற வாய்ப்பளித்தார். அவரது மாணவர்களில் ஒருவர்தான் இளம் பில்லி கிரஹாம்.

நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் நாம் கற்பனை செய்ய முடியாத நோக்கங்களைக் கொண்டுள்ளது. நமக்குப் பிரியமானதைக் கொடுக்க நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். நாம் செய்யக்கூடியது இது தான் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய ஒரே மகனைப் பலியிட்டார்.