
கருணையின் எளிய செயல்கள்
என் அம்மா சிகிச்சையிலிருந்தபோது, பூமியில் அவளுடைய கடைசி நாட்களை நெருங்கியபோது, ஒரு முதியோர் இல்ல பராமரிப்பாளரின் உண்மையான கருணை என்னை அசைத்தது. நலிவடைந்த என் அம்மாவை அவளது நாற்காலியிலிருந்து மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமர்த்திய பிறகு, செவிலிய உதவியாளர் அம்மாவின் தலையைக் கோதி மெதுவாக அவள்மேல் சாய்ந்து கொண்டு, "நீங்கள் மிகவும் இனிமையானவர்" என்று கூறினார். பிறகு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள். அவளுடைய கருணை என்னை அன்றும் இன்றும் கண்ணீரை வரவழைத்தது.
அவளது ஒரு எளிய கருணை செயல், ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அது தேவைப்பட்டது. இந்த பெண்ணின் பார்வையில் என் அம்மா ஒரு நோயாளி மட்டும் அல்ல என்பதை அறிந்து அவளோடு ஒத்துழைக்க எனக்கு உதவியது. அவள் அவளை மிகவும் மதிப்புமிக்க நபராகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்த பிறகு, போவாஸ் ரூத்துக்கு இரக்கம் காட்டினார், அறுவடை செய்பவர்களுக்குப் பின்னால் எஞ்சிய தானியங்களைச் சேகரிக்க அனுமதித்தார். அறுவடை செய்யும் ஆண்களுக்கு அவளைத் தனியாக விட்டுவிடுமாறு கட்டளையிட்டார் (ரூத் 2:8-9). நகோமியின் மீதான ரூத்தின் அக்கறையினால் அவனது கருணை உந்தப்பட்டது: "உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும்.. எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." (வ. 11). அவர் அவளை ஒரு அந்நியராகவோ அல்லது விதவையாகவோ பார்க்கவில்லை, ஆனால் ஒரு தேவையிலுள்ள பெண்ணாகவே பார்த்தார்.
நாம், "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12) வாழத் தேவன் விரும்புகிறார் . தேவன் நமக்கு உதவுவதால், நம்முடைய எளிய தயவான செயல்களால் உள்ளங்களை உற்சாகப்படுத்தவும், நம்பிக்கையூட்டவும், பிறரிடம் கருணையைப் பிறப்பிக்கவும் முடியும்.

சோ்ந்திருந்து மலைகளை மேற்கொள்ளுதல்
இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: "நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?
ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும் வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சமுதாய ஆதரவு" முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.
யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், "தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது" (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். "அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.
நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.

தீங்கின் வழியில்
எனது காலை நடைப்பயிற்சியின் போது, தவறான திசையில் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டதைக் கவனித்தேன். ஓட்டுநர் தூங்கியதாலும், மது போதையிலிருந்ததாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து குறித்து அறியவில்லை. நிலைமை ஆபத்தானது, நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளை விழிப்பூட்டி வாகனத்தின் பயணிகள் பக்கத்திற்கு நகர்த்திய பிறகு, நான் ஓட்டுநர் இருக்கையில் ஏறினேன், நான் அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு ஒட்டி சென்றேன்
உடல் சார்ந்த ஆபத்து மட்டுமே நாம் எதிர்கொள்ளும் தீங்கு அல்ல. அத்தேனேவில் உலக ஞானமும் புத்திசாலித்தனமும் நிரைந்த ஜனங்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருப்பதை பவுல் பார்த்தார், காரணம் "பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது" அவர் "தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தார்" (அப்போஸ்தலர் 17:16). கிறிஸ்துவைக் கருத்தில் கொள்ளாமல் தவறான கருத்துக்களுடன் சுற்றித்திரிபர்களுக்கு அப்போஸ்தலனின் உள்ளார்ந்த பதில், இயேசுவின் மூலமாகவும் இயேசுவுக்குள்ளாகவும் தேவனுடைய நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும் (வ.18, 30-31). கேட்ட சிலர் நம்பினர் (வ.34).
கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வாழ்வின் மெய்யான அர்த்தத்தைத் தேடுவது ஆபத்தானது. இயேசுவில் மன்னிப்பையும் மெய்யான நிறைவையும் கண்டவர்கள், மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டு ஒப்புரவாகுதலின் செய்தியைப் பெற்றுள்ளனர் (பார்க்க 2 கொரிந்தியர் 5:18-21). இந்த உலக வாழ்க்கையின் மயக்கத்தில் இருப்பவர்களுடன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது, தீங்கிழைக்கும் வழியிலிருந்து ஜனங்களைத் தட்டிப்பறிக்கத் தேவன் இன்னும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.

எப்போதும் ஜெபியுங்கள்
தேர்வில் எனக்கு 84 மதிப்பெண் கிடைத்தது! என் வாலிப மகளின் குறுஞ்செய்தியை என் அலைபேசியில் படித்த போது அவளது உற்சாகத்தை உணர்ந்தேன். அவள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினாள், மதிய உணவு இடைவெளியில் அவளுடைய அலைபேசியைப் பயன்படுத்தினாள். என் மகள் ஒரு சவாலான தேர்வில் சிறப்பாகச் செய்ததால் மட்டுமல்ல, அதை என்னிடம் தெரிவிக்க அவள் விரும்பியதால் என் அம்மாவின் இதயம் துள்ளியது. அவள் தன்னுடைய நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாள்!
அவளுடைய செய்தி எனது நாளை மகிழ்ச்சியாக்கியதை உணர்ந்து, நான் தேவனை அணுகும்போது அவர் எவ்வாறு உணர கூடும் என்று நான் பின்னர் சிந்தித்தேன். நான் அவருடன் பேசுகையில் அவர் மகிழ்வாரா? ஜெபம் என்பது நாம் தேவனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதும், "இடைவிடாமல்" (1 தெசலோனிக்கேயர் 5:17) செய்யச் சொல்லப்பட்ட ஒன்றுமாகும். அவருடன் பேசுவது, நன்மை தீமையில் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் நம்மைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் நம் காரியங்களைத் தேவனுடன் பகிர்வது நம் கவனத்தைத் திசைதிருப்பி, அவரைப் பற்றிச் சிந்திக்க உதவுகிறது. ஏசாயா 26:3 கூறுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” நாம் தேவனிடமாய் கவனத்தைத் திரும்புகையில், நமக்குச் சமாதானம் காத்திருக்கிறது.
நாம் எதை எதிர்கொண்டாலும், தேவனுடன் தொடர்ந்து பேசி, நம் சிருஷ்டிகரும் இரட்சகருமானவருடன் இணைப்பில் இருப்போமாக. ஒரு ஜெபத்தை முணுமுணுத்து, "நன்றி செலுத்தவும்", மகிழ்ச்சி கொள்ளவும் மறவாதிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் கூறுகிறார், இது நம்மைக் குறித்து "தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:18).
