
கிறிஸ்து நம் மெய்யான ஒளி
“ஒளியை நோக்கி செல்வோம்!” ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானவேளையில் நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வழிதெரியாமல் நாங்கள் திகைத்தபோது. என்னுடைய கணவர் இப்படியாய் சொன்னார். நாங்கள் ஒரு சிநேகிதரைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு லிஃப்டில் இருந்து வெளியேறியபோது, அந்த வாரயிறுதி நாட்களில் நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு அந்த மங்கிய வெளிச்சத்தில் எங்களுக்கு வழிகாண்பிக்க யாரும் அங்கில்லை. எங்கள் குழப்பத்தைப் பார்த்த ஒரு மனிதரை இறுதியாக சந்தித்தோம். “இந்த நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால் வெளியே செல்லுவதற்கான வழி இதுவே” என்று அவர் கூறினார். அவரது வழிகாட்டுதலுடன், நாங்கள் வெளியேறும் கதவுகளைக் கண்டோம். பிரகாசமான சூரிய ஒளியை நாங்கள் வந்தடைந்தோம்.
குழப்பமடைந்த, அவிசுவாசிகளை அவர்களுடைய ஆவிக்குரிய இருளிலிருந்து தம்மைப் பின்பற்றும்படிக்கு இயேசு அழைத்தார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12). அவரது ஒளியில், தடுமாற்றங்கள், பாவம் ஆகியவைகள் தென்பட்டாலும், அவற்றை அகற்றும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அத்தகைய இருளை நம்முடைய வாழ்க்கையை விட்டு அவர் அகற்றுவார். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப்போல, கிறிஸ்துவின் ஒளி நமக்கு கடவுளின் பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டுவருகிறது.
யோவான் விளக்கியது போல், இயேசுவே “மெய்யான ஒளி" (யோவான் 1:9). “இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (வச. 5). வாழ்க்கையில் அலைந்து திரிவதற்குப் பதிலாக, நம்முடைய பாதையில் ஒளிகாட்டும் அவரைச் சார்ந்துகொள்வது சிறந்தது.

தோட்டத்தில்
என் அப்பா, கடவுளுடைய இயற்கையான படைப்புகளில் முகாமிடுதல், மீன்பிடித்தல் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை விரும்பினார். அவர் தனது தோட்டத்தையும் அதை செப்பனிடுவதிலும் அதிக மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அது பெரிய வேலையாக தெரிந்தது. அவர் கத்தரித்தல், மண்வெட்டி, விதைகள் அல்லது பூக்களை நடுதல், களைகளை இழுத்தல், புல்வெளியை வெட்டுதல் மற்றும் முற்றத்திலும் தோட்டத்திலும் தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றில் பல மணி நேரங்களை செலவுசெய்தார். அதன் பலம் மிகவும் நேர்த்தியாயிருந்தது: ஒரு நிலப்பரப்பு புல்வெளி, சுவையான தக்காளி மற்றும் அழகான ரோஜாக்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர் ரோஜாக்களை தரையில் நெருக்கமாக கத்தரித்து செப்பனிடுவார். அவைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வளர்ந்து அவற்றின் நறுமணத்தையும் அழகையும் பரப்புகின்றது.
ஆதியாகமத்தில், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்து, செழித்து, தேவனோடு நடந்த ஏதேன் தோட்டத்தைப் பற்றி வாசிக்கிறோம். அங்கு தேவன் “பார்வைக்கு இன்பமும் உணவுக்கு ஏற்றதுமான மரங்களை அனைத்து வகையான மரங்களையும் தரையில் இருந்து வளரச்செய்தார்” (ஆதியாகமம் 2:9). சரியான தோட்டத்தில் அழகான, இனிமையான மணம் கொண்ட பூக்களும் அடங்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். ஒருவேளை முட்களில்லாத ரோஜாக்கள் கூட அங்ஙனம் வளர்ந்திருக்கக்கூடும்.
ஆதாமும் ஏவாளும் தேவனை எதிர்த்து பாவம் செய்த பிறகு, அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, அவரவர் தோட்டங்களை அவர்களே பராமரிக்கும் படி கட்டளையிடப்பட்டது. அதாவது, நிலத்தை உழுது, முட்களோடு போராடி, பல சவால்களை எதிர்கொண்டு பராமரிப்பதாகும் (3:17-19, 23-24). ஆனாலும் தேவன் அவர்களுக்கு தொடர்ந்து தேவைகளை சந்தித்தார் (வச. 21). அவர் வசமாய் நம்மை ஈர்க்கும் அவருடைய இயற்கையின் அழகை மனிதனின் பார்வையினின்று விலக்கவில்லை (ரோமர் 1:20). தோட்டத்திலுள்ள பூக்கள், நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளமாய் திகழும் தேவனின் தொடர்ச்சியான அன்பையும், புதுப்பிக்கப்பட்ட படைப்பைப் பற்றிய வாக்குறுதியையும் நமக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கின்றன.

பட்டியலில் முதலாவதாக
காலை ஒரு தட சந்திப்பு போல் தொடங்கியது. நான் படுக்கையில் இருந்து எழுந்த மாத்திரத்தில், அன்றைய காலக்கெடுவினை செய்யத் துவங்கினேன். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்தல். பரிசோதி. வேலை செய். பரிசோதி. அன்று நான் செய்யவேண்டிய காரியங்களை எழுதி வைத்திருந்த தாளில் ஒன்றன்பின் ஒன்றாய் வேலைகளை செய்துமுடித்தேன்.
“ . . . 13. கட்டுரையைத் திருத்துதல் 14. அலுவலகத்தை சுத்தம்செய்தல் 15. மூலோபாய குழு திட்டமிடல் 16. தொழில்நுட்ப வலைப்பதிவை எழுதுதல் 17. அடித்தளத்தை சுத்தம்செய்தல் 18. ஜெபித்தல்.
நான் பதினெட்டாம் இடத்திற்கு வந்தபோது, எனக்கு தேவனின் உதவி தேவை என்பதை நினைவில் வைத்தேன். ஆனால் இதற்கு முன்பே என் சொந்த வேகத்தை உருவாக்க முயற்சிக்கிறேன் என்று எனக்குத் தோன்றுவதற்கு முன்பே நான் அதை உணர்ந்தேன்.
இயேசு அது தெரியும். நம் நாட்கள் ஒன்றோடு ஒன்று மோதி, இடைவிடாத அவசரக் கடலாக மாறும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் வார்த்தைகளை ஒரு கட்டளையாக கேட்பது இயற்கையானது. அவைகள் கட்டளைகளே. மத்தேயு 6இல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இவ்வுலகின் அதிகமான கவலையை (வச. 25-32) பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். தேவன் அவருடைய மாபெரும் கிருபையால், நம் எல்லா நாட்களிலும் நமக்கு உதவிசெய்கிறார். அவருடைய பார்வையில் வாழ்க்கையை நாம் பார்க்க அணுகுவதற்கு முன்பாக, பதினெட்டாம் இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

உன்னிடத்திலுள்ளதை கிறிஸ்துவுக்காய் பயன்படுத்து
2001 இல் நிறுவப்பட்ட “சூவிங் ஹால் ஆஃப் ஃபேம”; பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது “தையல் கல்வி மற்றும் தயாரிப்பு மேம்பாடு மூலம் தனித்துவமான மற்றும் புதுமையான பங்களிப்புகளுடன் வீட்டு தையல் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய” நபர்களை அங்கீகரிக்கிறது. 2005இல் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மார்த்தா புல்லென் போன்ற நபர்கள் இதில் உள்ளடங்குவர். அவள் “நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தின் குணசாலியான ஸ்திரீயாய் அங்கீகரிக்கப்பட்டவர்… அவளுடைய வலிமை, உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு யார் காரணம் என்பதை அவள் பகிரங்கமாய் சாட்சியிடத் தவறவில்லை.”
இந்த தையல் இயக்கமானது 21ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இந்த இயக்கமானது முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் தேசத்தில் இருந்துள்ளது. தபீத்தாள் என்னும் பேர்கொண்ட பெண் இந்த குணத்திற்கு பாத்திரவானாய் இருந்துள்ளாள். இவள் ஒரு கிறிஸ்துவின் விசுவாசி. தன்னுடைய சமுதாயத்தில் வாழ்ந்த ஏழை விதவைகளுக்கு அங்கிகளையும் வஸ்திரங்களையும் தைத்து உதவிசெய்துவந்தவள் (அப்போஸ்தலர் 9:36,39). அவள் வியாதிப்பட்டு மரித்தபின்பு, பேதுரு மூலமாய் அவளை உயிரோடு எழுப்பக்கூடுமோ என்று எண்ணி அவரை அழைத்துகொண்டுவந்தனர். அவர் வந்தபோது, அழுதுகொண்டிருந்த விதவைகள் தபீத்தாள் தைத்துக்கொடுத்த அங்கீகளையும் வஸ்திரங்களையும் அவரிடத்தில் காண்பித்தனர் (வச. 39). அவள் தன்னுடைய ஊரிலிருந்த மக்களுக்கு எப்போதும் உதவிசெய்தாள் என்பதற்கு இந்த வஸ்திரங்களே ஆதாரம் (வச. 36). தேவனுடைய வல்லமையினால் தபீத்தாள் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டாள்.
தேவன் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்தி நம்முடைய சமுதாயத்தையும் உலகத்தையும் கட்டியெழுப்பும் அழைப்பை நமக்கு அருளியிருக்கிறார். நாம் நம்முடைய திறமைகளை கிறிஸ்துவின் சேவைக்காய் அர்ப்பணிப்போம். அவர் நம்முடைய அன்பான இருதயத்தையும் ஜீவியத்தையும் எவ்வண்ணமாய் ஒன்றாக தைக்கிறார் என்பதை பார்ப்போம் (எபேசியர் 4:16).
