எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

என்னால் கற்பனை செய்யத்தான் கூடும்

ஆராதனை பாடல் குழுவினர் "என்னால் கற்பனை செய்ய மட்டுமே முடியும்" என்ற பாடலை பாட தொடங்கியபோது, நான் ஒரு பெண்ணின் பின்னால் தேவாலய பீடத்தில் அமர்ந்தேன். அந்த பெண்ணின் இனிமையான குரல் என்னுடன் இசைந்துபோக,  என் கைகளை உயர்த்தி நான் தேவனைத் துதித்தேன். அவளுடைய சரீர பெலவீனங்களைப் பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அவளுடைய வரவிருக்கும் புற்றுநோய் சிகிச்சையின் போது நாங்கள் ஒன்றாக ஜெபம் செய்ய முடிவு செய்தோம்.

சில மாதங்களுக்குப் பிறகு, வனிதா என்னிடம் தன்னுடைய மரண பயத்தைப் பற்றிச் சொன்னாள். அவளது மருத்துவமனை படுக்கையில் சாய்ந்துகொண்டு, அவளது தலைக்கு அருகில் என் தலையைச் சாய்த்து, மெல்லிய குரலில் ஜெபித்து, அமைதியாக எங்கள் பாடலைப் பாடினேன். சில நாட்களுக்குப் பிறகு வனிதா இயேசுவை நேருக்கு நேர் ஆராதிக்கையில், அவள் எப்படி இருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அப்போஸ்தலராகிய பவுல் மரணத்தை எதிர்நோக்கியிருந்த தமது வாசகர்களுக்கு ஆறுதல் தரும் உறுதியை அளித்தார் (2 கொரிந்தியர் 5:1). நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனை நிறைந்தவைதான், ஆனால் நம்முடைய நம்பிக்கையானது பரலோக வாசஸ்தலத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதுவே இயேசுவுடனான நம்முடைய நித்திய வாழ்வு (வ. 2-4). அவருடன் வாழும் நித்திய ஜீவனுக்காக ஏங்கும்படி தேவன் நம்மை வடிவமைத்திருந்தாலும் (வ. 5–6), அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் இப்போது அவருக்காக வாழும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே தரப்பட்டுள்ளன (வ. 7-10).

நாம் இயேசுவைப் பிரியப்படுத்த வாழ்கையில், அவர் திரும்பி வருவதற்காக அல்லது நம்மை வீட்டிற்கு அழைப்பதற்காகக் காத்திருக்கும்போது, ​​அவருடைய நிலையான பிரசன்னத்தின் சமாதானத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம். நாம் பூமிக்குரிய உடலை விட்டு நித்தியத்தில் இயேசுவோடு சேரும் தருணத்தில் நாம் என்ன அனுபவிப்போம்? நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்!

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்

எனது கணவர் எங்கள் மகனின் லிட்டில் லீக் பேஸ்பால் அணிக்கு பயிற்சியளித்தபோது, அந்த ஆண்டின் இறுதியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் முன்னேற்றத்தை ஒத்துக்கொண்டார். அதில் டஸ்டின் என்னும் ஒரு இளம் விளையாட்டு வீரர் என்னிடத்தில் வந்து, “நாங்கள் இன்று விளையாட்டில் தோற்றோமல்லவா?” என்று கேட்டான். 

“ஆம், ஆகிலும் உங்களால் இயன்றதை நீங்கள் செய்தீர்கள் என்று நாங்கள் பெருமையடைகிறோம்” என்று சொன்னேன். 

“எனக்கு புரிகிறது, ஆனாலும் நாங்கள் தோற்றுவிட்டோமல்லவா?” என்று கேட்டான். 

நான் தலையசைத்தேன். 

“ஆனாலும் நான் ஏன் ஜெயித்ததுபோல உணர்கிறேன்?” என்று டஸ்டின் கேட்டான். 

“ஏனென்றால் நீ ஜெயிக்கிறவன்” என்று புன்முறுவலோடு அவனுக்கு பதிலளித்தேன். 

டஸ்டினைப் பொறுத்தவரையில் தன்னால் முடிந்தவரை போராடியும் தோல்வியடைந்துவிட்டால் அது தோல்வியே என்னும் மனப்பான்மையில் இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய யுத்தம் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையாது. இருப்பினும், வாழ்க்கையின் கடினமான கட்டத்தை நமது மதிப்பின் பிரதிபலிப்பாகப் பார்க்க அடிக்கடி தூண்டப்படுகிறோம். 

பவுல் அப்போஸ்தலர், தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய தற்போதைய பாடுகளுக்கும் வரப்போகிற மகிமைக்கும் இருக்கும் தொடர்பை உறுதிசெய்கிறார். இயேசு தன்னையே நமக்காய் ஒப்புக்கொடுத்து, பாவத்துடனான நம்முடைய யுத்தத்தில் நமக்காய் யுத்தம் செய்து, அவரைப் போல மாறுவதற்கு தொடர்ந்து நம்மில் கிரியை செய்கிறார் (ரோமர் 8:31-32). நாம் உபத்திரவத்தையும் பாடுகளைகளையும் சந்திக்க நேரிட்டாலும், தேவனுடைய நிலையான அன்பு நம்மை உறுதியாய் நிற்க நமக்கு உதவிசெய்யும் (வச. 33-34).

அவருடைய பிள்ளைகளாய், பாடுகளை மேற்கொள்வதின் நிமித்தம் நம்முடைய சுயமதிப்பை விளங்கச்செய்யலாம். நம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் வழியில் தடுமாறலாம், ஆனால் நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் நம்மை அடையாளப்படுத்துவோம் (வச. 35-39).

மீட்புப்பணி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பண்னை விலங்குகள் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வல ஊழியர்கள், 34 கிலோ எடைகொண்ட அழுக்கு கம்பளி தோலுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆட்டை மீட்டனர். அந்த ஆடானது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கண்டறிந்தனர். அதின் மேலிருக்கும் இறுகிய கம்பளித் தோலை கவனமுடன் வெட்டியெடுத்தனர். அதின் பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டு புஷ்டியான ஆகாரத்தை சாப்பிட, அதின் கால்கள் வலுவடையத் துவங்கியது. அதை மீட்டவர்களுடனும் சரணாலயத்தில் இருந்த மற்ற விலங்குகளுடனும் அது பழகுவதை மிகவும் ஆரோக்கியமாய் எண்ணியது. 

சங்கீதக்காரன் தாவீது, அதிக பாரத்தைச் சுமந்து தொலைக்கப்பட்டவராய், மீட்பின் அவசியத்தை எதிர்பார்த்திருக்கும் வேதனையை புரிந்துகொண்டான். சங்கீதம் 38இல், தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாய், கைவிடப்படுதலையும் ஆதரவற்ற நிலைமையையும் அனுபவித்தான் (வச. 11-14). ஆகிலும் அவன் விசுவாசத்தோடு, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்” என்று ஜெபித்தான். தாவீது அவனுடைய இக்கட்டான சூழ்நிலையையும் மாம்ச பெலவீனத்தையும் மறுக்கவில்லை (வச. 16-20). ஆகிலும் அவனுடைய தேவன் சரியான நேரத்தில் அவனுக்கு சகாயஞ்செய்ய இறங்குவார் என்று நம்பியிருந்தான் (வச. 21-22). 

நாம் சரீரப்பிரகாரமான, மன ரீதியான, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாரங்களால் அழுத்தப்படுவதாக உணரும்போது, தேவன் நம்மை உண்டாக்கியதிலிருந்து தீர்மானித்திருந்த மீட்புப்பணியின் மூலம் நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கி, “என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (வச. 22) என்று விண்ணப்பித்து மன்றாடலாம். 

தேவனின் வார்த்தையின் வல்லமை

1968 கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, அப்பல்லோ 8 என்கிற விண்கலத்தின் விண்வெளி வீரர்களான பிராங்க் போர்மன், ஜிம் லொவெல் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனிதர்களானார்கள். சந்திரனை பத்துமுறை சுற்றிவந்த அவர்கள், சந்திரன் மற்றும் பூமியின் புகைப்படங்களை அனுப்பினர். ஒரு நேரடி ஒலிபரப்பின்போது, அவர்கள் மாறிமாறி ஆதியாகமம் 1 ஐ வாசித்தனர். இதின் நாற்பதாம் ஆண்டின் நினைவு விழாவில், போர்மன் "கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, ஒரு மனித சத்தத்தைக் கேட்க இதுவரையில்லாத பெருங்கூட்டம் கூடுமென்றும், அவர்களுக்குப் பொருத்தமான எதையாகிலும் பேச வேண்டும் என்பதே நாசா இட்ட ஒரே கட்டளை"' என்றார். இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஒலிப்பதிவைக் கேட்டவர்களுக்கு அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் பேசின வேதாகம வசனங்கள் இன்றும் ஜனங்களின் இதயத்தில் சத்திய விதைகளாய் விதைக்கப்படுகின்றன.

தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்" (ஏசாயா 55:3) என்றார். தனது இரட்சிப்பின் இலவச ஈவை வெளிப்படுத்தி, நாம் நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவரது இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற அழைக்கிறார் (வ.6–7). அவருடைய நினைவுகள் மற்றும் செயல்களின்மீது தனக்கு மாத்திரம் இருக்கும் தெய்வீக அதிகாரத்தை அறிவிக்கும் தேவன், அவை நமது புரிந்துகொள்ளுதலுக்கு மிகவும் அப்பாற்பட்டது என்கிறார் (வ.8–9). ஆயினும், வாழ்வை மாற்றும் அவரது வேதாகம வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கும் அளிக்கிறார். அவை இயேசுவையே நமக்குக் காண்பித்து, தமது ஜனங்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவரே ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துகின்றன (வ.10–13).

நற்செய்தியைப் பகிரப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ பிதா தமது பூரண சித்தத்தின்படி குறித்த காலத்தில் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார்.

ஒருவருக்கொருவர் ஊக்குவித்தல்

 மருத்துவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின்  சோர்ந்துபோய் நான் சோபாவில் அமர்ந்தேன். எதைக்குறித்தும் சிந்திக்கப் பிடிக்கவில்லை, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை. சந்தேகமும், ஊக்கமின்மையும் என்னை அமிழ்த்த, தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் வந்த விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுமி தன் தம்பியிடம், "நீ சிறந்த வீரன்" என்றாள். அவ்வாறே அவனை அவள் தொடர்ந்து ஊக்கமளிக்கையில், அச்சிறுவன் சிரித்தான். நானும் சிரித்தேன் .

தேவஜனங்கள் எப்போதுமே மனமடிவினாலும், சந்தேகத்தாலும்  பாதிக்கப்பட்டனர்.  தேவனுடைய சத்தம் பரிசுத்த ஆவியானவரால் மனிதருக்குக்  கேட்கும் என்பதை உறுதிப்படுத்தும் சங்கீதம் 95 ஐ மேற்கோள்காட்டி, எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் செய்த தவறுகளை விசுவாசிகள் தவிர்க்கும்படி எச்சரிக்கிறார் (எபிரெயர் 3:7–11). "சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில்  ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." என்றும் "நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (ஊக்கமளியுங்கள்)" என்றும் எழுதினார் (வ.12–13).

நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவில்  இருக்க, நமக்குத் தேவையான உதவி. நாம் நீடிய பொறுமையோடு இருப்பதற்குத் தேவையான பெலனை விசுவாசிகளின் ஐக்கியம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் (வ.13). ஒருவர் சந்தேகிக்கையில், மற்றொருவர் அவரை  உறுதிப்படுத்தி உத்தரவாதம் செய்யலாம். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்த,  தேவஜனமாகிய நமக்குத் தேவனே பெலனளிக்கிறார்.

நம்பிக்கையோடு சகித்தல்

நான்கு வயதான சாலமனுக்கு தசைநார் சிதைவு என்னும் தசை சிதைவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு வருடம் கழித்து, மருத்துவர்கள் குடும்பத்துடன் சக்கர நாற்காலிகளைப் பற்றி விவாதித்தனர். ஆனால் சாலமன் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தான். குடும்பத்தினரும் நண்பர்களும் அவனுக்காக ஜெபம் செய்தனர். அவனை முடிந்தவரை சக்கர நாற்காலியிலிருந்து வெளியே வைத்திருக்க எண்ணி, பயிற்சி பெற்ற நாய் ஒன்றினை உதவிக்கு வைப்பதற்கு நிதி திரட்டினார்கள். கேல்லி என்ற தன்னுடைய நாயினை பயிற்றுவித்த டெய்ல்ஸ் ஃபார் லைஃப் என்ற அந்த நிறுவனம், தற்போது சாலமனுக்காக ஒரு நாயை பயிற்றுவிக்கிறது.   

சாலமன் தற்போது அவனுடைய சிகிச்சையை ஏற்றுக்கொண்டாலும், சில கடினமான நாட்களைக் கடக்கும்போது, தேவனைத் துதித்து பாடிக்கொண்டேயிருப்பான். சாலமன் தனது அம்மாவைக் கட்டிப்பிடித்து, “பரலோகத்தில் தசைநார் சிதைவு இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னான். 

வியாதியின் விளைவுகள் இந்த தற்காலிக பூமியில் வசிக்கும் அனைவரையும் பாதிக்கின்றன. இருப்பினும், சாலமனைப் போலவே, அந்த தவிர்க்க முடியாத கடினமான நாட்களில் நம்முடைய தீர்மானத்தை பலப்படுத்தக்கூடிய நிலையான நம்பிக்கை நமக்கு இருக்கிறது. “புதிய வானமும் புதிய பூமியும்” (வெளிப்படுத்துதல் 21:1) என்ற வாக்குறுதியை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். நம்முடைய சிருஷ்டிகரும் பாதுகாவலருமாகிய தேவன் நம்மோடு வாசம்பண்ணுவார் (வச. 3). நம் கண்களிலிருந்து வரும் “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” (வச. 4). காத்திருத்தல் “மிகவும் கடினமாக” அல்லது “மிகவும் நீளமானதாக” உணரும்போது, தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதினால் நாம் இளைப்பாறுதலை உளமாற அனுபவிக்கலாம். 

சேர்ந்து இருப்பது நல்லது

தன் கணவனை இழந்த மேரி, திருச்சபைக்கு செல்வதையும் வேதபாட வகுப்பிலும் தவறாமல் கலந்துகொள்வாள். ஒவ்வொரு மாதமும் தனது ஐந்து பிள்ளைகளையும் பேருந்தில் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். திருச்சபையை சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளையும் செய்து வந்தாள். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை, அத்தேவாலயத்தின் போதகர், ஒரு சிலர் அவளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு திருச்சபை விசுவாச தம்பதியினர் குறைவான வாடகையில் ஒரு வீட்டை அவளுக்கு தங்கிக்கொள்ள கொடுத்துதவினர். ஒரு தம்பதியினர் ஒரு காப்பிக் கடையில் அவளுக்கு வேலை தந்தனர். ஒரு இளைஞன் தன்னுடைய பழைய காரை பழுது பார்த்து கொடுத்துதவினான். மேலும் அந்த காருக்கு தானே மெக்கானிக்காய் இருப்பதாகவும் வாக்கு செய்தான். 

ஒருவேளை மேரியின் திருச்சபையாரைப் போல் நம்மால் உதவ முடியாமல் இருக்கலாம். தேவ ஜனங்கள் உதவி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள். சுவிசேஷகர் லூக்கா இயேசுவின் விசுவாசிகளை, “அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்... உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:42) என்று குறிப்பிடுகிறார். நாம் நமது வளங்களை ஒருங்கிணைக்கும் போது, ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போல தேவையிலுள்ளவர்;களுக்கு உதவ நாம் இணைந்து செயல்படலாம் (வச. 44-45). நாம் தேவனுடனும் சக விசுவாசிகளுடனும் ஐக்கியம் கொள்ளும்போது, ஒருவரையொருவர் பராமரித்துக்கொள்ள முடியும். நம்முடைய கிரியைகளின் மூலம் நாம் பிரதிபலிக்கும் தெய்வீக அன்பானது, மற்றவர்களை தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும் (வச. 46-47).

நம்முடைய புன்னகையினாலும், அன்பான செய்கையினாலும், பண உதவினாலும், ஜெபத்தினாலும் மற்றவர்களுக்கு உதவும் போது, நாம் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துகிறோம்.

மகிழ்ந்திருக்க காரணங்கள்

கிளென்டா திருச்சபையின் வளாகத்திற்குள் நுழையும்போதே அவளுக்குள்ளிருந்த மகிழ்ச்சி அந்த அறையையே நிரப்பிற்று. அவர் கடினமான மருத்துவச் சிகிச்சை பெற்று, மீண்டு வந்திருக்கிறார். ஆலய ஆராதனை முடிந்து, நாங்கள் வழக்கமாய் சந்திக்கும்போது, அவர் என்னோடு சேர்ந்து கண்ணீர் சிந்திய கடினமான தருணங்களுக்காகவும், அவருடைய மென்மையான கடிந்துகொள்ளுதலுக்காகவும் என்னை உற்சாகப்படுத்தியதற்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். சூழ்நிலை எதுவாயினும், என்னுடைய பிரச்சனைகளை வெளிப்படையாய் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்து, தேவனுக்கு நன்றி சொல்லும் காரணங்களை எனக்கு அவர் நினைப்பூட்டுவார்.
அவர்களை “கிளென்டா அம்மா” என்று அன்போடு அழைக்க அனுமதித்த அவர்கள், என்னை கட்டித் தழுவினார். “மகளே” என்று அணைத்துக்கொண்டார். நாங்கள் சிறிதுநேரம் பேசி ஜெபித்தோம். அதற்குப் பின், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, பாடிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.
சங்கீதம் 64இல், தன்னுடைய குற்றச்சாட்டுகளுடன் தாவீது தேவனை அணுகுகிறான் (வச.1). தன்னைச் சுற்றி பெருகும் அக்கிரமத்திற்கு விரோதமாய் தேவனிடத்தில் முறையிடுகிறான் (வச.2-6). ஆனால் தேவனுடைய வல்லமையின் மீதும் வாக்குத்தத்தத்தின் மீதான நம்பிக்கையை அவன் இன்னும் இழக்கவில்லை (வச.7-9). மேலும், “நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்” (சங்கீதம் 64:10) என்பதை நன்கு அறிந்திருந்தார்.
இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தருணங்களில் நாம் கடினமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், தேவன் படைத்த ஒவ்வொரு நாளிலும் மகிழ்ந்திருக்கும் காரணங்கள் எப்போதும் நமக்கு இருக்கும்.

துக்கித்தலும் நன்றியுணர்வும்

என்னுடைய தாயார் புற்றுநோயால் இறந்த பின்பு, அவரோடு இருந்த இன்னொரு நோயாளி என்னை அணுகினார். “உன்னுடைய அம்மா மிகவும் மென்மையானவர்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “நான் மரிப்பதற்குப் பதிலாய் அவர் மரித்துவிட்டார்” என்று வேதனைப்பட்டார்.
“என் அம்மா உங்களை அதிகம் நேசித்தார்,” “உங்களுடைய பிள்ளைகள் வளருவதைப் பார்க்க நீங்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். அவர்களுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, தேவன் தாமே இந்த துக்கத்தினுடே சமாதானம் அருள கண்ணீரோடு வேண்டிக்கொண்டேன். அவளுடைய இந்த இக்கட்டான நோயின் மத்தியிலும் அவளுடைய கணவனையும் பிள்ளைகளையும் நேசிக்கும் இருதயத்தைக் கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னேன்.
யோபு தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்து தனக்குண்டான எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் தருவாயில், யோபுவின் சொல்லொண்ணா துயரத்தை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. “தரையிலே விழுந்து பணிந்து”(யோபு 1:20) தன் துக்கத்தை வெளிப்படுத்துகிறான். இருதயம் நொருங்குண்டவனாய், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்”(வச.21) என்று தன்னுடைய நன்றியுணர்வோடு கூடிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறான். அதற்குப் பின்பாக தன்னுடைய கொடிய வேதனையின் நிமித்தம் யோபு அதிகப்படியாய் புலம்பினாலும், நன்மை-தீமை மீதான தேவனுடைய அதிகாரத்தை இந்த தருணத்தில் மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறான்.
நம்முடைய உணர்வுகளோடு நாம் போராடும் பல்வேறு வழிமுறைகளை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நம்முடைய துக்கத்தை அவரோடு நேர்மையோடும், நிறைவோடும் அனுசரிக்கத் தேவன் அழைக்கிறார். வாழ்க்கைப் போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும், தேவன் என்றும் மாறுவதில்லை என்று உறுதியளிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்து தேவன் நம்மைத் தேற்றி, அவருடைய பார்வையில் சிறந்தவர்களாய் மாற்றுகிறார்.