
உயிர்ப்பிக்கும் கடிந்துகொள்ளுதல்
“எதிர்பாராதவிதமாக, நாங்கள் சமீபத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்” என்று ஷ்ரேயா கூறினாள். “அதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை; ஆனாலும், அவளைச் சுற்றியிருப்பவர்கள் அவளுடைய மனோபாவங்களினாளும், செய்கைகளினாலும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன். அந்தப் பெண், ஷ்ரேயா ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபப் பெண் தான். ஆரம்பத்தில் அவர்களுடைய உரையாடல், சற்று விகற்பமாய் தோன்றினாலும், அது நன்மையாகவும் அவர்களின் உறவை பலப்படுத்தும் விதத்திலும் அமைந்தது. சில வாரங்கள் கழித்து, அவர்கள் இருவரும் சேர்ந்து, மனத்தாழ்மை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சபைகளுக்கிடையேயான ஒரு ஜெப நேரத்தை நடத்தினார்கள்.
ஆலோசனை ஊழியங்களல்லாமல், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குள் கடினமான உரையாடலில் ஈடுபடுகிறோம். காலத்திற்க்கப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கும் நீதிமொழிகள் புத்தகம், கடிந்துகொள்ளுதலை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்கும் அவசியமான தாழ்மையைக் குறித்து அடிக்கடி எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான கடிந்துகொள்ளுதலை, “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதல்” என்றும், அது மெய்யான ஞானத்திற்கு வழிநடத்துகிறது என்றும் அறிவிக்கிறது (நீதிமொழிகள் 15:31). நீதிமொழிகள் 15:5, மூடன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி என்கிறது. கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் (வச. 10) என்று வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாவின் வாழ்க்கையில் நடந்ததுபோல, அன்பினிமித்தம் நிகழ்ந்த கடிந்துகொள்ளுதல் ஒரு புதிய உறவை துவக்கியது.
உங்களுடைய வாழ்க்கையில், உங்களுடைய அன்பான வார்த்தைகள் மற்றும் திருத்தம் தேவைப்படும் நபர் யாரேனும் இருக்கிறார்களா? அல்லது சமீபத்தில் உங்களிடத்தில் அன்பாய் கடிந்துகொண்டவர்களிடம் நீங்கள் கோபமாகவோ அல்லது வித்தியாசமாகவோ நடந்துகொண்டீர்களா? புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (வச. 32). மற்றவர்களை அன்பாய்க் கடிந்துகொள்ளவும், அதே அன்போடு நம்மைக் கடிந்துகொள்கிறவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவனிடத்தில் உதவி கேட்போம்.

இதில் ஒன்றுசேருவோம்
கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், கெல்லி, மூளைப் புற்றுநோயினால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய இருதயம் மற்றும் நுரையீரலைச் சுற்றிலும் நீர் அதிகரித்ததால், அவள் தன் மருத்துவ சிகிச்சையை அங்கேயே தொடர வேண்டியிருந்தது. தொற்று வெகுவாய்ப் பரவியதால், அவளுடைய குடும்பத்தார் அவளைச் சென்று பார்க்க முடியவில்லை. அவளுடைய கணவர் டேவ், ஒரு காரியத்தைச் செய்யப் போவதாக உறுதியளித்தார்.
தனக்கு நெருக்கமானவர்களை அழைப்பித்து, செய்திகளைப் பிரதிபலிக்கும் பெரிய அடையாளப் பலகைகளை உண்டாக்கும்படிக்கு கேட்டுக்கொண்டார். அவர்களும் செய்தனர். இருபதுபேர் முகக்கவசங்கள் அணிந்து, மருத்துவமனைக்கு வெளியேயிருக்கும் சாலையில் “சிறந்த அம்மா!” “நாங்கள் உம்மை நேசிக்கிறோம்,” “நாங்கள் உங்களோடிருக்கிறோம்” என்று எழுதப்பட்ட பலகையை உயர்த்திப் பிடித்தவர்களாய் அணிவகுத்தனர். செவிலியரின் உதவியோடு, நான்காவது மாடியிலிருந்து கெல்லி அதைப் பார்வையிட்டாள். அங்கிருந்து அவள், முகக்கவசங்களையும் அசையும் கைகளையுமே பார்க்க முடிந்தது. அவளுடைய கணவன் சமூக ஊடகத்தில், “அது அழகான முகக்கவசம் மற்றும் கையசைப்பு” என்று பதிவிட்டார்.
பவுல் அப்போஸ்தலரும் தன்னுடைய கடைசி நாட்களில், ரோம சிறையில் தனிமையில் வாடினார். அவர் தீமோத்தேயுக்கு எழுதும்போது, “மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு” (2 தீமோ. 4:21) என்று எழுதினார். ஆனால் பவுல் முற்றிலும் தனிமையில் இல்லை. “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று… என்னைப் பலப்படுத்தினார்” (வச. 17) என்றார். மேலும் அவருடன் இருந்த மற்ற விசுவாசிகள் அவரை உற்சாகப்படுத்தினர் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் தீமோத்தேயுவிடம், “ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” (வச. 21) என்கிறார்.
நாம் சமுதாயமாய் செயல்படவே படைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய இக்கட்டான தருணங்களிலேயே அதை உணருகிறோம். இன்று முற்றிலும் தனிமையாய் உணர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்?

“உங்களுக்கு சொந்தமாக்குங்கள்!"
ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.
நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென சொந்தமாக்கிக்கொள்ள" அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.
நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து," வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (வச. 12).
இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக" (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.

சூரிய ஒளி வட்டம்
அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது.
சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது.
அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு - இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).
“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி, நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.
