அவர் நம்மை புதிதாக்குகிறார்
ஒரு பயண நிர்வாகியாக, ஷான் சீப்லர் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் போராடினார். ஹோட்டல் அறைகளில் எஞ்சியிருக்கும் சோப்பு கட்டிகளை என்ன செய்வது? என்பதே அந்த கேள்வி. தூக்கியெறியப்படும் சோப்புத் துண்டுகளை மறுசுழச்சி செய்வதின் மூலம் அதற்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சீப்லர் நம்பினார். எனவே அவர் “கிளீன் தி வேர்ல்ட்” என்ற மறுசுழற்சி அமைப்பைத் தொடங்கினார். அது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் நிராகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோப்புத் துண்டுகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட சோப்புகளாக மாற்ற உதவியது. அந்த சோப்புத் துண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேவையுள்ள மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சோப்புகள் சுகாதாரம் தொடர்பான வியாதிகள் மற்றும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கிறது குறிப்பிடத்தக்கது.
சீப்லர் சொல்லும்போது, “இது கேட்பதற்கு விகற்பமாய் தெரியலாம், ஆனால் நீங்கள் தங்கியிருக்கும் அறையில் எஞ்சியிருக்கும் சிறிய சோப்பு துண்டானது ஒருவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்” என்று சொல்லுகிறார்.
பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்பட்ட ஒன்றிற்கு வாழ்க்கைக் கொடுத்து புதிதாக்குவது நம்முடைய இரட்சகரான இயேசுவின் முக்கியமான ஒரு செய்கை. ஐந்து அப்பத்தினாலும் இரண்டு சிறிய மீன்களினாலும் ஐயாயிரம்பேரை இயேசு போஷித்த பின்பு, சீஷர்களைப் பார்த்து, “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” (யோவான் 6:12) என்று சொல்லுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் தூக்கியெறிப்படும்போது, இயேசு நம்மை வீணானவர்களாய் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை அற்புதமாய் பார்;க்கிறார். அவருடைய பார்வையில் நாம் எப்போதும் தூக்கியெறிப்படுவதில்லை. அவருடைய இராஜ்யத்திற்கு பயன்படும் திறனை நமக்குள் புகுத்துகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). எது நம்மை புதிதாக்குகிறது? கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவதே நம்மை புதியவர்களாய் மாற்றுகிறது.
சிறியது ஆனால் சிறந்தது
“நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா?” கல்லூரியின் ஒரு நீச்சல் வீராங்கனை அவளின் வேகம் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலைப்பட்டாள். ஆனால் கணிதப் பேராசிரியர் கென் ஓனோ அவளது நீச்சல் நுட்பங்களை ஆராய்ந்தபோது, அவளுடைய நேரத்தை ஆறு வினாடிகளுக்குள் எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தார். அதுவே போட்டியில் அவளுடைய வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும். நீச்சல் வீராங்கனையின் முதுகில் சென்சார்களை இணைத்து, அவரது நேரத்தை மேம்படுத்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, ஓனோ, சிறுசிறு காரியங்களை சரிசெய்ய முயற்சித்தார். நீரினுள் அவற்றை சரியாய் கடைபிடித்தால் வெற்றிக்கு ஏதுவான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தீர்மானித்தார்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறிய காரியங்களை சரிசெய்யும்போது, அது பெரிய மாற்றத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும். சிறையிருப்பிற்கு பின்னர், செரூபாபேலோடு சேர்ந்து ஆலயக் கட்டுமான்ப பணியில் ஈடுபட்ட மீதியான இஸ்ரவேல் ஜனத்திற்கு சகரியா தீர்க்கதரிசியும் அதேபோன்ற ஒரு ஆலோசனையையே கொடுக்கிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சேனைகளின் கர்த்தர் செரூபாபேலுக்குச் சொல்லுகிறார் (சகரியா 4:6).
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (வச. 10) என்று சகரியா கேட்கிறார். தாங்கள் கட்டப்போகிற ஆலயம் சாலெமோனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு நிகராகாது என்று இஸ்ரவேலர்கள் சோர்ந்துபோயிருக்கின்றனர். ஆனால் தன்னிலிருக்கும் சிறு சிறு காரியங்களை மாற்றிக்கொண்டு ஓனோவின் நீச்சல் வீராங்கனை எவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றாளோ, அதுபோல தேவனோடு கூடிய சின்னஞ்சிறு முயற்சிகள் கூட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடும் என்பதை செரூபாபேலின் கூட்டம் விசுவாசித்தது. தேவனில் சிறியதும் சிறந்ததாய் மாறக்கூடும்.
தேவனால் அறியப்படுதல்
தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்!
உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).
அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார்.
ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.
உறுதியும் நன்மையுமான
அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.
மாற்றத்தின் விளையாட்டு
1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.
ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.
கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான். ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.
அவருடைய ஒளியை பிரதிபலித்தல்
நிலப்பரப்புகள் அடங்கிய அவரது எண்ணெய்த்தாள் ஓவியங்களில், பிரதிபலிப்பு ஒளியின் அழகைப் படம்பிடிக்க, அந்த கலைஞர் ஒரு முக்கிய கலை சூட்சுமத்தைப் பின்பற்றுகிறார்: "பிரதிபலிக்கப்பட்ட ஒளி அதன் மூல ஒளியைப் போல ஒருபோதும் வலுவாக இருக்காது." ஆனால் அனுபவமற்ற ஓவியர்கள் பிரதிபலிக்கப்பட்ட ஒளியை மிகைப்படுத்துவதாகக் கூறுகிறார். அவர் "பிரதிபலிக்கப்பட்ட ஒளி நிழலுக்குச் சொந்தமானது, எனவே ஓவியத்தின் ஒளிரும் பகுதிகளுடன் போட்டியிடாமல் அதற்கு இசைவாய் இருக்கவேண்டும்." என்கிறார்.
"மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4) என்று வேதம் இயேசுவைக் குறிப்பிடுவதில் இதேபோன்ற ஒர் உட்கருத்தை நாம் காண்கிறோம். யோவான் ஸ்நானன் "தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்" (வ. 7). சுவிசேஷ ஆக்கியோன் "அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்." (வ. 8) என்கிறார்.
யோவானை போலவே, விசுவாசமற்ற உலகத்தின் இருளில் வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்க நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டோம். ஒருவர் சொல்வதுபோல "ஒருவேளை அவிசுவாசிகள் அவருடைய ஒளியின் முழு மகிமையையும் நேரடியாகத் தாங்க கூடாமற்போகலாம்" என்பதால் இது நமது பொறுப்பு.
அந்த ஓவிய ஆசிரியர் தமது மாணவர்களுக்கு "ஒர் ஓவியத்தில் நேரடி ஒளி எதன்மீது விழுந்தாலும், அது ஒளியின் ஆதாரமாக மாறும்" என்று கற்பிக்கிறார். அதேபோல, இயேசுவே “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (வச. 9), நாம் சாட்சிகளாகப் பிரகாசிக்க முடியும். நாம் அவரைப் பிரதிபலிக்கும்போது, அவருடைய மகிமை நம் மூலம் பிரகாசிப்பதைக் கண்டு உலகம் வியக்கட்டும்.
ஒருபோதும் தாமதிக்காதே
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊருக்கு பார்வையாளராய் சென்ற என்னுடைய அமெரிக்க போதகர், காலை 10 மணி ஞாயிறு ஆராதனைக்கு வந்துசேருவதாக உறுதியளித்திருந்தார். ஆலயம் வெறுமையாயிருந்தது. அவர் காத்திருந்தார். ஒரு மணி நேரம் கடந்தது. இரண்டு மணி நேரம் கடந்தது. கடைசியாக, 12:30 மணிக்கு திருச்சபையின் போதகர் உள்ளே வர, அவரைத் தொடர்ந்து பாடல் குழுவினரும், திருச்சபை அங்கத்தினர்களும் உள்ளே பொறுமையாக வந்தனர். ஆராதனை துவங்கியது. “காலம் நிறைவேறினபோது ஆவியானவர் நம்மை அழைத்தார், தேவன் தாமதிக்கவில்லை” என்று என்னுடைய போதகர் பின்பாக எங்களிடம் அந்த சம்பவத்தைக் குறித்து சொன்னார். அந்த இடத்தின் கலாச்சாரம் வித்தியாசமானது என்பதை என்னுடைய போதகர் புரிந்துகொண்டார்.
காலம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வித்தியாசப்படலாம், ஆனால் தேவனுடைய குறித்த நேரம் என்பது வேதத்தில் பரவலாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லாசரு வியாதிப்பட்டு மரித்தபின்பு, இயேசு நான்கு நாட்கள் கழித்து வருகிறார். லாசருவின் சகோதரியைப் பார்த்து ஏன் என்று விசாரிக்கிறார். மார்த்தாள் இயேசுவிடம் “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” (யோவான் 11:21) என்று கூறுகிறாள். ஏன் தேவன் நம்முடைய அவசரத்திற்கு செயல்பட்டு காரியங்களை சரிசெய்வதில்லை என்று நாமும் அப்படி யோசிக்கலாம். அவருடைய பதிலுக்காகவும் வல்லமையான கிரியைக்காகவும் காத்திருப்பதே நல்லது.
இறையியல் நிபுணரான ஹொவர்ட் துர்மேன், “பிதாவே, நாங்கள் காத்திருக்கிறோம், உம்முடைய பெலன் எங்களுடைய பெலனாகும் வரை, உம்முடைய இருதயம் எங்களுடைய இருதயமாகும் வரை, உம்முடைய மன்னிப்பு எங்களுடைய மன்னிப்பாகும் வரை, நாங்கள் காத்திருக்கிறோம் தேவனே, நாங்கள் காத்திருக்கிறோம்” என்று எழுதுகிறார். கடைசியில் லாசருவுக்கு தேவன் அற்புதத்தினால் பதிலளித்ததுபோல, நாமும் பதிலைப்பெறும்போது, தாமதத்தின் அர்த்தத்தை சரியாய் விளங்கிக்கொள்ளக் கூடும்.
நான் நானாகவே
அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.
"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"
1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச் செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்; பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).
"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.
தொலைநோக்குக் கனவுகள்
கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.
வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.
முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.
பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).
நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.