வகை  |  odb

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

மிக அழகான

என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகாமையில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம். 

தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதினால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8). 

தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள். 

ஆசீர்வாதமான மனந்திரும்புதல்

கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய இவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவரது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது. 

“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம்.