கடக்க முடியாத தடை எதுவுமில்லை
ஆசிரியராகிய நான் எனது மாணவர்களை கள பயணதிற்காக ஒரு தடை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். அங்குள்ள பல விளையாட்டுகளில் ஒன்றாக சுவர் ஏறுவதும் இருந்தது. அணைத்து மாணவர்களும் அதிலே பங்குபெறும்படியாக உற்சாகத்துடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஏறினார்கள். அந்த எட்டு அடி சுவரை ஏறி சென்ற ஒவ்வொரு மாணவர்களும் பின் வரும் மாணவர்களை பின்னிட்டு பார்க்காதபடிக்கு அந்த கயிற்றின்மேல் முழு நம்பிக்கை வைத்து ஏற ஊக்குவித்தார்கள். ஆனால் அதிலே ஒரு மாணவிக்கு மட்டும் அந்த கயிற்றின்மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நமிக்கையில்லாமல் இருந்தது. "என்னாலே இதை செய்யமுடியாது என்று" நம்பிக்கையில்லாமல் பயத்துடன் கூறினாள். ஆனால் மற்ற மாணவர்கள் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததினால் அவள் அந்த கையிற்றின்மேல் நம்பிக்கை வைத்து வெற்றிகரமாய் ஏறினாள்.
நாம் கடக்க முடியாது என்று நாம் நினைக்கும் பிரச்சினைகள் நமக்கு முன் வரும் போது, அதின் கூடவே சந்தேகங்களை ஏற்படுத்தும் பயமும் பாதுகாப்பற்ற சிந்தனைகளும் வரும். ஆனால் இவைகளின் நடுவே நம்மை திடப்படுத்தும் தேவனுடைய மகிமையும், நன்மையையும், சத்தியமும் பலமான காப்புகவசமாக விசுவாசத்தில் அடங்கும். இந்த நம்பிக்கையின் உறுதி நம் பழைய ஏற்பாட்டின் முன்னோர்களுக்கு தைரியத்தை உண்டாக்கியது. இப்பேர்ப்பட்ட நம்பிக்கை நாம் சிறிய நுணுக்கமான காரியங்கள் மேல் கவனம் செலுத்தாமல் தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி சிந்திக்க கற்பிக்கிறது (எபி 11:1-13, 39). வரும் காலங்களில் நாம் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட மேலான நித்திய கண்ணோட்டத்தில் காண்போம்
(வச. 13-16). அடிக்கடி நாம் இதைப் போன்ற சூழ்நிலைகளை தனியாக சந்திக்கும்போது முழு நம்பிக்கையோடு ஆர்வத்துடன் அவரை தேடுவோம்.
வாழ்வின் கடினமான பாதைகளையும், செங்குத்தான படிகளை கடக்கும்போது தேவன் நம்மை விடுவிப்பார் என்கிற நம்பிக்கை நமக்கு அற்றுப்போகலாம். ஆனால் அவரோ எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்கிற நிச்சயத்தோடு, விசுவாசமாகிய பலத்த கயிற்றை பிடித்துக்கொள்வோம். கடக்க முடியாதென்று நினைத்த பிரெச்சனைகளை கடக்கலாம்.
கடற்கரையில் ஜெபங்கள்
எங்கள் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட நாங்கள் பயணித்த போது, நானும் எனது கணவரும் ஒரு கடற்கரையில் எங்கள் வேதாகமங்களைப் படித்திக்கொண்டிருந்தோம். சுற்றிலும் விற்பனையாளர்கள் கடந்து சென்று தாங்கள் விற்கும் பொருட்களின் விலைகளை கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஒன்றும் வாங்கவில்லையென்றாலும் யாவருக்கும் நன்றி சொன்னோம். ஆனால் பெர்னாண்டோ என்னும் ஒரு விற்பனையாளர் என்னுடைய நிராகரிப்பை கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டு எங்களுடைய நண்பர்களுக்காக நாங்கள் ஏதேனும் வாங்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டு அவன் புறப்படும்போது “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன்.
அவர் திரும்பி என்னைப்பார்த்து “இயேசுவே என் வாழ்வை மாற்றினார்” என்றார். எங்களுடைய நாற்காலிகள் நடுவில் அவர் முழங்காலிட்டு “கர்த்தருடைய பிரசன்னத்தை நான் இங்கே உணருகிறேன்” என்று சொல்லி, ஆகாத மருந்து, குடி பழக்கங்களிலிருந்து ஆண்டவர் தம்மை எப்படி 14 ஆண்டுகளுக்கு முன்னால் விடுவித்தார் என்று பகிர்ந்து கொண்டார்.
சங்கீதங்களில் இருந்து அவர் பாராமல் பாடல்கள் ஒப்புவித்தபோது என் கண்களில் கண்ணீர் மல்கியது. அவரோடு சேர்ந்து நாங்களும் கர்த்தருடைய சமூகத்தை உணர்ந்து அவரைத் துதித்தோம்.
சங்கீதம் 148 ஒரு துதிப்பாடல். அவருடைய கிரியைகள் எல்லாமே கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார்; “அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 5) ..... அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”(வச. 13).
ஆண்டவரை நம்பி நம் தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க அவர் நம்மை அழைத்தாலும், அவர் நம்முடைய நன்றியுள்ள துதிகளையும் விரும்புகிறார் - நாம் கடற்கரையில் இருந்தாலும்கூட.
ஒன்றாக செழித்து வளருதல்
எதிர்அணியின்நபர்ஒருவர் பந்தைகாற்றில்அடித்தபொழுது என் கணவர் ஆலன் அந்த மைதானத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்த பெரிய கோபுர விளக்கின் கீழ் நின்று கொண்டிருந்தார. அந்த பந்தின் மீதே தன் கண்களை வைத்துக்கொண்டு, வேகமாக அந்த மைதானத்தின் மிகுந்த இருட்டான பகுதியை நோக்கி ஓடி அங்கிருந்த சங்கிலி வேலியில் மோதிக்கொண்டார்.
அன்று இரவு அவருக்கு ஒத்தடம் கொடுக்கும்போது “எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “என்னுடைய அணியில் யாராவது என்னை அந்த வேலியைப்பற்றி எச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார் அவர்.
அணிகள் சிறந்த முறையில் இயங்க வேண்டுமென்றால் அவைகள் ஒன்றாக செயல்பட வேண்டும். அணியில் யாராவது ஒருவர் சத்தமிட்டு எச்சரித்திருந்தால் ஆலன் காயப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
திருச்சபையின் உறுப்பினர்களும் ஒன்றாக செயல்பட்டு ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் வண்ணமாகவே வடிவமைக்கக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் நம்மை நினைவூட்டுகிறது.
இதைப்பற்றி பவுல் கூறுவது தேவன் நாம் ஒருவருக்கொருவர் எப்படி துணையாக நிற்க்கிறோம் என்று கவனிக்கிறார் ஏனென்றால் ஒருவர் செய்யும் காரியம் விசுவாசிகளின் சமுகம் முழுவதுமையே பாதிக்கக்கூடும் (கொலோ. 3:13-14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சேவை செய்ய சந்தர்ப்பங்களை முழு அர்பணிப்போடும் சமாதானத்தோடும் பயன்படுத்தும்போது சபை செழித்து வளரும்.
பவுல் தம்முடைய வாசகர்களுக்கு “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:16) என்கிறார். இவ்விதமாக ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அன்பும் உண்மையுமான உறவுகளை வளர்க்கலாம். ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவரைத் துதித்து ஒன்றாக செழித்து வளரலாம்.
தேவன் நினைவுகளை வகுத்தார்
என்னுடைய வளர்ந்த மகன் ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்த போது, என் தந்தையின் வேலையில்லா ஆண்டில் தேவனின் தொடர்ந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பையும் குறித்து ஞாபகப்படுத்தினேன். என்னுடைய தாயார் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி தோற்றுப்போனபோது, தேவன் எங்கள் குடும்பத்தை பெலப்படுத்தின சூழ்நிலையை நினைவுகூர்ந்தேன். வேதத்தில் தேவனுடைய கிருபையை விவரிக்கும் சூழ்நிலைகளை எடுத்துரைத்து, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வதில் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தினேன். தேவன் வகுத்த குடும்ப நடைபாதையில் என்னுடைய மகனை அழைத்துச்சென்றேன். எங்ளுடைய குடும்பத்தின் பள்ளத்தாக்குகள் மற்றும் மலையுச்சி போன்ற சூழ்நிலைகளில் தேவன் எப்படி சார்திருக்கக்கூடியவராய் இருந்தார் என்பதை அவனுக்கு நினைப்பூட்டினேன். நாங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், கொண்டாடிக்கொண்டிருந்தாலும், தேவனுடைய பிரசன்னம், அன்பு மற்றும் கிருபை எங்களுக்கு போதுமானதாயிருந்தது.
இருப்பினும், இந்த விசுவாசத்தை பெலப்படுத்தும் யுக்தி என்னுடைது என்று நான் கோரினாலும், எதிர்கால சந்ததியினர் தேவனை விசுவாசிக்க தூண்டுவதற்கு நாம் நிகழ்சிகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் வடிவமைத்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் தேவன் செய்த எல்லாவற்றையும் கண்டதை நினைவுகூர்ந்த போது, அவர் நம்பிக்கையின் உருளைக்கற்களை அவர்களுடைய தெய்வீகமாக வகுத்த நடைபாதையில் வைத்தார்.
இஸ்ரவேலர்கள், தேவனைப் பின்பற்றும்போது அவர் தம்முடைய வாக்குதத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்கு சாட்சியாயிருந்தனர். (உபா. 4:3-6). அவர், அவர்களுடைய ஜெபத்தை எப்போதும் கேட்டும் பதிலளித்தும் இருக்கிறார். (வச. 7). இளைய தலைமுறையினருடன், மகிழ்ச்சியுடன் கடந்த கால அனுபவங்களை இஸ்ரவேலர்கள் நினைவிற்கு கொண்டு வந்து (வச. 9), ஒரே சத்திய தேவனுடைய பரிசுத்தமுள்ள மற்றும் பாதுகாக்கப்பட்ட வார்த்தைகளை பகிர்ந்துக்கொண்டனர் (வச. 10).
நம்முடைய மகாப் பெரிய தேவனுடைய மகத்துவம், இரக்கம், மற்றும் நெருக்கமான அன்பைப் பற்றி நாம் கூறும்போது அவருடைய உறுதியான நீடித்த நம்பகத்தன்மை நம்முடைய திடநம்பிக்கையும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்துகிறது.
தேவன் புரிந்துக்கொள்கிறார்
சமீபத்திய நடவடிக்கைக்குப்பிறகு, மாதுரியின் ஏழு வயது மகன் ரோஹித், தனது புதிய பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துக்கொள்ளத் தயாரானப்போது வம்பு செய்தார்.
மாற்றம் கடினமானது என்று அவள் புரிந்துக்கொண்டதை சொல்லி அவனை மாதுரி ஊக்குவித்தாள். ஆனால் ஒரு காலையில் ரோஹித்தின் அவனை மீறிய நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. மாதுரி இரக்கத்துடன் “எது உன்னை தொந்தரவு செய்கிறது மகனே? என்று கேட்டாள்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு “எனக்கு தெரியவில்லை அம்மா. எனக்கு பல உணர்வுகள் உள்ளன” என்று ரோஹித் கூறினான்.
அவனை ஆறுதல் படுத்தும்போது மாதுரியின் இருதயம் கனத்தது. அவனுக்கு உதவ வேண்டி இந்த காரியம் அவருக்கும் கடினமானதாக இருக்கிறது என்பதை பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய விரக்தியை புரிந்துக்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ முடியாத நேரத்திலும், எல்லாவற்றிலும் தேவன் அருகிலிருப்பார் என்று உறுதியளித்தார். “பள்ளி ஆரம்பிக்கும் முன் உன் தோழர்களைப் சந்திப்போம்” என்று கூறினாள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிகமான உணர்வுகள் இருந்தாலும் தேவன் அதைப் புரிந்துக்கொள்ளுகிறார் என்ற நன்றியறிதலோடு அவர்கள் திட்டமிட்டார்கள்.
சங்கீதம் 147ஐ எழுதினவர் தன்னுடைய விசுவாச பயணம் முழுவதும் பெரும் உணர்ச்சிகளை அனுபவித்தார். எல்லாம் அறிந்தவர், எல்லோரையும் பராமரிப்பவர், உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்பட்ட காயத்ததை ஆற்றுகிறவர் - இவரைப் துதிப்பதால் வரும் நன்மைகளை அறிந்துக்கொண்டார். (வச. 1-6). அவர்களுக்கு தேவன் வழங்கும் வழிகளுக்காகவும், தமக்கு பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (வ 11) என்றும் அவரைத் துதித்தார்
எப்போதும் மாறும் நம்முடைய உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள நாம் போராடும்போது, நாம் தனிமையாக அல்லது ஊக்கமில்லாமல் இருப்பதாக உணர வேண்டியதில்லை. என்றும் மாறாத தேவனின் நிபந்தனையற்ற அன்பிலும், வரம்பற்ற புரிதலிலும் நாம் சார்ந்துக்கொள்ளலாம்.
தேவனோடு பணிசெய்தல்
1962 ஆம் ஆண்டு, பில் ஆஷ் என்பவர் மெக்ஸிக்கோவிற்குச் சென்றிருந்த போது, ஓர் அநாதை இல்லத்திற்கு காற்றாலையில் இயங்கக் கூடிய கைப் பம்ப்களை பொருத்திக் கொடுத்தார். 15 ஆண்டுகள் கழித்து, தேவையுள்ள கிராமங்களுக்கு தூய்மையான நீர் வழங்குவதன் மூலம் தேவப் பணி செய்யும்படி தூண்டப்பட்டார். பில், லாபநோக்கமில்லாத ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். “கிராமப் புற ஏழைமக்களுக்குப் பாதுகாப்பான குடி நீரை வழங்குவதற்கு ஆர்வமுடைய மக்களை கண்டுபிடிப்பதில் என்னுடைய நேரம் அனைத்தையும் செலவிடும் படி தேவன் என் கண்களைத் திறந்தார்” என்று அவர் கூறினார். பிற்காலத்தில், 100க்கும் மேலான நாடுகளில் இருந்து போதகர்களும், ஊழியர்களும் கேட்டுக் கொண்டதிலிருந்து உலகெங்கும் பாதுகாப்பான குடி நீர் தேவையிருப்பதை அறிந்து கொண்டார், எனவே பில் மற்றவர்களையும் இந்த ஊழியத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைத்தார்.
பல்வேறு வகைகளில், நாம் தேவனோடும், மற்றவர்களோடும் இணைந்து குழுவாகப்பணி செய்ய தேவன் நம்மை அழைக்கின்றார். கொரிந்து சபை மக்கள், தாங்கள் தெரிந்து கொண்ட போதகரைக் குறித்து தர்க்கம் செய்த போது, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னை தேவனுடைய வேலையாள் எனவும், அப்பொல்லோவின் குழுவில் சேர்ந்து பணிபுரிபவன் எனவும், ஆவியின் வளர்ச்சிக்கு தேவனையே முழுமையாகச் சார்ந்திருப்பவன் எனவும் (1 கொரி.3:1-7) கூறுகின்றார். எல்லா வேலைகளுக்கும் தேவன் கூலியைக் கொடுப்பார் (வ.8) எனவும் நினைவுபடுத்துகின்றார். பவுல், பிறரோடு சேர்ந்து, தேவனுக்குப் பணி செய்வதை தனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகின்றார். தேவன் தம் அன்பினால் நம்மை மாற்றியிருக்க, நாமும் ஒருவரையொருவர் தாங்குவோம் என பவுல் நம்மை ஊக்கப் படுத்துகின்றார் (வ.9).
நம்முடைய வல்லமை பொருந்திய பிதாவுக்கு, தன்னுடைய பெரிய வேலையை நிறைவேற்றி முடிக்க, நம்முடைய உதவி தேவை இல்லையெனினும், அவர் நம்மை பெலப் படுத்தி, அவரோடு கூட பங்காளிகளாக இருக்க அழைக்கின்றார்.
செயல்படும் தேவ இரக்கம்
ஒரு பெண் என்னைத் தவறாக நடத்தியதோடு, என்னைக் குற்றப்படுத்தி, என்னைக் குறித்து தவறாகப் பிறரிடமும் கூறிய போது, என்னுடைய கோபம் அதிகரித்தது. நான், அவள் செய்த காரியத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அவள் நடந்து கொண்ட விதத்தால், நான் கஷ்டப்படுதைப் போன்று, அவளும் கஷ்டம் அநுபவிக்கட்டும் என்று எனக்குத் தலைவலி தோன்றும் வரை, என்னுடைய கோபத்தால் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தலைவலி நீங்குமாறு ஜெபித்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய குற்றத்தை உணர்த்தினார். நான் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, எப்படி தேவனிடம் விடுதலை தரும்படி கெஞ்ச முடியும்? அவர் என்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்று நான் நம்பும் போது, இந்த சூழ்நிலையையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று நான் ஏன் நம்பக் கூடாது? காயப்படுத்துகின்ற மக்கள், பிறரை அடிக்கடி மற்றவரை காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பர் என்பதை அறிந்திருந்த நான் அந்த பெண்ணை மன்னிப்பதற்கு தேவனிடம் உதவி கேட்டதோடு, மனம் பொருந்தவும் முயற்சித்தேன்.
அநியாயமாக நாம் நடத்தப் படும் போது, தேவன் மீது நம்பிக்கையோடு இருப்பதின் கஷ்டத்தை சங்கீதக்காரனான தாவீது அறிந்திருந்தார். ஓர் அன்பான பணிவிடைக் காரனாக இருக்க தாவீது எவ்வளவோ முயற்சித்த போதும், பொறாமை கொண்ட சவுல் அரசன், தாவீதை கொல்ல விரும்பினான் (1 சாமு.24:1-2). தேவன் தன்னுடைய திட்டத்தை செயல் படுத்தி, அவனை அரசனாக்கும்படி தயாரித்துக் கொண்டிருந்த போது, அவன் கஷ்டங்களைச் சகித்தான். ஆனாலும் அவன், பழிவாங்குவதையல்ல, தேவனை மகிமைப் படுத்துவதையே தெரிந்து கொண்டான் (வ.3-7). அவன் சவுலோடு மனம் பொருந்தும்படி, காரியங்களைச் செய்தான், அதன் பலனை தேவனுடைய கரத்தில் கொடுத்து விட்டான் ( வ.8-22).
தவறு செய்கின்றவர்கள் தண்டிக்கப்படாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். அநியாயத்தின் நிமித்தம் நாம் கஷ்டங்களைச் சகிக்கின்றோம். தேவனுடைய இரக்கம் நம்முடைய இருதயங்களிலும், மற்றவர்களின் இருதயங்களிலும் கிரியை செய்யும் போது, அவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க முடியும், அவர் நமக்கு ஆயத்தம் பண்ணிவைத்துள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இருளில் வெளிச்சம்
நாங்கள் குடியேறியுள்ள புதிய பட்டணத்தை, அநேக இடியோடு கூடிய புயல்கள் தாக்கியதால் காற்றின் ஈரப்பதம் உயர்ந்தது, காலைப் பொழுதில் வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மாலையில் நான் என்னுடைய நாய் ஜிம்மியை நடக்க அழைத்துச் சென்றேன். என் நாட்டின் வேறொரு பகுதிக்கு, என்னுடைய குடும்பம் நகர்ந்துள்ளதால், சந்திக்க வேண்டிய அநேக சவால்கள் என்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்தன. எங்களுடைய உயர்ந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் வெகுதொலைவில் அநேக காரியங்கள் போய் கொண்டிருந்ததால், ஏமாற்றம் ஒரு புறமிருக்க, நான் என்னுடைய நாயை மெதுவாக நடத்திச் சென்று, அங்குள்ள புற்களை முகர்ந்து கொள்ளச் செய்தேன். எங்கள் வீட்டின் அருகில் ஓடிய ஓடையின் ஒலியைக் கேட்டேன். சிறிய வெளிச்சம் விட்டு விட்டு வந்தது, ஓடையின் அருகிலுள்ள கொடிகளில் மலர்ந்துள்ள கொத்துக் கொத்தான காட்டு மலர்களைச் சுற்றி வெளிச்சம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவை மின்மினிப் பூச்சிகள்!
இருளைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த மின்னும் ஒளியைப் பார்த்த என்னை தேவன் சமாதானத்தால் நிரப்பினார். நான் சங்கீதக்காரனின் பாடலை நினைத்துப் பார்த்தேன். “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்” (சங். 18:28). தேவன் அவருடைய இருளை வெளிச்சமாக்குவார் என உறுதியாகக் கூறிய தாவீது, தேவன் அவருடைய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்வார், அவரே தன்னைப் பாதுகாக்கிறவர் (வ.29-30) என்று கூறுகின்றார். தேவன் தரும் பெலத்தால், அவருடைய பாதையில் வரும் எத்தகைய எதிரியையும் மேற்கொள்ளுவேன் (வ.32-35) என்கின்றார். ஜீவனுள்ள தேவன் எல்லா சூழ் நிலைகளிலும் அவரோடிருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்ட தாவீது, எல்லா ஜாதிகளுக்குள்ளும் கர்த்தரைத் துதித்து, பாடல்களால் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்துகின்றார் (வ.36-49).
வாழ்க்கையில் எதிர்பாராத புயல்களின் வழியே நாம் கடந்து கொண்டிருந்தாலும், மழை நின்ற பின்னுள்ள அமைதியை அநுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, தேவனுடைய பிரசன்னத்தின் சமாதானம், இருளை அகற்றி, நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றது. நம்முடைய ஜீவனுள்ள தேவனே நமக்கு பெலனும், அடைக்கலமும், நம்மைக் காப்பவரும், விடுவிக்கிறவருமாய் இருக்கிறார்.
ஆழ்ந்த விசுவாசம்
அநேக மரங்கள் 500 ஆண்டுகளையும் அதற்கும் மேலாகவும் தாண்டி வாழ்கின்றன. ஆரம்பத்தில் அவற்றின் வளைந்த கிளைகள் உயரமாகவும் படர்ந்தும் காணப்படும். அவற்றின் இலைகளுக்கு ஊடாக குளிர்ந்த காற்று வீசும், சூரிய கதிர் அந்த இடைவெளியில் ஊடுருவி, மரத்தின் அடியில், அசைந்தாடும் நிழலைத் தோற்றுவிக்கும். தரைக்கு அடியில்தான் மிகவும் விரிவடைந்த வேர்த் தொகுதி காணப்படுகின்றது. இது, மரத்திலிருந்து செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து, தான் சார்ந்து வாழக் கூடிய ஊட்டச்சத்தைத் தேடுகின்றது. அந்த ஆணிவேரிலிருந்து ஏராளமான கிளைவேர்கள் தோன்றி, கிடைமட்டமாக பரவுகின்றது. இவை மரத்திற்குத் தேவையான நீர் சத்தையும் ஊட்டத்தையும் வாழ் நாள் முழுவதும் கொடுக்கின்றன. இந்த வலைப் பின்னல் போன்ற வேர்த் தோகுதி, மரத்தைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து, மரத்தைத் தாங்கிப் பிடிப்பதோடு, அதன் தண்டு தொகுதியை உறுதியாக நிறுத்தும் நங்கூரம் போல செயல் படுகின்றது.
இந்த பிரமாண்டமான மரத்தைப் போல, நமக்கு வாழ்வு தரும் வளர்ச்சி மேற்புறதிற்கு உள்ளே நடைபெறுகின்றது. இயேசு விதைப்பவன் உவமையை தன்னுடைய சீஷர்களுக்கு விளக்கிய போது, நாம் ஒவ்வொருவரும் பிதாவோடு, தனிப்பட்ட முறையில் உறுதியாக நிலைத்திருக்கும் உறவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். நாம் வேதாகமத்தின் மூலம், தேவனைக் குறித்த அறிவில் வளரும் போது, நம்முடைய விசுவாச வேர்களை பரிசுத்த ஆவியானவர் தாங்கிப் பிடிப்பார். மாறுகின்ற சூழலைக் கொண்டுள்ள வாழ்வில் சோதனைகளோ, துன்பங்களோ, கவலையோ எது வந்த போதும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு தேவன் உதவி செய்கின்றவராய் இருக்கின்றார் (மத்.13:18-23).
நம்முடைய அன்புத் தந்தை அவருடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை பெலப்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை மாற்றுகின்றார். நம்முடைய ஆழ்ந்த வேர் கொண்ட விசுவாசம், நம்மில் கனிகளை உருவாக்கும், இதனை நம்மைச் சுற்றிலும் இருப்பவகள் காண்பர்.