வகை  |  odb

விடாமுயற்சி பீட்சா

பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.   
இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது.  
இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார்.  
அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார்.  

தேவனால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டது

ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.  
அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார். 
நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத டெலாண்டைப் போல நாங்கள் திகைத்துப் போனோம். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார்.  
நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.  

ஓராண்டில் வேதாகமம்

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார்.  
அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4). 
பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார். 

குமாரனின் வெளிச்சத்தை பிரதிபலித்தல்

எனக்கும் என் அம்மாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பிறகு, என் வீட்டிற்கு வெளியே ஒரு சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்னை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த இடத்திற்கு நான் வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். என் கோபத்தில், நான் அவளுக்கு ஒரு குறிப்பு எழுதினேன். ஆனால் அன்பாக பதிலளிக்கும்படிக்கு தேவன் என்னை ஏவுவதை உணர்ந்த பிறகு நான் அதைத் திருத்தினேன். எனது திருத்தப்பட்ட செய்தியைப் படித்த பிறகு, அம்மா என்னை போனில் அழைத்தார். “நீ மாறிவிட்டாய்,” என்று சொன்னார். தேவன் என்னுடைய அந்த குறிப்பைப் பயன்படுத்தி, என் அம்மா இயேசுவைப் பற்றிக் கேள்விப்படவும், இறுதியில், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தார். 
மத்தேயு 5இல், இயேசு தம்முடைய சீஷர்கள் உலகத்தின் வெளிச்சம் என்று உறுதிப்படுத்துகிறார் (வச. 14). அவர், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (வச. 16) என்று சொல்லுகிறார். கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பு, பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெறுகிறோம். அவர் நம்மை மறுரூபமாக்குகிறார். அதனால் நாம் எங்கு சென்றாலும் தேவனின் மெய்யான அன்பின் பிரகாசமான சாட்சிகளாக இருக்க முடியும். 
பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம், நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல் மேலும் மேலும் மறுரூபமாகும் நம்பிக்கை மற்றும் அமைதியின் மகிழ்ச்சியான விளக்குகளாக இருக்க முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு நற்கிரியைகளும் நன்றியுடன் கூடிய ஆராதனையாக மாறும். அது மற்றவர்களை கவரக்கூடியதாகவும், துடிப்பான நம்பிக்கையை உணரக்கூடியதாகவும் அமையும். பரிசுத்த ஆவியானவரிடம் சரணடைந்தால், குமாரனாகிய இயேசுவின் ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் பிதாவை நாம் கனப்படுத்தக்கூடும்.