எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

மென்மையான பேச்சு

நான் முகநூலில் வாதிட்டுக்கொண்டிருந்தேன். மோசமான நடவடிக்கை. நான் ஒரு அந்நியரை ஒரு காரசாரமான தலைப்பு முக்கியமாக, பிரிவினையை உண்டாக்கும் தலைப்பு - இதைப்பற்றி பேசி திருத்த கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அதன் விளைவு கடுமையான வாக்குவாதம், புண்படுத்தும் உணர்வுகள் (என்னுடைய பங்கில்) மற்றும் இயேசுவுக்காக சாட்சி கொடுப்பதற்கு ஒரு தகாத தருணமாக இருந்தது. இது 'இணையதள கோபத்தின்" வெளிப்பாடாக இருந்தது. இது வலைதளத்தில் தினமும் வீசப்படும் கடுஞ்சொற்களை குறிக்கும் பதம். ஒரு நெறிமுறை நிபுணர் விளக்கியது போல், ஆத்திரம் என்பது 'எப்படி பொதுக் கருத்துக்கள் பேசப்படுகின்றது" என்று மக்கள் தவறாக முடிவு செய்கிறார்கள்.

பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த ஞானமான ஆலோசனை எச்சரிக்கையாக இருந்தது. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டையை பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைப்பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகச் சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனாயும் இருக்க வேண்டும் (2 தீமோ. 2:23-24).

ரோமானிய சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் நல்ல ஆலோசனை, தேவனுடைய சத்தியத்தை கற்பிப்பதற்கு இளம் போதகரை தயார்படுத்த அனுப்பப்பட்டது. பவுலின் அறிவுரை இன்று சரியான நேரத்தில், முக்கியமாக நம்முடைய உரையாடல் விசுவாசத்திற்கு நேராக திருப்பப்படும்போது, நமக்கும் கொடுக்கப்படடுள்ளது. எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும் … சாந்தமாய அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் (வச. 25).

மற்றவர்களுடன் கனிவாக பேசுவது இந்த சவாலின் ஒரு பகுதி, ஆனால் போதகர்களுக்கு மட்டுமல்ல. தேவனை நேசித்து, அவரைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்ல வாஞ்சிக்கும் எல்லோரும், அவருடைய சத்தியத்தை அன்போடு சொல்வோமாக. ஓவ்வொரு வார்த்தையிலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

மோதல்களிடம் இருந்து விலகுவது

பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  கல்லறையில் அவருடைய அறிவியல் சொற்பொழிவுகள் ஒன்றையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தனது நண்பரான ஹென்ரிக் லாரன்சினுடைய "மாறாத அன்பு" என்பதை அவர் கல்லறையின் கல்வெட்டில் எழுதினார்கள். அவருடைய சாந்த குணமும், அவர் மற்றவர்களிடம் சமமாக பழகும் விதத்தையும்  இது நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் அவரைக்குறித்து "அனைவர்க்கும் ஹென்ரிக் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார், தன்னை மேம்படுத்தும்படி ஏதும் செய்யாமல், தம்மால் முடிந்தவறை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க பார்த்தார்.

நோபெல் பரிசை வென்ற ஹென்ரிக் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மற்ற விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அரசியல் பாரபட்சம் காணாமல் முதலாம் உலக போர் காலத்தில் வேலை செய்தார். உலக போர் முடிந்த பிறகும் அவர் தம்மை மற்ற விஞ்ஞானிகளுடன் சமரசப்படுத்தி, வேற்றுமையை அகற்றி விஞ்ஞானத்தில் முற்றிலும் தம்மை அர்ப்பணித்தார் என்று ஐன்ஸ்டீன் அவருக்கு சாட்சி கொடுத்திருக்கிறார்.

சபையிலும் நாம் அனைவரும் வேற்றுமை அகற்றி ஒரே மனதாய் சமரசப்படுத்துவது அனைவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது உண்மை தான், எனினும் நம்மால் முடிந்த வரை சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும். "சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;" (வச. 26). ஒன்றிணைந்து வாழுவதற்கு "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்." (வச. 29) 

இறுதியில் பவுல் "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (வ 31,32). தேவ சபையை கட்டுவதற்கு நம்மாலே கூடுமான அளவு சர்ச்சைகளை தவிர்த்து விலகியிருப்பது மிகவும் உதவியாக இருக்கும். அதன் மூலம் நாம் தேவனை மகிமை படுத்துகிறோம்.

மரங்களுடன் மெல்ல பேசுபவர்

டோனி ரிநாயுடோ வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியாவின் "மரங்களுடன் மெல்ல பேசுபவர்" அழைக்கப்பட்டார்.  அவர் ஒரு மிஷனரியாகவும், வேளாண்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றி வந்தார். 30 வருடமாக இயேசுகிறிஸ்துவை  பற்றி பகிருவதிலும், அழிந்துவரும் காடுகளான ஆப்பிரிக்காவின் சாஹில் என்கிற சஹாராவின்  தெற்கே உள்ளவைகளை காப்பதில் தம்மை ஈடுபடுத்திவந்தார்.

காலப்போக்கில் புதர் செடிகள் உறங்கும் மரங்கள் என்று ரிநாயுடோ கண்டுபிடித்தபின்பு, அப்புதர்களை பயன்படுத்தவும், அதை சுத்தம்பணி நீர்பாய்ச்ச ஆரம்பித்தார். இவரின் இச்செயல் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அந்த புதர்களை காப்பதின் மூலம் மணல் அரிப்பினால் அவர்களின் அழியும் விவசாய நிலங்கள் காக்கப்பட்டன. இதன் விளைவாக நைகரிலுள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரு மடங்கு அதிகரித்தார்கள். அதுமாத்திரம் அல்ல ஒரு வருடத்தில் 23 லட்சம் மக்களுக்கு அதிகமாக ஆகாரம் அளிக்க முடிந்தது.

இந்த விவசாயத்தை சிருஷ்டித்த இயேசு, இதே போன்ற விவசாய தந்திரோபாயங்களை பற்றி யோவான் 15ல் " நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்றுகூறுகிறார்

நம் ஆத்துமா உலர்ந்து போகாத படி தேவன் அனுதினமும் சுத்திகரிக்கிறார். வசனம் சொல்லுகிறதுபோல் அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்தாள் "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங். 1: 3). அவருக்குள் நாம் ஆழமாய் நடப்பட்டால் நம் வாழ்வு புதுப்பிக்கப்பட்டு பசுமையாயிருக்கும்.

உங்கள் சுற்றுப்புறத்தில் கிறிஸ்து

அவருடைய ஆலயத்திற்கு அருகாமையில் குறைந்த வருமானம் கொண்ட குடித்தனங்கள் வழியாக போய்க்கொண்டிருந்தபோது, அந்த போதகர் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அங்கே தெருவில் கிடந்த ஒரு மனிதனைப் பார்த்து அவனுக்காக ஜெபிக்க முனையும்போது, அவன் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடவில்லை என்று தெரிந்து கொண்டார். அந்த மனிதன் போதகரிடம் சாப்பாட்டிற்காக கொஞ்சம் காசு கேட்டான். இது அந்த சபையிலே வீடற்றவர்களுக்காக ஒரு திட்டம் உருவாக மூலமானது. ஆலயத்தின் ஆதரவு மூலம் சபை மக்கள் உணவு தயாரித்து வீடு இல்லாதவர்களுக்கு நாளைக்கு இரண்டு தரம் விநியோகித்தார்கள். அவ்வப்போது அவர்களை ஆலயத்திற்கும் கூட்டிவந்து ஜெபிப்பார்கள்; அவர்களுக்கு வேலை கிடைக்க உதவுவார்கள்.

இந்தவிதமான அக்கம்பக்கத்தாரை தொடும் திட்டம் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு நியமித்த ஆணைக்கு ஒப்பிடலாம். அவர் சொன்னார்:” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்”. (மத். 28:18,19). 

அவருடைய பரிசுத்த ஆவி நம்மை யாவரையும் - வீடற்றவர்களையும் கூட -  தொட இயக்கு கிறது. என்றாலும் நாம் தனியாக போக வேண்டியதில்லை. இயேசு சொன்னார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’’ (வச. 20).

அந்த போதகர் வீடு இல்லாத ஒரு மனிதன் கூட ஜெபிக்கும்போது இந்த உண்மையை உணர்ந்துகொண்டார். “எங்களுடைய இருதயங்களை நாங்கள் திறந்தபோது சபை மக்கள் எல்லாரும் எங்களோடு கைகோர்த்தார்கள்”  என்று அவர் அறிக்கை செய்தார். இவ்விதமான தாக்கம் தான் பார்த்ததிலேயே மிக புனிதமானது என்று உரைத்தார்.

இதில் பாடம் என்ன? நாம் இயேசுவை எங்கும் எடுத்துரைக்க வேண்டும்.

கடும் எதிர்வினை

கடினமான வார்த்தைகள் நம்மை புண்படுத்தும். விருதுகள் பெற்ற நூலாசிரியாகிய என்னுடைய நண்பர் ஒருவர் விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது  என்று போராடிக் கொண்டிருந்தார் . அவருடைய புதிய நூல் ஐந்து நட்சத்திர மதிப்பெண்கள் பெற்று அவருக்கு புதியதொரு விருது பெற்றிருந்தது. ஆனால் மிகவும்  மதிக்கப்படும் பத்திரிகை ஒன்று அந்த நூல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று புகழ்ந்தாலும் அதை  கடினமாக விமர்சித்தது. அவர் மற்ற நண்பர்களிடம் "எப்படி இதற்கு பதில் அளிப்பது?" என்று கேட்டார்.

ஒருத்தர் கூறினார்  “விட்டுவிடு”. நானும் என்னுடைய பத்திரிக்கை  எழுதும் அனுபவங்களிலிருந்து இப்படியான குறை கூறும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எழுத வேண்டும்மென்று சில அறிவுரைகளைச் கூறினேன்.

இறுதியில், மிக சிறந்த அறிவுரைகளை கொடுக்க கூடிய வேதாகமம், கடுமையான  விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்க முனைந்தேன். யாக்கோபின் புத்தகம்  இவ்வாறு அறிவுரைக்கிறது ,” யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்” (1:19). அப்போஸ்தலர் பவுல் “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:16) என்று ஆலோசனை தருகிறார் 

நீதிமொழிகள் புத்தகத்தில் ஒரு முழு அதிகாரமே சச்சரவுகளுக்கு எப்படி பதில் அளிப்பதென்று கூடுதல் ஞானத்தை வழங்குகிறது : “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்”(15:1). “நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (15:18). “கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்” (15:32). இவ்வித ஞானத்தை மனதில் கொண்டு,  என் நண்பனைபோல, தேவனுடைய ஒத்தாசையால் நம் நாவுகளை அடக்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஞானம் அறிவுறுத்துவது  “கர்த்தருக்குப் பயப்படு” ஏனென்றால் “மேன்மைக்கு முன்னானது தாழ்மை” (15:33).

கவனத்துடன்.

எழுத்தாளரான மார்க் ட்வைன் நம் வாழ்க்கையில் எதைப் பார்க்கிறோம் – எப்படி பார்க்கிறோம் - என்பது நம்முடைய அடுத்த அடியில் செய்வதில் மட்டுமல்ல நம்முடைய விதியைக் கூட பாதிக்கும் என்று பரிந்துரைக்கிறார். “உங்களுடைய கற்பனை உங்கள் கவனத்திற்கு அப்பாற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் கண்களை சார்ந்திருக்க முடியாது” என்று ட்வைன் கூறுகிறார்.

பேதுருவும், யோவானும், நாடோறும் அலங்கார வாசலில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சப்பாணியை சந்தித்த போது பார்வையைக் குறித்து பேதுரு பேசினார் (அப். 3:2). அந்த மனிதன் அவர்களிடம் பிச்சை கேட்டபோது பேதுருவும் யோவானும் அந்த மனிதனை உற்றுப்பார்த்து “எங்களை நோக்கிப்பார்” (வச. 4)என்றார்கள். 

அவர் ஏன் அதைச் சொன்னார்? கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் பேதுரு அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய சொந்த வரம்புகளையும், அவனுடைய பணத்தேவைகளையும் பார்ப்பதை நிறுத்த வேண்டுமென்று விரும்பினார். அந்தப் பிச்சைக்காரன் அப்போஸ்தலரைப் பார்த்தபோது தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதின் உண்மையைக் கண்டார்.

பேதுரு அவனைப் பார்த்து “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ எழுந்து நட” என்று சொல்லி “வலது கையினால் அவனைப் பிடித்து தூக்கி விட்டான். உடனே அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்து தேவனைத் துதித்தான்” (வச. 7-8).

என்ன நடந்தது ? அந்த மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தான் (வச. 16).  சுவிசேஷகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் “உங்களுடைய கண்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கட்டும்” என்று வலியுறுத்தினார். இப்படி செய்யும் போது நாம் தடைகளைப் பார்ப்பதில்லை. நம்முடைய வழிகளைச் செவ்வைப்படுத்தும் தேவனையே நாம் பார்க்கிறோம்.

அவருடைய இசையைத் தயாரித்தல்

பாடகர் குழு இயக்குனர் அரியான் அபெலா தன்னுடைய குழந்தைப் பருவத்தை, தன் கைகளை மறைக்க, அவைகளின் மேல் உட்கார்ந்து கழித்தார். விரல்கள் காணாமல் அல்லது ஒன்றோடொன்று ஒட்டின விரல்களோடு பிறந்த அவளுக்கு இடது கால் இல்லை மற்றும் வலது காலின் விரல்களும் இல்லை. ஒரு இசை விரும்பி மற்றும் சுப்ரனோ பாடகியான அவள் அரசாங்கத்தின் ஸ்மித் கல்லூரியில் இசையில் முக்கிய படிப்பைப மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாள். ஒரு நாள் அவளுடைய பாடகர் குழு ஆசிரியர் அவளை பாடகர் குழுவை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அவளுடைய கைகள் நன்கு தெரியும்படி இருந்தது. அந்த தருணத்தில் இருந்து அவர் ஆலயத்தின் பாடகர்களை நடத்திக்கொண்டு மற்றொரு பல்கலைக்கழகத்தில் பாடகர் குழு இயக்குனராக பணியாற்றி தன்னுடைய தொழிலைக் கண்டுக்கொண்டார். “என் ஆசிரியர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றை கண்டுபிடித்தனர்” என்று விளக்குகிறார்.

அவளுடைய எழுச்சியூட்டும் கதை “நம்முடைய பரிசுத்த ஆசிரியர் நம்முடைய வரம்புகளை பொருட்படுத்தாமல் நம்மிடத்தில் என்ன பார்க்கிறார் ?” என்று விசுவாசிகளைக் கேட்கத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னையே பார்க்கிறார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27).

மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருடைய மகிமையான சாயலைத் தாங்கியவர்களான நாம், அவரை பிரதிபலிக்க வேண்டும். அபெலாவுக்கு அவளுடைய கைகள் அல்லது விரல்களின்மை அல்ல மாறாக இயேசுவே மிக முக்கியமானவராக இருந்தார். இது எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்டு அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம்” என்று  2 கொரிந்தியர் 3:18ல் வாசிக்கிறோம்.

அபெலாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மறுரூபப்படுத்தும் வல்லமையினால் நடத்தப்பட்டு (வச. 18), தேவனினை கனப்படுத்தும் வாழ்க்கை பாடலாக வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

நம்பிக்கை மலர்கின்றது

சமீபத்தில், அமெரிக்காவிலுள்ள ஒரு பட்டணத்தின் காலி இடங்களிலிருந்த களைகளை அகற்றி விட்டு, அழகிய மலர்களைத்தரும் செடிகளையும், பசுமையான செடிகளையும் அங்கு நட்டோம். இது அங்கு வாழ்ந்த மக்களுக்கு சுகாதாரமான மன நிலையைக் கொடுத்தது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்ற விதத்தையும் உயர்த்தியது.

அமெரிக்காவிலுள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர், “ பசுமையான சூழல், சுகாதாரமான மன நிலையைக் கொடுக்கும், சிறப்பாக, பின்தங்கிய சமுதாயங்களில் வாழும் மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.

தேவன் தரும் அழகிய மீட்பைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி கண்ட தரிசனத்தின் மூலம், இஸ்ரவேலிலும் யூதாவிலும் உள்ள ஒடுக்கப் பட்ட மக்கள் புதிய நம்பிக்கையைக் கண்டடைந்தார்கள். அவர்களுடைய பேரழிவு மற்றும் ஏசாயா கூறிய நியாயத்தீர்ப்பு இவற்றின் மத்தியில், இந்த பிரகாசமான வாக்கு வேர் பிடிக்க ஆரம்பித்தது. “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்த களிப்புடன் பாடும் (ஏசா.35:1-2).

இன்று நம்முடைய சூழ்நிலைகள் எவ்வாறு இருப்பினும் சரி, நம்முடைய பரலோகத் தந்தை, நமக்கு புதிய நம்பிக்கையைத் தந்து, அவருடைய படைப்புகளின் மூலம் நம்மை மீட்டுக் கொள்ளும் அழகிய வழிகளில் நாம் மகிழ்ந்து களிகூருவோம். நாம் சோர்ந்து போகும் வேளைகளில், அவருடைய மகிமையையும், அவருடைய சிறப்புகளையும் தியானிக்கும் போது, நாம் உயர்த்தப் படுவோம். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” என்று ஏசாயா நம்மை உற்சாகப் படுத்துகின்றார் (வ.3).

ஒரு சில மலர்களால் நம்முடைய நம்பிக்கையை உயிர்ப்பிக்க முடியுமா? ஒரு தீர்க்கதரிசி ஆம் என்று பதிலளிக்கின்றார். அப்படியே நமக்கு நம்பிக்கையளிக்கும் தேவனும் கூறுகின்றார்.