தேவன் தருவதை உபயோகித்தல்
1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.
ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, மோசே “அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்” (4:1) என்று தடுமாறினார். தேவன், “உன் கையில் இருக்கிறது என்ன” (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், “அது சர்ப்பமாயிற்று” (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).
நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.
கூடியிருப்பது நலம்
ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் “மர்மரிங்ஸ்” எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே “மர்மரிங்ஸ்” முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.
நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று பிரசங்கி கூறுகிறார். “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;” (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.
ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட, நாம் கூடியிருப்பதே நலம்.
ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்
என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த நகைகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.
இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார்.
மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக.
- விண் கோலியர்
தேவனின் மீது பதிந்திருக்கும் பார்வை
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போதகர் தாமஸ் சால்மர்ஸ், குறுகலான மலைப்பாதையின் ஓரமாக சென்ற ஒரு குதிரை வண்டியின் பயணத்தைப் பற்றிய கதையைச் ஒன்றைச் சொன்னார். அந்த வண்டியின் குதிரைகளில் ஒன்று மிரண்டதினால் குதிரை வண்டி ஓட்டுநர், மலைப்பாதையில் இருந்து வண்டி விழாமல் விபத்தை தவிர்க்க மீண்டும் மீண்டும் சவுக்கினால் அதை அடித்தார். அந்த ஆபத்தான பகுதியில் தாண்டியபின் சால்மர்ஸ் வண்டி ஓட்டுநரிடம், ஏன் அந்த அளவுக்கு சவுக்கினால் அடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், “குதிரைகளின் கவனத்தை திசை திருப்பவே நான் அப்படிச் செய்தேன். அந்நேரத்தில் குதிரைகளின் கவனத்தை வேறொரு இடத்தில் திருப்ப வேண்டிய அவசியம் இருந்தது,” என்றார்.
இந்த உலகத்தில் எங்கும் நம்மைச் சுற்றிலும் அச்சுறுத்தல்களும் அபாயங்களும் நிறைந்திருக்கின்றன, இப்படிப்பட்ட நேரத்தில் நாம் அனைவரின் கவனமும் திசைதிருப்பப் படுவது அவசியமாகிறது. ஆனால், அது வெறும் மனதளவில் மட்டுமல்ல ஒரு உளவியல் யுக்தியாகும். இந் நேரத்தில் நமக்குத் தேவையானது இப்படிப்பட்ட பயங்களையும் விட நிதர்சமான உண்மையில் நம் மனதை பதிப்பதுதான் அவசியம். ஏசாயா யூத நாட்டு மக்களுக்கு கூறியது போல, நாம் தேவனில் நம் சிந்தையை பதிப்பதே உண்மையான தேவை. “ உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் ” (ஏசாயா 26:3).மேலும், “ கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார் ”(வசனம் 4 ).
சமாதானம்—இது தேவனை நம்பி அவரில் நிலைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசாகும். இந்த சமாதானம் நம் மனக்குழப்பங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் யுக்தியாக மட்டுமல்லஅதற்கும் மேலானது. யாரெல்லாம் தங்களடைய எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் மற்றும் கவலைகளையும் தேவனாகிய கர்த்தரிடம் ஒப்படைதுள்ளார்களேர அவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் மாறுபட்ட புதிய வாழ்கை முறையை அவர்களுக்கு அருளுகிறார்.
- விண் கோலியர்
புனிதர் நிக்
செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார்.
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன் நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21).
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.
மேய்ப்பனின் சத்தத்தை அறிதல்
நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4).
நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம்.
ஆபத்தில் தலைக்குனிவு
1892 ஆம் ஆண்டில், காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளர் தற்செயலாக எல்பே நதி வழியாக ஜெர்மனியின் முழு நீர் விநியோகமான ஹாம்பர்க்கிற்கு நோயைப் பரப்பினார். வாரங்களுக்குள், பத்தாயிரம் குடிமக்கள் இறந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ராபர்ட் கோச், காலரா நோயானது நீரின் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். கோச்சின் கண்டுபிடிப்பு, பெரிய ஐரோப்பிய நகரங்களில் உள்ள அதிகாரிகளை தங்கள் தண்ணீரைப் பாதுகாக்க வடிகட்டுதல் அமைப்புகளில் முதலீடு செய்யத் தூண்டியது. இருப்பினும் ஹாம்பர்க் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. செலவுகளை மேற்கோள் காட்டி, சந்தேகத்திற்குரிய அறிவியலைக் குற்றம் சாட்டி, அவர்களின் நகரம் பேரழிவை நோக்கிக் கொண்டிருந்தபோது தெளிவான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்.
பிரச்சனைகளைக் கண்டும் செயல்பட மறுக்கும் நம்மைப் பற்றி நீதிமொழிகள் புத்தகம் நிறைய கூறுகிறது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (27:12). ஆபத்து வருகிறது என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தும்போது, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஏறெடுப்பது தான் பொது அறிவு. துரிதமாய் செல்பட்டால் அதின் போக்கை நம்மால் மாற்றக்கூடும். அல்லது அவர் அளிக்கும் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் நம்மை தயார் செய்துகொள்ளக்கூடும். எதுவுமே செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். நாம் அனைவரும் எச்சரிக்கை அறிகுறிகளைத் தவறவிடாமல், பேரழிவில் கவனம் செலுத்தி அதை எப்படியாவது தடுக்க முயற்சிக்கலாம். “பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (வச. 12).
வேதாகமத்திலும் இயேசுவின் வாழ்க்கையிலும், நாம் பின்பற்ற வேண்டிய பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார். நாம் நிச்சயமாக சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி எச்சரிக்கிறார். நாம் முட்டாளாக இருந்தால், ஆபத்தில் தலைகுனிந்து முன்னேறுவோம். மாறாக, அவர் கிருபையால் நம்மை வழிநடத்தும்போது, நாம் அவருடைய ஞானத்திற்கு செவிசாய்த்து பாதையை மாற்றுவோம்.
நமக்கு வேண்டிய ஞானம்
ஜான் எம். பாரி தனது பிரபல புத்தகமான “தி கிரேட் இன்ஃப்ளூயன்ஸா”வில் 1918 காய்ச்சல் தொற்றுநோய் பற்றிய கதையை விவரிக்கிறார். சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பில் இருந்து பிடிபடுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய பாதிப்பை எவ்வாறு எதிர்பார்த்தார்கள் என்பதை பாரி வெளிப்படுத்துகிறார். முதல் உலகப் போர், நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் அகழிகளில் அடைக்கப்பட்டு, எல்லைகளைத் தாண்டிச் செல்வது, புதிய வைரஸ்களைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் அழிவைத் தடுக்க இந்த அறிவு பயனற்றது. சக்திவாய்ந்த தலைவர்கள், போர் மேளங்களை அடித்து, வன்முறையை செயல்படுத்தினர். தொற்றுநோய் நிபுணர்கள், போரின் படுகொலையில் கொல்லப்பட்ட இருபது மில்லியனையும் சேர்த்து ஐம்பது மில்லியன் மக்கள் தொற்றுநோயில் இறந்ததாக மதிப்பிடுகின்றனர்.
நம்முடைய மாம்சீக அறிவானது தீமையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள போதுமான தீர்வல்ல என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறோம் (நீதிமொழிகள் 4:14-16). நாம் அபரிமிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளை திறமையாய் செயல்படுத்தினாலும், நாம் ஒவ்வொருவரையும் காயப்படுத்தக்கொள்வதை நிறுத்தமுடியவில்லை. காரிருளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துன்மார்க்கரின் பாதையில் நாம் செல்ல முடியாது. நாம் சிறந்த அறிவை பெற்றிருந்தாலும், எதில் நாம் இடறுகிறோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது (வச. 19).
ஆகையினால் தான் நாம் ஞானத்தையும் புத்தியையும் சம்பாதிக்க அறிவுறுத்தப்படுகிறோம் (வச. 5). ஞானமானது, நம்முடைய புத்தியில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. நமக்கு தேவையான மெய்யான தெய்வீக ஞானமானது தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது. நம்முடைய அறிவு எப்போதும் குறைவுள்ளது. ஆனால் நமக்கு தேவையானதை அவருடைய ஞானம் நமக்கு அருளுகிறது.
அழகான மறுசீரமைப்பு
மகோடோ ஃபுஜிமுரா என்னும் புகழ்பெற்ற கலைஞரின் பிரபல புத்தகமான “கலை ூ விசுவாசம்: இறையியல் ஆக்கம்” (யுசவ ூ குயiவா: யு வுhநழடழபல ழக ஆயமiபெ) என்ற புத்தகத்தில், ஜப்பானியர்களின் தொன்மையான கிண்ட்சுகி மண்பாண்டக்கலையைக் குறித்து விவரிக்கிறார். அதில், கலைஞர் உடைந்த மட்பாண்டங்களை (முதலில் தேநீர் பாத்திரங்கள்) எடுத்து, துண்டுகளை மீண்டும் அரக்குடன் சேர்த்து, விரிசல்களில் தங்கத்தை இழைக்கிறார். “இந்த கிண்ட்சுகி பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்களை சரிசெய்வதோடல்லாது, அது முன்பிருந்த அழகைக்காட்டிலும் அதிக அழகாய் மாற்றுகிறது” என்று சொல்லுகிறார். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு போர்வீரனின் உடைந்துபோன விருப்பமான கோப்பையை அழகாக மீட்டெடுத்த முயற்சியிலிருந்து இந்த கலை தோன்றியது. பின்னர் இது மிகவும் மதிப்புமிக்க விரும்பமான கலையாக மாறியது.
இந்த வகையான மறுசீரமைப்பை கலைநயத்துடன் தேவன் உலகத்தில் செயல்படுத்துவதை ஏசாயா விவரிக்கிறார். நாம் நமது கிளர்ச்சியால் உடைந்து, நமது சுயநலத்தால் சிதைந்தாலும், தேவன் “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (65:17) என்று வாக்குப்பண்ணுகிறார். அவர் பழைய உலகத்தை பழுதுபார்ப்பது மட்டுமல்லாமல், அதை முற்றிலும் புதியதாக மாற்றவும், நமது உடைந்த வாழ்க்கையை எடுத்து, புதிய அழகுடன் மின்னும் உலகத்தை வடிவமைக்கவும் திட்டமிடுகிறார். மேலும் அந்த புதிய வாழ்க்கையில் “முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு,” “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை” (வச. 16-17). இந்த புதிய சிருஷ்டிப்பின் மூலம் தேவன் நம்முடைய தவறுகளை மூடிமறைக்கப்போவதில்லை; மாறாக, அசிங்கமான விஷயங்களை அழகாகவும், செத்த காரியங்களை மீண்டும் சுவாசிக்கசெய்யும் படைப்பாற்றலையும் கட்டவிழ்ப்பார்.
நம்முடைய சிதைந்துபோன வாழ்க்கையைக் குறித்த நாம் கவலைப்பட தேவையில்லை. தேவன் தன்னுடைய அழகான மறுசீரமைத்தலை செயல்படுத்துகிறார்.