இக்கபோத் விலகிப் போயிற்று
“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.
இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).
அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).
இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார்.
பாளயத்துக்குப் புறம்பே
நான் வளர்ந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை சந்தை நாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரை நினைவுகூறுகிறேன். ஹேன்சன்ஸ் நோயினால் (தொழுநோய்) விரல்களும், கால்விரல்களும் அரித்து விட்ட நிலையில், அவள் தன்னுடைய பாயின் மீது குனிந்து ஒரு சுரைக்காயைக் கொண்டு தன்னுடைய விளைச்சலை எடுத்துக்கொண்டு இருப்பாள். சிலர் அவளைத் தவிர்த்தனர். அவளிடம் தவறாமல் வாங்குவதை என் தாயார் ஒரு முக்கிய விஷயமாகக் கருதினார். நான் அவளை சந்தை நாட்களில் மட்டும் பார்ப்பேன். பின்னர் அவள் ஊருக்கு வெளியே மறைந்து விடுவாள்.
பழங்கால இஸ்ரவேலர் காலத்தில், தொழுநோய் உள்ளவர்கள் பாளயத்துக்கு புறம்பே வாழ வேண்டும். இது ஒரு கேவலமான வாழ்க்கை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து “அவர்கள் தனியே குடியிருக்க வேண்டும்” (லேவியராகமம் 13:46) என்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. பாளயத்துக்குப் புறம்பே பலியிடப்பட்ட காளைகளின் சடலங்கள் எரிக்கப்பட்டன (4:12). நீங்கள் இருக்கவேண்டிய இடம் பாளயத்துக்குப் புறம்பே அல்ல.
இந்தக் கடினமான உண்மை எபிரெயர் 13ல் இயேசுவைக் குறித்து சொல்லப்படும் கூற்றுக்கு உயிர் கொடுக்கிறது. “ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் போகக்கடவோம்” (வச. 13) நாம் எபிரெயருடைய பலி செலுத்தும் முறையை ஆராயும்போது, இயேசு நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும்.
நாம் பிரபலமாக இருக்கவும், கௌரவப்படவும், வசதியான வாழ்க்கை வாழவும் விரும்புகிறோம். ஆனால் “பாளயத்துக்குப் புறம்பே” அவமானம் இருக்கும் இடத்திற்குச் செல்ல தேவன் அழைக்கிறார். அங்கு தான் ஹேன்சன்ஸ் நோய் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை நாம் பார்க்கமுடியும். அங்குதான் உலகத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியும். அங்கு தான் இயேசுவையும் சந்திக்க முடியும்.
செயல்படும் விசுவாசம்
இராணுவ சதியினால் சாமின் அப்பா அவருடைய உயிரைக் காக்கவேண்டி வீட்டைவிட்டு ஓட நேர்ந்தது. மாத வருமானம் ஒரேயடியாய் நின்று போனதினால், தன் அண்ணனை உயிரோடு வைத்திருக்கும் மருந்தை வாங்க பணமில்லை. இந்த நிலைக்கு ஆளாக நாங்கள் என்ன பாவம் செய்தோம்! என்று சாம் தேவனை நோக்கிக் கேட்டான்.
இயேசுவை நேசிக்கும் ஒருவர் இந்த குடும்பத்தின் சூழலை அறிந்து, மருந்து வாங்குவதற்கான பணத்தையும் அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் வாங்கிச் சென்றார். முன் பின் தெரியாத ஒரு நபரிடமிருந்து உதவியை பெறுவது ஆச்சரியமான ஒன்று. “இந்த ஞாயிற்றுக் கிழமை இவர் போகும் அந்த திருச்சபைக்கு நாமும் செல்வோம்” என்று அவனுடைய தாயார் கூறினார். சாமின் ஆதங்கம் தணிய ஆரம்பித்தது. அவனுடைய குடும்பத்தில் ஒருவர்பின் ஒருவராக இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும் நேர்மையான வாழ்க்கை முறையில் மற்றவர்களின் தேவையை சந்திப்பதை யாக்கோபு முக்கியத்துவப்படுத்துகிறார். மேலும் “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” (யாக். 2:15-16) என்று யாக்கோபு கேட்கிறார்.
நம்முடைய கிரியைகள் நம்முடைய விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, அந்த கிரியைகள், அவர்களின் இறை நம்பிக்கையை தேர்ந்தெடுக்க உதவும். சாம், பிற்காலத்தில் போதகராகவும் சபை ஸ்தாபகராகவும் மாறினான். அவர்களுக்கு உதவிசெய்த அந்த மனிதரை “வழிகாட்டும் அப்பா” என்று அழைப்பான். இயேசுவின் அன்பை அவருக்கு காண்பித்த அந்த மனிதரை தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனாய் அங்கீகரித்துக்கொண்டான்.
தேவனுக்காய் ஏங்குதல்
ரோஹன் மற்றும் ரீனா தம்பதியினர் வீட்டைக் காலி செய்து ஐந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு வீட்டிற்கு குடிபோனார்கள். அவர்களின் அந்த இடமாற்றத்தை விரும்பாத “பகீரா” என்னும் அவர்களின் பூனை திடீரென்று காணாமல் போனது. ஒருநாள் சமூக வலைதளம் ஒன்றில் தங்கள் பழைய வீட்டைக் காணநேர்ந்தது. அதில் பகீரா இருந்ததைக் கண்டனர்.
இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போய் அவர்களின் பூனையை மீட்டுக்கொண்டு வந்தனர். பகீரா மீண்டும் ஓடியது. எங்கு போனது என்று தெரியுமா? இந்த முறை அவர்களின் பழைய வீட்டை வாங்கின அந்த குடும்பமே பகீராவை தங்கள் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாக ஒத்துக்கொண்டனர். இது திரும்பிப்போவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. பகீரா எப்போதும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு திரும்பிவிடுகிறது.
நெகேமியா, சூசாவின் ராஜ அரண்மனையில் வேலை செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இருதயம் அங்கே இல்லை. அவன் தன்னுடைய “பிதாக்களின் கல்லறை” இருக்கும் நகரம் பாழாவதைக் குறித்த செய்தியைக் கேள்விப்படுகிறான் (நெகேமியா 2:3). ஆகையினால் நெகேமியா ஜெபிக்கும்போது, “நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்” (1:8-9) என்று ஜெபிக்கிறான்.
என் வீடு எங்கேயோ என் இருதயமும் அங்கே இருக்கும். நெகேமியா விஷயத்தில் வீட்டிற்காய் ஏங்குவது என்பது புவியியல் அமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கம். ஆம்! தான் அதிகம் நேசிக்கிற தன் தேவனோடுள்ள உறவு. “என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலம்” என்பது எருசலேம் நகரம்.
தேவன் இருக்கிறார்
ஆப்ரே தன் வயதான அப்பாவிற்காக தோலினால் தைக்கப்பட்ட ஒரு மேலுறையை வாங்கினாள். ஆனால் அதை அணிவதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே அந்த தோல் மேலுறையின் பாக்கெட்டில் ஒரு உற்சாகப்படுத்தும் வாக்கியம் எழுதப்பட்ட துண்டுகாகிதத்தையும், அத்துடன் 20 டாலர்கள் பணத்தையும் வைத்து, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாள்.
சமாதானமில்லாத தன் குடும்பச் சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாத கெல்லி, தன் வீட்டை விட்டு வெளியேறினான். போகும்போது அவன் மேலுறையை எடுக்க மறந்துவிட்டான். அவனுக்கு தெரிந்த ஒரே இடம், அவனுக்காய் ஜெபிக்கும் அவனுடைய பாட்டி வீடு. 90 மைல்கள் தூரத்திலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். குளிரின் தாக்கம் அதிகமாய் இருந்ததால், அவனுக்கு ஒரு மேலுறையை வாங்க வேண்டும் என்று பாட்டி சொன்னார்கள். அருகிலிருந்த மிஷன் கடையை நாடி, கெல்லி தனக்கு பிடித்த ஒரு மேலுறையைத் தேர்ந்தெடுத்தான். அதின் பாக்கெட்டில் கைவிட்டுப்பார்த்த கெல்லியின் கைக்கு, 20 டாலர்கள் பணமும் ஆப்ரேயின் உற்சாக வார்த்தை எழுதப்பட்டிருந்த துண்டு காகிதமும் சிக்கியது.
தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவே யாக்கோபும் தன்னுடைய வீட்டை விட்டு வெறியேறினான் (ஆதியாகமம் 27:41-45). இரவில் ஓரிடத்தில் தங்கி, தூங்கும்போது, தேவன் சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்பட்டு, “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து” நடத்துவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். உடனே யாக்கோபு, “தேவன் என்னோடே இருந்து... உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்(தால்)... கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்” என்று பொருத்தனை செய்கிறான் (வச. 20-21).
யாக்கோபு அந்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி, அந்த இடத்திற்கு “தேவனுடைய வீடு” என்று பேரிட்டான் (வச. 22). கெல்லி, ஆப்ரேயின் துண்டுகாகிதத்தையும் 20 டாலர்கள் பணத்தையும் நினைவுகூரும்பொருட்டு, போன இடத்திற்கெல்லாம் கொண்டு சென்றான். இந்த இரண்டுமே, நாம் போகுமிடத்திலெல்லாம் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
காணாத பார்வை
யூரி ககரின் விண்வெளியில் பயணித்த முதல் மனிதரான பிறகு, அவர் ரஷ்ய கிராமப்புறங்களில் பாராசூட் பயணம் செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண் ஆரஞ்சு உடையணிந்த இந்த விண்வெளி வீரரைக் கண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இரண்டு பாராசூட்டுகளை இழுத்துச் சென்றுக்கொண்டிருந்தார். “நீங்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கிறீர்களா?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “உண்மையில், நான் அப்படிதான் வந்தேன்,” என்று அவர் கூறினார்.
சோவியத் தலைவர்கள் இந்த வரலாற்று நிகழ்வை மார்க்க எதிர்ப்பு பிரச்சாரமாக மாற்றினர். “ககரின் விண்வெளிக்குச் சென்றார், ஆனால் அவர் அங்கு எந்த தேவனையும் காணவில்லை” என்று அவர்களின் பிரதமர் அறிவித்தார். (ககரின் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.) சி.எஸ். லூயிஸ், “பூமியில் தேவனைக் காணாதவர்கள், அவரை விண்வெளியில் காண வாய்ப்பில்லை” என்கிறார்.
இந்த வாழ்க்கையில் தேவனைப் புறக்கணிப்பது பற்றி இயேசு எச்சரித்திருக்கிறார். அவர் இறந்த இரண்டு மனிதர்களின் உவமையை சொன்னார். தேவனுக்கு நேரம் கொடுக்கமுடியாமல் இருந்த ஒரு ஐசுவரியமுள்ள மனுஷன், விசுவாசத்தில் ஐசுவரியவானும் தரித்திரனுமான லாசரு (லூக்கா 16: 19-31). பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, ஐசுவரியவான் பூமியில் இருக்கும் தன் சகோதரர்களுக்காக ஆபிரகாமிடம் மன்றாடினான். “லாசருவை அனுப்புங்கள்” என்று ஆபிரகாமிடம் கெஞ்சினான். “மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்” (வச.27,30). ஆபிரகாம் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்து: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும் நம்பமாட்டார்கள்” (வச. 31).
ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் எழுதினார்: “பார்ப்பது என்றால் நம்புவது என்று அர்த்தமல்ல. நாம் எதை நம்புகிறோம் என்பதின் அடிப்படையில் தான் ஒன்றைப் பார்க்கிறோம்.”
குணமடைய ஒரு மரம்
சுமார் 2.19 கோடிக்கு, நீங்கள் ஒரு புதிய மெக்லாரன் ஆடம்பர பந்தய கார் வாங்க முடியும். இந்த வாகனம் வி8 எஞ்சினுடன் 710 குதிரைத்திறனுடனும் வருகிறது. உங்கள் காலைப் பணியின் பயணத்திற்கு உங்களுக்குத் தேவையானதை விட இது அதிகம்.
நிச்சயமாக, அதன் அனைது ஆற்றலையும் பயன்படுத்த நீங்கள் ஆசைப்படக்கூடும். ஒரு ஓட்டுநர் தனது கார் மிகவும் “வேகமாக” ஒரு உயர்மட்ட விற்பனை நிலையத்திலிருந்து இருந்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் பழைய இரும்பு குவியலுக்குச் செல்லக்கூடும் என்பதை கற்றுக்கொண்டார், ! கார் வாங்கிய ஒரே நாளில், அதை ஒரு மரத்தில் மோதினார். (அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.)
வேதத்தின் மூன்று அதிகாரங்கள் கூறும் சம்பவம் மூலமாக, ஒரு தீமையான தேர்வும் ஒரு மரமும் தேவனின் நல்ல படைப்புக்கு கேடு விளைவித்தது கற்றுக்கொள்கிறோம். ஆதாமும் ஏவாளும் புசிக்கக்கூடாத விருட்சத்திலிருந்து கனியை புசித்தார்கள் (ஆதியாகமம் 3:11). சம்பவம் இங்கு தான் ஆரம்பமாகிறது, பூமியானது சபிக்கப்பட்டது (வச.. 14-19).
இந்த சாபத்தை நீக்குவதில் மற்றொரு மரம் பங்கு வகிக்கும்- அது இயேசு நம் சார்பாக சகித்த சிலுவை மரம். அவருடைய மரணம் அவருடன் நம் எதிர்காலத்தை சம்பாதித்த்து (உபாகமம் 21:23; கலாத்தியர் 3:13).
வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கதை முழுமை பெறுகிறது. "ஜீவவிருட்சம்" "ஜீவத்தண்ணீருள்ள நதிக்கு" அருகில் வளர்ந்து வருவதைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (வெளிப்படுத்துதல் 22: 1-2). யோவான் விவரிப்பதுபோல், இந்த மரம் “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவையாக” இருக்கும் (வச.. 2). "இனி ஒரு சாபமுமிராது" (வச.. 3) என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். நாம் அனைவரும் வாஞ்சிக்கிற நித்திய மகிழ்ச்சியுடன் தேவனோடு -எப்போதும் வாழ்வோம் என்பதே சம்பவத்தின் நிறைவு.
பனி கலை
அமெரிக்காவில், ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த உள்ளூர் இசைக்குழு, ஒவ்வொரு ஆண்டும் நகரத்தில் நடக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றி ஒரு பாடலைப் பாடுவார்கள். “ஆண்டின் முதல் மெய்யான பனிப்பொழிவைப் பெறும்போதெல்லாம் புனிதமான ஒன்று நடப்பதைப்போல அது இருந்தது” என்று இசைக்குழுவின் இணை நிறுவனர் விளக்கினார். அது கொஞ்சம் புதிய தொடக்கத்தைப் போல இருந்தது. நகரம்தன் வேகத்தை குறைத்து, அமைதியாக வளர்ந்தது.
நீங்கள் கடுமையான பனிப்பொழிவை அனுபவித்திருந்தால், அது ஒரு பாடலை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். பனி அழுக்குகள் மற்றும் குழப்பத்தை மறைக்கும்போது ஒரு அற்புதமான அமைதி உலகத்தை ஈர்க்கிறது. சில தருணங்களுக்கு குளிர்காலத்தின் இருண்ட தன்மையானது பிரகாசிப்பிக்கிறது, எங்களின் பிரதிபலிப்பையும், மகிழ்ச்சியையும் வரவழைக்கிறது.
தேவனை பற்றிய நல்ல பார்வையைப் பெற்றிருக்கக்கூடிய யோபுவின் நண்பரில் ஒருவரான எலிஹு சிருஷ்டிப்பு எப்படி நம் கவனத்தை இழுக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.“தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்” என்று அவர் கூறுகிறார் (யோபு 37:5). “அவர் உறைந்த மழையையும் கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.” இத்தகைய மகத்துவம் ஒரு தெய்வீக ஓய்வை வேண்டி நம் வாழ்க்கையை இடைமறிக்கிறது. “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்” என்பதை எலிஹூ கவனித்தார் (வ 6-7).
இயற்கை சில நேரங்களில் நாம் விரும்பாத வழிகளில் நம் கவனத்தை ஈர்க்கிறது. நமக்கு என்ன நேர்ந்தாலும் அல்லது நம்மை சுற்றியுள்ள எதை நாம் கவனித்தாலும், ஒவ்வொரு கணமும்-அற்புதங்களும், அச்சுறுத்துதல்களும், அல்லது சாதாரணமானவைகளும் கூட நம் ஆராதனையை ஊக்குவிக்கும். நமக்குள் இருக்கும் கவிஞரின் இதயம் தெய்வீக அமைதிக்காக ஏங்குகிறது.
நம்பிக்கை இழந்த தீர்வுகள்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வில்லியம் ஆஃப் ஆரஞ் (William of Orange) வேண்டுமென்றே தனது நாட்டின் பெரும்பாலான நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தார். படையெடுக்கும் ஸ்பானியர்களை விரட்டும் முயற்சியில் டச்சு மன்னர் அத்தகைய கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார். இது வேலை செய்யவில்லை, மேலும் பிரதான விவசாய நிலங்களின் பெரும் பகுதி கடலுக்கு இழந்தது. “நம்பிக்கை இழந்த காலங்கள் நம்பிக்கை இழந்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஏசாயாவின் நாளில், அசீரிய இராணுவம் அவர்களை அச்சுறுத்தியபோது எருசலேம் நம்பிக்கை இழந்த நடவடிக்கைகளுக்கு திரும்பியது. முற்றுகையைத் தாங்க நீர் சேமிப்பு முறையை உருவாக்கி, மக்கள் நகரச் சுவர்களைக் கரைக்க வீடுகளையும் கிழித்து எறிந்தனர். இத்தகைய தந்திரோபாயங்கள் விவேகமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அவை மிக முக்கியமான ஒரு படியை புறக்கணித்தன. "இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்" (ஏசா. 22:11).
இன்று நம் வீடுகளுக்கு வெளியே ஒரு இராணுவத்தை நாம் சந்திக்க வாய்ப்பில்லை. ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் இப்படியாக கூறினார் : "இடித்து நொறுக்குவது எப்போதும் பொதுவான வழிகளிலும் பொதுவான மக்களிடமிருந்தும் வருகின்றன. ஆயினும்கூட, அத்தகைய "இடித்து நொறுக்குவது" உண்மையான அச்சுறுத்தல்கள். அதிர்ஷ்டவசமாக, நமக்குத் தேவையானவற்றிற்காக முதலில் அவரிடம் திரும்புவதற்கான தேவனின் அழைப்பையும் அவர்கள் கொண்டு வருகிறார்கள்.
வாழ்க்கையின் எரிச்சல்களும் குறுக்கீடுகளும் வரும்போது, அவை தேவனிடம் திரும்புவதற்கான வாய்ப்புகளாக நாம் பார்ப்போமா? அல்லது நம்முடைய சொந்த அவநம்பிக்கையான தீர்வுகளை நாடுவோமா?