
இனி உன் பாவங்கள் நினைவுகொள்ளப்படாது
நான் பனியைப் பார்த்ததில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய தாத்தாவின் லாரியை வீட்டின் பின்புறமாக ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று வந்த அந்த வளைவு என்னை நிலைகுலையச் செய்து, பதினைந்து அடி சுவரை தகர்த்துக்கொண்டு, லாரியும் நானும் காற்றில் பறக்க ஆரம்பித்தோம். இந்த விபத்திலிருந்து தப்பித்து நான் உயிர்பிழைத்தால் நலமாயிருக்கும் என்று யோசித்தேன். சிறிது நேரம் கழித்து, லாரி செங்குத்தான சரிவில் நொறுங்கி கீழே உருண்டது. நொறுக்கப்பட்ட வண்டியிலிருந்து நான் காயமடையாமல் ஊர்ந்து வெளியே வந்தேன்.
டிசம்பர் 1992, காலை லாரி முற்றிலுமாக சேதத்திற்குள்ளாகி நொறுங்கியது. தேவன் என்னை சேதமின்றி பாதுகாத்தார். ஆனால் என் தாத்தா என்ன சொல்லப்போகிறார் என்று பயந்தேன். அவர் சேதமடைந்த லாரியைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னை அவர் திட்டவும் இல்லை. அதை பழுதுபார்ப்பது குறித்தோ என்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவும் இல்லை. முழுமையான மன்னிப்பு. மேலும் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லாதது குறித்து அவர் புன்னகைத்தார்.
என் தாத்தாவின் கிருபை எரேமியா 31-ல் உள்ள தேவனின் கிருபையை எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு அவர்களுடைய மிகப்பெரிய தோல்விகள் இருந்தபோதிலும், தேவன் தம் ஜனங்களுக்கு “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (வச. 34) என்று வாக்களிக்கிறார்.
நான் அவருடைய லாரியை உடைத்ததை என் தாத்தா ஒருபோதும் மறக்கமாட்டார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இங்கே தேவனைப் போல நடந்து கொண்டார். அதை நினைவில் கொள்ளவில்லை, என்னை அவமானப்படுத்தவில்லை, நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க என்னை வேலை செய்ய சொல்லுவும் இல்லை. தேவன் சொன்னதைப்போலவே, நான் செய்த அழிவு நடக்காதது போல், என் தாத்தா அதை இனி நினைவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை.

முகவரி அட்டையும் ஜெபமும்
சமீபத்தில் விதவையான பெண் ஒருவள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தாள். இன்ஷ_ரன்ஸ் பாலிசியில் இருந்து சில முக்கிய நிதிகளைச் சேகரிக்க, கணவரின் உயிரைப் பறித்த விபத்து பற்றிய முக்கிய தகவல்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவள் பேசினாள். ஆனால் அவள் அவருடைய முகவரி அட்டையை தொலைத்துவிட்டாள். அதனால் அவள் உதவிக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் தேவாலயத்தின் வெளிப்புறமாக நடந்துசென்றுகொண்டிருக்கையில் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றில் ஒரு முகவரி அட்டையைப் பார்த்தாள். ஆம், அவள் தொலைத்த அதே போலீஸ்காரரின் அட்டை. அது எப்படி அங்கு வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஏன் அங்கு வந்தது என்பது அவளுக்குத் தெரியும்.
அவள் ஜெபத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஏன் கூடாது? தேவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கிறார் என்று வேதம் கூறுகிறது. பேதுரு சொல்லும்போது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதல்களுக்குக் கவனமாயிருக்கிறது” (1 பேதுரு 3:12) என்று கூறுகிறார்.
ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார் என்பதற்கு வேதாகமம் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அதில் வியாதிப்பட்ட யூதேயாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் ஒருவர். அவர் மரித்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியே தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டார். ஆனால் ராஜாவே என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். “அவன் கர்த்தரை நோக்கி... விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜ. 20:2). உடனே தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச. 5) என்று அவனிடம் சொல்லும்படிக்கு சொன்னார். எசேக்கியாவுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுள் கூட்டப்பட்டது.
ஜன்னலில் அட்டை தென்பட்டதுபோல தேவன் எப்போதும் நமக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் கடினமான சூழ்நிலைகள் எழும்போது, அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தேவன் நம்மைப் பார்க்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார் - நம் ஜெபங்களைக் கேட்கிறார்.

இயேசுவை பற்றிக்கொள்
அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. படிக்கட்டுகள் சுழல்வது போல் தெரிந்ததால், நான் விரக்தியடைந்து, படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தேன். என் இதயம் துடித்ததும், என் கால்கள் தளர்ந்ததும், நான் அந்த படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டேன். அதன் வலிமைக்காய் நன்றிசெலுத்தினேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. அதன் விளைவு ஆபாயகரமானது இல்லை என்றாலும், அதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்றாலும், அன்று நான் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தேன் என்பதை என்னால் மறக்கவே முடியாது.
அதனால்தான் இயேசுவைத் தொட்ட பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவள் பலவீனமான நிலையில் கூட்டத்தினூடாக நகர்ந்தது மட்டுமல்லாமல், அவரை அணுகுவதற்கான முயற்சியில் நம்பிக்கையையும் காட்டினாள் (மத்தேயு 9:20-22). அவள் பயப்படுவதற்கு சரியான காரணம் இருந்தது. யூதச் சட்டம் அவளை தீட்டாகவும், அந்த தீட்டை அவள் வெளிப்படையாய் காண்பித்தால், அதின் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அவள் சந்திக்க நேரிடும் (லேவியராகமம் 15:25−27). ஆனால் நான் அவருடைய அங்கியைத் தொட்டால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு உறுதியாய் இருந்தது. மத்தேயு 9:21-ல் “தொடுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது வெறும் தொடுதல் அல்ல, மாறாக “ பற்றிப் பிடித்துக்கொள்வது” அல்லது “தன்னை இணைத்துக் கொள்வது” என்ற வலுவான பொருளைக் கொண்டுள்ளது. அந்தப் பெண் இயேசுவை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அவளை குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள்.
ஜனக்கூட்டத்தின் நடுவே, ஒரு பெண்ணின் மேலான விசுவாசத்தை இயேசு கண்டார். நாமும் விசுவாசத்தில் துணிந்து, நம்முடைய தேவையில் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை வரவேற்று, நமக்கு உதவிசெய்வார். நிராகரிப்பு அல்லது தண்டனைக்கு பயப்படாமல் நம் கதையை அவரிடம் சொல்லலாம். “என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசு இன்று நமக்குச் சொல்கிறார்.

அதிர்ஷ்ட காலணிகள்
மிகவும் தாமதமாக, டாம் தனது போர் காலணியின் அடியில் குளிர்ந்த உணர்வை அடைந்தார். பாய்ந்தோடிய அட்ரினலின் என்னும் எரிபொருளின் தாக்கத்திலிருந்து விலகிச்சென்றார். பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடிய வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 36 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கண்டெடுத்தனர். டாம் அவருடைய அந்த காலணி கிழியும் வரை அணிந்திருந்தார். அவர் அதை தன்னுடைய அதிருஷ்ட காலணி என்று சொல்லிக்கொள்கிறார்.
அவருடைய உயிரைக் காப்பதற்கு அந்த காலணி பயன்பட்டதினால் உணர்ச்சிவசப்பட்டு டாம் அந்த காலணிகளை அணிந்திருக்கலாம். ஆனால் பொருட்களை “அதிர்ஷ்டம்” என்று கருதுவதற்கு அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவைகள்” என்ற ஆன்மீக முத்திரையைக் கொடுக்க மக்கள் அடிக்கடி ஆசைப்படுகின்றனர். நாம் ஒரு பொருளையோ அல்லது அடையாளத்தையோ தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரமாக வைக்கும்போது அங்கே அபாயம் நிகழுகிறது.
இஸ்ரவேலர்கள் இந்த பாடத்தை தங்களுடைய வாழக்கையின் கடினமான தருணத்தில் கற்றுக்கொண்டனர். பெலிஸ்தியப் படை அவர்களை யுத்தத்தில் வீழ்த்தியது. ஏன் தோல்வியடைந்தோம் என்று யோசிக்கும்வேளையில், நாம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்செல்லலாம் என்று யாரோ ஒருவர் ஆலோசனை சொல்கின்றனர் (1 சாமுவேல் 4:3). அது நல்ல யோசனையாகத் தோன்றியது (வச. 6–9). எல்லாவற்றிற்கும் மேலாக, உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான ஒன்றாகக் கருதப்பட்டது.
ஆனால் இஸ்ரவேலர்களின் புரிதல் தவறானது. உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டு அவர்களால் எதையும் திருப்பிக்கொண்டுவரமுடியவில்லை. தங்களுடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதற்கு பதிலாக ஒரு பொருளின் மீது வைத்ததினால் யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெலிஸ்தர்கள் பேழையையும் கைப்பற்றி கொண்டுபோய்விட்டனர் (வச. 10-11).
தேவன் நம்முடைய வாழ்க்கையின் செய்த நன்மைகளை நினைப்பூட்டும் நினைவுச்சின்னங்கள் நமக்கு அவசியப்படலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக இருப்பதில்லை. தேவன் மாத்திரமே ஆசீர்வாதத்தின் ஆதாரம்.
