வகை  |  odb

பிரதிபலன்

1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை  நிராகரித்தார். ""நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்" என்றார் கார்சியா. பிறகு, "ஆனால் இது எனக்கானதல்ல" என்றார்.

அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?"

ஒரு ஐசுவரியமான ஞானி  ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து "அதற்கான பலனை" கண்டுகொள்ள முயன்றான். அவர் , "வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்" (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், " மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை" (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், "சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது" (வ. 17) என்று முடித்தார்.

இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு "பரிபூரண ஜீவனை " கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (வ. 33) என்றார்.

அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .

ஒரே பார்வையாளர்

கைல் ஸ்பெல்லர், சாம்பியன்ஷிப் கூடைப்பந்தாட்டப் போட்டிகளின் போது, ​​உற்சாகமாக அறிவிப்பு கொடுக்கும் தனது பிரேத்யேகமான அறிவிப்பு மொழிநடைக்கு மிகவும் பிரபலமானவர். "ஆரம்பிக்கலாம்!" அவர் மைக்கில் இடி முழக்கினார், ஆயிரக்கணக்கான ரசிகர்களும், அந்த செயலைப் பார்க்கும் அல்லது கேட்கும் லட்சக்கணக்கான மக்களும், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வர்ணனையாளர் விருதுக்கான பரிந்துரையைக் கைலைப் பெற்ற குரலுக்கு இசைகின்றனர். "கூட்டத்தினரையும், வீரர்களையும் எவ்வாறு உற்சாகப்படுத்துவது என்பது எனக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவரது குரல் கலைத்திறனின் ஒவ்வொரு வார்த்தையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில் இடம்பெற்றது தேவனை மகிமைப்படுத்துவதாகும் என்கிறார். கைல் மேலும், "ஒரே பார்வையாளர்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்" என்று தனது பணி குறித்துச் சொல்கிறார்.

கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் இறையாண்மை குறித்த  சந்தேகங்களை தங்களது நடைமுறை வாழ்க்கையிலும் கூட ஊடுருவ அனுமதித்த கொலோசெய சபையினருக்கு இதே போன்ற நெறிமுறைகளை அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்தினார். அதற்கு உத்தரவாக, பவுல் எழுதினார், "வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோசெயர் 3:17).

பவுல் மேலும் கூறினார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (வச. 24). கைல் ஸ்பெல்லரைப் பொறுத்தவரை, அதில் அவரது சிற்றாலய போதகர் என்ற  பணியும் அடங்கும். அதைக் குறித்து,  "பூமியில் எனது நோக்கம் இதுவே; மேலும் அறிவிப்பு கலை அதில் ஒரு சிறந்த பகுதியே" என்கிறார். தேவனுக்கான நமது சொந்த வேலை, நமது ஒரே பார்வையாளருக்கு இனிமையாக இருக்கும்.

துருவிய வெண்ணெய்

ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் "தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்" புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், "உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?" என்று கேட்கிறது. எங்கேயாவது  "அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத" இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், "போதும் கர்த்தாவே" (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).

தேவனின் முன்னேற்பாடு

ஜூன் 2023 இல் கொலம்பியாவின் அமேசான் காட்டில் ஒன்று முதல் பதின்மூன்று வயதுள்ள நான்கு உடன்பிறந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது உலகமே வியந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி, தங்கள் தாயை இழந்த பிறகு, அவர்கள் காட்டில் நாற்பது நாட்கள் உயிர் பிழைத்துள்ளனர். காட்டின் கடுமையான நிலப்பரப்பை நன்கு அறிந்த குழந்தைகள், காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தடிகளில் ஒளிந்துகொண்டு, ஓடைகள் மற்றும் மழைநீரைப் புட்டிகளில் சேகரித்து, விமான சிதைவிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு போன்ற உணவைச் சாப்பிட்டனர். எந்த காட்டுப் பழங்கள் மற்றும் விதைகளை உண்பது பாதுகாப்பானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

தேவன் அவர்களை ஆதரித்தார்.

அவர்களின் நம்பமுடியாத கதை, நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை தேவன் எவ்வாறு அற்புதமாகத் தாங்கினார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது, இது யாத்திராகமம் மற்றும் எண்ணாகவும் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு வேதாகமம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தங்கள் தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்றினார்.

தேவன் கசப்பான நீரூற்று நீரைக் குடிநீராக மாற்றினார், இரண்டு முறை பாறையிலிருந்து தண்ணீரை வழங்கினார், மேலும் பகலில் மேக ஸ்தம்பத்திலும் இரவில் நெருப்பு ஸ்தம்பத்திலும் தம் ஜனங்களை வழிநடத்தினார். அவர்களுக்கு மன்னாவையும் வழங்கினார். "அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்” (யாத்திராகமம் 16:15-16).

அதே தேவன் நமக்கு "வேண்டிய ஆகாரத்தை இன்று" (மத்தேயு 6:11) வழங்குகிறார் . "கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே " (பிலிப்பியர் 4:19) நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார் என்று நாம் நம்பலாம். எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்!