வகை  |  odb

பரீட்சயமான நீா்நிலை

தேவன் ஊக்குவிப்பதை உணர்ந்து, ஒரு எழுத்தாளராக ஊழியத்தில் அவரைப் பின்தொடர நான் ஒரு நிறுவன வேலையைத் துறந்தேன். இருப்பினும், நான் உடனடி விளைவுகளைப் பார்க்கவில்லை. மாற்றமாகிக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெளியீட்டாளர் என்னை நிராகரித்ததை போல எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முற்றிலும் ஏமாற்றமடைந்த நான், “தேவன் ஏன் என்னை அழைத்தார்?” என்றும் விட்டுவந்த வேலைக்கே திரும்பவும் எண்ணினேன். அப்போதுதான் அவர்களுக்கு எனது புத்தகத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியென்றும், நான் மேலும் அதனை எழுத வேண்டும் என்றும் மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அதுமுதற்கொண்டு, நான் கற்பனை செய்யாத வழிகளில் தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்.

என் பயணம் பேதுருவை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் தனது மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75). அவர் தன்னை குறித்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும் (வ.75). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஒருவேளை தன்னைத் திசைதிருப்பிக்கொள்ள, பேதுரு தனது சகாக்களுடன் மீண்டும் மீன்பிடிக்க பரீட்சயமான நீர்நிலைகளுக்குச் சென்றார் (யோவான் 21:3). விடிந்தபோது, அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை (வ.3). மாறாக, அவர்கள் கடற்கரையில் இயேசுவைக் கண்டார்கள் (வ.4). வலைகளை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறி, காலை உணவுக்கு வரும்படி அழைத்தார் (வ.6-13)). அவர் பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" (வ.15) என்று பேதுருவின் அழைப்பைப் புதுப்பித்தார்.

தேவன் நம்மை அழைக்கும்போது, காரியங்கள் உடனே வாய்க்காமல் போகலாம். நம்மை நாமே நொந்துகொண்டு, விளைவுகளைக் குறித்து சந்தேகம் கொள்ளலாம். ஆனால் தேவன் நம்மைப் பயிற்றுவிக்கவும் சுத்தம் பண்ணவும் அந்த காலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால் அவர் நம்மை தம் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும் (யோவான் 15:2). எனவே, பலன்களைக் காணாதபோது, பின்னிட்டு, பரீட்சயமான தண்ணீருக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, தேவனின் நேரத்தை நம்பி பொறுமையாகக் காத்திருப்போம்.

 

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!

எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளை தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!” என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்து அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.

இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்” என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார்.

சிந்தனையை தகா்க்கும் போதனை

சோபியா ராபர்ட்ஸ் தனது பதினொரு வயதில் முதன்முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையை நேரடியாகப் பாா்த்தாள். அத்தகைய மருத்துவ முறையைப் பார்க்க ஒரு குழந்தைக்கு இது சற்று இளமையாகத் தோன்றினாலும், அவளுடைய அப்பா டாக்டர். ஹெரால்ட் ராபர்ட்ஸ் ஜூனியர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில், முப்பது வயதான சோபியா, தற்போது அறுவை சிகிச்சை மருத்துவராய் தனது தந்தையுடன் இணைந்து வெற்றிகரமான பெருநாடி வால்வு மாற்ற அறுவை சிகிச்சையை வெற்றியாகச் செய்தார். ஹரோல்ட் கூறும்போது, “வேறென்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? நான் இந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்... இப்போது, ஒரு மனித இதயத்தை எவ்வாறு கையாளுவது என்பதை கற்றுக்கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யமாயிருக்கிறது” என்று சொல்லுகிறார்.

நம்மில் சிலர் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை திறன்களைக் கற்பிக்கலாம். சாலெமோன் அடுத்த தலைமுறைக்கு தேவனையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்த கற்றுக்கொடுக்கிறார். ஞானமுள்ள ராஜா, தேவனுடனான தனது உறவில் கற்றுக்கொண்டதை தன் குழந்தையுடன் உணர்ச்சிபொங்க பகிர்ந்துகொள்கிறார்: “என் மகனே... உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதிமொழிகள் 3:1,5), “கர்த்தருக்கு பயப்படு” (வச. 7), “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” (வச. 11). அவருடைய சிட்சையையும் வழிகாட்டுதலையும் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளும் தம்முடைய பிள்ளைகளில் தேவன் “அன்பு செய்கிறார்” மற்றும் “மகிழ்ச்சியடைகிறார்” என்பதை சாலெமோன் அறிந்திருந்தார் (வச. 12).

நம் அற்புதமான, ஆச்சரியமான தேவனை நம்புவது, மதித்தல், மரியாதை செய்வது மற்றும் தாழ்மையுடன் செயல்படுவதின் அர்த்தம் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். அப்படிச் செய்வதில் அவருடன் கூட்டு சேர்வது மனதைக் கவரும் ஒரு சிலாக்கியம்! 

.

மிகப் பெரிய கெளரவம்

1998 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான முலான், பேரரசரின் இராணுவத்தில் காயமடைந்த தந்தையின் இடத்தைப் பிடிப்பதற்காக இரவில் பதுங்கிச் சென்று ஆணாக வேடமிடும் ஒரு பெண்ணின் கதையைக் காட்டுகிறது. அவளது செயல்களைக் கண்டறிந்ததும், முலானின் குடும்பத்தினர் மௌனமாக இருக்கிறார்கள், அதிகாரிகளிடம் தெரிவிப்பது அவளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பயந்தார்கள். அவள் உயிருடன் திரும்புவாள் என்று அவர்கள் நம்புகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள். போர் முடிந்து பேரரசு காப்பாற்றப்பட்ட பிறகு, முலான் வீட்டிற்கு வருகிறாள். தன் துணிச்சலுக்காகப் பேரரசர் கொடுத்த நினைவுப் பரிசுகளை அவள் தந்தையிடம் வழங்குகிறாள். "அவை எங்கள் குடும்பத்தைக் கௌரவிக்கும் பரிசு" என்று அவர் கூறுகிறார். அவளுடைய தந்தை பரிசுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்து, “உன்னை ஒரு மகளாக வைத்திருப்பதே மிகப்பெரிய பரிசு மற்றும் கெளரவம்" என்று பதிலளித்தார்.

முலானைப் போலவே, இயேசுவின் சீடர்களும் தேவனுக்காகச் செய்யக்கூடிய எல்லாவற்றையும் பற்றி உற்சாகமாக இருந்தனர். "உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது" என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள் (வ.17). இயேசு அவர்களின் வெற்றியை ஒப்புக்கொண்டார், ஆனால் உடனே அவர்களின் கவனத்தைத் திருப்பினார். "ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" (வ.20) என்றார். இயேசுவைப் பொறுத்தவரை, பிசாசுகள் மீது "அதிகாரம்" செலுத்துவதை விட (வ.19-20) நித்திய ஜீவனுக்கான உத்தரவாதமே கொண்டாடுவதற்கான மிக பெரிய காரணமாக இருந்தது. அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் உலகம் பெருமிதம் கொள்ளும்போது, தேவஜனங்கள் நித்திய வாழ்வின் நிச்சயத்தைப் போற்றுகிறார்கள்.

தேவன் நமக்களித்துள்ள வரங்கள் மற்றும் உடைமைகளால் சில சமயங்களில் நாம் வல்லமையுள்ளவர்களாக உணரலாம். ஆனால் நாம் மகிழ்ச்சியடைவதற்கான காரணம் பூமியில் நமக்கு வல்லமை அல்லது ஈவுகள் உண்டாயிருப்பதற்காக இருக்கக்கூடாது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமது வாழ்க்கை இத்துடன் முடிவடையவில்லை என்பதே பெரிய ஈவும் கனமும் ஆகும். நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ளன, நமக்கு நித்திய ஜீவன் உண்டு.

 

இனி அந்நியர் இல்லை

“நீங்கள் இந்த இடத்திற்கு உரியவர் இல்லை.” அந்த வார்த்தைகள் ஒரு எட்டு வயது சிறுமியின் இதயத்தை நசுக்கியது, தொடர்ந்து வேதனைப்பட்டாள். அவரது குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது. மேலும் அவரது குடியேற்ற அட்டையில் அந்நியர் என்ற வார்த்தை முத்திரையிடப்பட்டிருந்தது. அவள் அந்த நாட்டிற்கு சொந்தமானவள் இல்லை என்று உணர்ந்தாள்.

வயது முதிர்ந்தவளானாலும், இயேசுவை விசுவாசித்தாலும் அவள் தன்னை ஒரு விரும்படாத அந்நியனாகவே உணர்ந்தாள். அவளுடைய வேதாகமத்தைப் படிக்கும்போது, எபேசியர் 2-ன் வாக்குறுதிகளை அவள் கண்டுபிடித்தாள். 12ஆம் வசனத்தில் அந்நியர் என்ற அந்த கடினமான வார்த்தையை அவள் கண்டுபிடித்தாள்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவள் தொடர்ந்து வாசிக்கையில், கிறிஸ்துவின் தியாகம் தன் நிலையை எப்படி மாற்றியது என்பதைப் பார்த்தாள். அவள் வசனம் 19 ஐப் படித்தாள். “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,” என்பதை வாசித்து, தேவ ஜனத்துடன் அவள் ஒரு குடிமகளாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். தான் பரலோகத்தின் பிரஜை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். இனி ஒருபோதும் அவள் வெளிநாட்டினராக இருக்க மாட்டாள். தேவன் அவளை ஏற்றுக்கொண்டார்.

நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனுக்கு அந்நியராயிருக்கிறோம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. இயேசு “தூரமாயிருந்த” இருந்த அனைவருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (வச. 17), தம்மை நம்புகிற அனைவரையும் தம்முடைய நித்திய ராஜ்யத்தின் சக குடிமக்களாக மாற்றி, கிறிஸ்துவின் சரீரமாக ஐக்கியப்படுத்தினார்.