தேவனின் விசாலமான இடம்
இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"
இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).
தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"
நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும் தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.

தாழ்ந்திருப்பினும் தேவனால் நேசிக்கப்படுதல்
ஒரு நாள் சபையில், வருகை தந்திருந்த ஒரு குடும்பத்தை வாழ்த்தினேன். அவர்களோடிருந்த சிறுமியின் சக்கர நாற்காலி அருகே மண்டியிட்டு, எனது வளர்ப்பு நாயான கேலீக்கு அவளை அறிமுகப்படுத்தி, அவளுடைய இனிய தோற்றத்தையும், இளஞ்சிவப்பு கண்ணாடிகள் மற்றும் காலணிகளையும் பாராட்டினேன். அவளால் பேசமுடியாது என்றாலும், அவள் எங்கள் உரையாடலை ரசித்ததாக அவளுடைய புன்னகையே எனக்குச் சொன்னது. எனது புதிய தோழியின் கண்ணில் படுவதைத் தவிர்த்து, மற்றொரு சிறுமி நெருங்கினாள். அவள், "அவளுடைய உடை எனக்குப் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள்" என்று கிசுகிசுத்தாள். நான், “நீயே அவளிடம் சொல்லு. அவள் உன்னைப் போலவே அன்பானவள்" என்றேன். எங்கள் புதிய தோழி வித்தியாசமான முறையில் பேசினாலும், அவளுடன் உரையாடுவது எவ்வளவு எளிது என்பதையும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பது அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நேசிக்கப்படுவதையும் உணர உதவும் என்பதை விளக்கினேன்.
வேதாகமத்திலும் இந்த உலகத்திலும், மக்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மாறுபட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நமது மகாதேவன் நம் வேறுபாடுகளில் மகிழ்கிறார், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் நெருங்கிட நம்மை அழைக்கிறார். சங்கீதம் 138ல் தாவீது, “உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; 'தேவர்களுக்கு' முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்றார் (வ.1). அவர், "கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்" (வ.6) என்று கூறுகிறார்.
தேவன், உன்னதர் மற்றும் பரிசுத்தர், அவருடைய சிருஷ்டியாக நம்மை, குறிப்பாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, கருணையுடன் பார்க்கிறார். நாம் பிறரை அன்பாகப் பார்க்கவும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் உதவுமாறு அவரிடம் கேட்கும் அதேநேரம் நாம் தாழ்ந்தவர்களாயினும் அவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்!

கிறிஸ்துவின் காட்சிப்படுத்தப்பட்ட முரண்பாடு
காலத்திற்கும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஐசக் வாட்ஸ், "நான் அதிசயமான சிலுவையை ஆராய்கையில்" பாடலை எழுதினார். அதன் பாடல் வரிகளை எழுதுவதில், அவர் கவிதையில் முரண்பாடென்னும் யுத்தியைப் பயன்படுத்தி கருப்பொருள்களில் ஒரு மாறுபாட்டைக் காட்டினார்: "எனது செழிப்பான ஆதாயத்தை நான் நஷ்டமாக எண்ணுகிறேன்" மற்றும் "என் பெருமையின் மீது அவமதிப்பை ஊற்றுங்கள்" என்று வரிகள் இருக்கும். நாம் சில சமயங்களில் இதை ஆக்ஸிமோரான் (முரண்தொகை) அதாவது "முரண்பட்ட இரட்டைகளை இணைக்கும் வார்த்தைகள்" என்று அழைக்கிறோம். "கசப்பான இனிப்பு" மற்றும் "இருண்ட வெளிச்சம்" போன்றவை. வாட்ஸின் பாடல் வரிகளைப் பொறுத்தவரை, இந்த யுத்தி மிகவும் ஆழமானது.
இயேசு அடிக்கடி முரண்பாட்டைப் பயன்படுத்தினார். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:3), நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். நீங்களோ அல்லது நானோ, நாம் நேசித்த ஒருவரின் இழப்பிற்காகத் துக்கமடைந்து துயரப்படுகையில், நாம் ஆறுதலடைவோம் (வ.4) என்று இயேசு கூறுகிறார். பொதுவான இவ்வாழ்க்கைக்குரிய விதிகள் தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு பொருந்தாது என்பதைக் கிறிஸ்து காட்டினார்.
கிறிஸ்துவுக்குள் வாழ்வது, எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறுகிறது என்று இந்த முரண்பாடுகள் நமக்குக் கூறுகின்றன: அடையாளமற்றிருந்த நாம் யாரோ ஒருவராகப் போற்றப்படுகிறோம். சிலுவையிலும் இயேசு ஒரு முரண்பாட்டைக் காட்சிப்படுத்தினார்; அங்கே முள் கிரீடத்தை அணிந்திருந்தார். ஐசக் வாட்ஸ் இந்த ஏளனச் சின்னத்தை எடுத்து, முரண்பாடாக, அதற்கு மிகவுயர்ந்த அழகைக் கொடுத்தார்: "இத்தகைய அன்பும் சோகமும் சந்தித்ததா, அல்லது முட்கள் இத்தனை விலையேறப்பெற்ற கிரீடத்தை உருவாக்கினதா?".இந்த மெய்சிலிர்க்கும் வரிகள், நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன: "இந்த அன்பு மிகவும் அற்புதமானது, மிகவும் தெய்வீகமானது; என் ஆன்மா, என் வாழ்க்கை, என் அனைத்தையும் கோருகிறது"

நம் தகப்பனின் அன்பு
சினேகா ஜன்னல் அருகே அமர்ந்து, பையை வைத்துக்கொண்டு, தன் அப்பா வருவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் பிரகாசமான பகல் இருண்டு பின்னர் இரவாக மாறியது, அவளுடைய உற்சாகம் மங்கியது. அப்பா மீண்டும் வரவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
சினேகாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள், மேலும் அவள் தனது அபபவுடன் நேரத்தைச் செலவிட விரும்பினாள். அவள் நினைத்தது முதல் முறை அல்ல, "நான் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் என்னை நேசிக்கவில்லை" என்று அவள் எண்ணுவது இது முதல்முறையல்ல.
சினேகா பின்னர் கற்றுக்கொண்டது போல்; இயேசுவை நம் இரட்சகராகப் பெறும் நாம் அனைவரும் அறிந்து கொள்வது போல் - நமது பூமிக்குரிய பெற்றோரும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றினாலும், நம்மை நேசிக்கும் ஒரு பரலோக தகப்பன் இருக்கிறார், நம்மை ஏமாற்றவே மாட்டார்.
மூன்று வேதாகம நிருபங்கள், தன்னுடைய பெயரைக் கொண்ட ஒரு சுவிசேஷம் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் யோவான், தேவனுடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். உண்மையில், அவர் தன்னைதான் " இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும்" (யோவான் 21:20) என்று குறிப்பிட்டார். கிறிஸ்துவின் அன்பினால் வாழ்க்கை மாற்றப்பட்ட ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்தினார். "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று அவர் எழுதினார்.
தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்த தம்முடைய குமாரனாகிய இயேசுவை தந்தருளினார் (வ.16; யோவான் 3:16). அவரை எப்பொழுதும் ஜெபத்தில் நாம் அணுகலாம், மேலும் அவர், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று வாக்குரைக்கிறார். அவருடைய அன்பில் நாம் பாதுகாப்பாக இளைப்பாற முடியும்.