நியூசிலாந்தின் ஓலே காசோவ் சைக்கிள் ஓட்டுவதை விரும்பினார். ஒரு காலை, ஒரு முதியவர் தனது வாக்கருடன் ஒரு பூங்காவில் தனியாக இருப்பதைக் கண்டபோது, ​​ஓலே ஒரு எளிய யோசனையால் ஈர்க்கப்பட்டதை உணர்ந்தார். சைக்கிள் சவாரியின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் முதியவா்களுக்கு ஏன் வழங்கக்கூடாது? எனவே, ஒரு நாளில் வாடகை மூன்று சக்கர சைக்கிளை ஒரு முதியோர் காப்பகத்தில் நிறுத்தி, அங்குள்ள அனைவருக்கும் சவாரி செய்தார். அதின் ஊழியரும், வயதான குடியானவரும் சைக்கிளிங் வித்தவுட் ஏஜ் அமைப்பின் முதல் பயனர் ஆனபோது அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இப்போது, ​​இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சைக்கிள் ஓட்ட இயலாதவர்களுக்கு உதவும் ஓலேயின் கனவு, சுமார் 575,000 முதியவர்களை 2.5 லட்சம் சவாரிகளால் ஆசீர்வதித்துள்ளது. எங்கே போகிறார்கள்? ஒரு நண்பரைப் பார்க்கவோ, ஐஸ்கிரீம் சாப்பிடவோ, மேலும் தென்றல் காற்றை அனுபவிக்கவுமே. இதின் பங்காளர்கள் தாங்கள் நன்றாக உறங்குவதாகவும், சாப்பிடுவதாகவும் மற்றும் தனிமையாக உணர்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.

இத்தகைய ஈவு ஏசாயா 58:10-11 இல் உள்ள தம்முடைய ஜனங்களுக்கான தேவனின் அழகான வார்த்தைகளை நடைமுறைப்படுத்துகிறது. “சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்” “அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்” என்று அவர் அவர்களிடம் கூறினார். “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.” என்று தேவன் வாக்களித்தார்

தேவன் அவர்களிடம் “உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்” (வ.12) என்றார். அவர் நம் மூலம் என்ன செய்ய முடியும்? அவர் நமக்கு உதவுகையில், பிறருக்கு உதவ நாமும் எப்போதும் தயாராக இருப்போம்.