ஆராதனை பாடல் குழுவினர் “என்னால் கற்பனை செய்ய மட்டுமே முடியும்” என்ற பாடலை பாட தொடங்கியபோது, நான் ஒரு பெண்ணின் பின்னால் தேவாலய பீடத்தில் அமர்ந்தேன். அந்த பெண்ணின் இனிமையான குரல் என்னுடன் இசைந்துபோக,  என் கைகளை உயர்த்தி நான் தேவனைத் துதித்தேன். அவளுடைய சரீர பெலவீனங்களைப் பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அவளுடைய வரவிருக்கும் புற்றுநோய் சிகிச்சையின் போது நாங்கள் ஒன்றாக ஜெபம் செய்ய முடிவு செய்தோம்.

சில மாதங்களுக்குப் பிறகு, வனிதா என்னிடம் தன்னுடைய மரண பயத்தைப் பற்றிச் சொன்னாள். அவளது மருத்துவமனை படுக்கையில் சாய்ந்துகொண்டு, அவளது தலைக்கு அருகில் என் தலையைச் சாய்த்து, மெல்லிய குரலில் ஜெபித்து, அமைதியாக எங்கள் பாடலைப் பாடினேன். சில நாட்களுக்குப் பிறகு வனிதா இயேசுவை நேருக்கு நேர் ஆராதிக்கையில், அவள் எப்படி இருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அப்போஸ்தலராகிய பவுல் மரணத்தை எதிர்நோக்கியிருந்த தமது வாசகர்களுக்கு ஆறுதல் தரும் உறுதியை அளித்தார் (2 கொரிந்தியர் 5:1). நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனை நிறைந்தவைதான், ஆனால் நம்முடைய நம்பிக்கையானது பரலோக வாசஸ்தலத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதுவே இயேசுவுடனான நம்முடைய நித்திய வாழ்வு (வ. 2-4). அவருடன் வாழும் நித்திய ஜீவனுக்காக ஏங்கும்படி தேவன் நம்மை வடிவமைத்திருந்தாலும் (வ. 5–6), அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் இப்போது அவருக்காக வாழும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே தரப்பட்டுள்ளன (வ. 7-10).

நாம் இயேசுவைப் பிரியப்படுத்த வாழ்கையில், அவர் திரும்பி வருவதற்காக அல்லது நம்மை வீட்டிற்கு அழைப்பதற்காகக் காத்திருக்கும்போது, ​​அவருடைய நிலையான பிரசன்னத்தின் சமாதானத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம். நாம் பூமிக்குரிய உடலை விட்டு நித்தியத்தில் இயேசுவோடு சேரும் தருணத்தில் நாம் என்ன அனுபவிப்போம்? நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்!