துதியின் வாசல்கள்
உலகத்தின் தலைசிறந்த சில பட்டணங்களில் நுழையும்பொழுது, பெர்லின், பிராண்டென்பெர்க் நுழைவாயில், (Brandenburg Gate, Berlin) யோப்பா நுழைவாயில், எருசலேம் (Jaffa Gate, Jerusalem) மற்றும் லண்டன், டவுனிங் தெருவிலுள்ள வாயில்களை (Downing St., London) போன்ற நுழைவாயில்களை காணலாம். அந்த நுழைவாயில்கள் பாதுகாப்பிற்காகவோ, கொண்டாட்டங்களுக்காகவோ கட்டப்பட்டது. எதுவாயினும், அவைகளுக்குள்ள வேறுபாடு அவைகள் பட்டணத்திற்கு வெளியேவோ உள்ளேயோ இருப்பதிலிருக்கிது. சில நுழைவாயில்கள் திறந்தே இருக்கும். வேறு சில, ஒரு சிலருக்கு தவிர பொதுவாகப் பூட்டியே இருக்கும்.
தேவ சமூகத்தின் வாசல்கள் எப்பொழுதும் நமக்கு திறந்தே இருக்கிறது.…
ஒப்பிட்டுப் பார்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவது
ஹார்வேர்டு தொழிற்பயிற்சி பள்ளியில் பேராசிரியராக இருந்த தாமஸ் T. டிலாங், அவருடைய மாணவர்கள், உடன் பணிசெய்பவர்கள் மத்தியில் கவலை அளிக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு நிலவுவதைக் கண்டார். அதாவது அவர்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை இருந்தது. “தொழில் வல்லுநர்கள், புகழ்பெற்ற வணிக அமைப்பின் மேலாண்மை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மேலும் மற்ற கைதேர்ந்த தொழில் நிபுணர்கள் ஆகியோர் அவர்களுடைய சொந்த சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள்... இது தனிப்பட்ட நபருக்கும், அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல. நீங்கள்…
தொடர்ந்து முன்னேறு
ரிச்சர்டு, கெவின் என்ற சிநேகிதனோடு சேர்ந்து மலை ஏறிக்கொண்டிருந்த பொழுது, அவனுக்கு ஒரு உந்துதல் தேவைப்பட்டது. மலை ஏறுபவர்கள் பத்திரமாக ஏறுவதற்கு கயிற்றைப் பிடித்திருக்கும் பணியை செய்பவனாக கெவின் இருந்தான். மிகவும் களைப்படைந்த நிலையில் மலை ஏறுவதை கைவிடக்கூடிய நிலைக்கு ரிச்சர்ட் தள்ளப்பட்டான். ஆகவே கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த கெவினிடம், தன்னை கீழே இறக்கி விடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். மலை ஏற்றத்தை நிறுத்தி விடக்கூடாத உயரத்திற்கு ரிச்சர்டு ஏறிவிட்டான். ஆகவே, கீழே இறங்குவதை விட்டு விட்டு மேலே ஏறவேண்டும் என்று கெவின் ரிச்சர்டை…
ஆவியோ விடுவிக்கிறது
அயர்லாந்திலுள்ள அநேக கிராமப்புற நகரங்களில் சமீபகாலம் வரை வீட்டுக்கு எண்களோ, அல்லது தபால்துறை குறியீட்டு எண்களோ (பின்கோட்) பழக்கத்தில் இல்லை. எனவே, ஓர் ஊரில் மூன்று பாட்ரிக் மர்ஃபிக்கள் இருந்தால், புதிதாக அங்கு குடியேறிய அந்தப் பெயர் கொண்ட நபருக்கு கடிதம் வழங்கப்படமாட்டாது; நீண்ட நாட்களாக அங்கு வசித்து வரும் முதல் இரண்டு பாட்ரிக் மர்ஃபிகளுக்கும் வழங்கப்பட்டு பின் அது அவர்களுடைய கடிதம் இல்லையென்றால் தான் புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபிக்கு வழங்கப்படும். புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபி என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் தான்…
என்னைப் பின்பற்று
உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் நிலையங்களில் எடை குறைக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் விரும்புகிறவர்களுக்கு, பல்வேறு செயல்முறைத் திட்டங்களை அறிவிக்கின்றனர். ஓரு உடல் தகுதிக்கான மையத்தில் குறைந்தது 50 பவுண்ட் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ விரும்புகிறவர்களையே சேர்த்துக் கொள்கிறது. ஒரு பெண், அவள் சென்ற உடல் தகுதி நிலையத்திற்கு, அவளோடு கூட வந்த எடை குறைவான, நல்ல உடல்வாகுடைய பெண்கள் அவளைப் பார்த்து வடிவற்ற உடல் அமைப்பு உடையவள் என்று அவளைப் பார்த்து கேலி செய்ததினால், அந்த நிலையத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். இப்பொழுது…
இரட்சிப்பின் ஊற்றுகள்
பொதுவாக மக்கள், பூமியின் மையப்பாகத்திலிருந்து கற்களைத் தோண்டி எண்ணெயோ, தண்ணீரோ இருக்கிறதா என்று கண்டறிய பூமியை ஆழமாய் துளையிடுவார்கள்.
ஆவிக்குரிய வனாந்திரத்திலும், வனாந்திர வறட்சியிலும் வாழும் தன்னுடைய ஜனம் “இரட்சிப்பின் நீருற்றுகளைக்” கண்டடைய வேண்டும் என தேவன் விரும்பினார் என்பதை ஏசாயா 12ல், நீருற்றிலிருந்து பொங்கும் இளைப்பாறுதல் அளிக்கும் குளிர்ந்த நீரோடு ஒப்பிட்டுள்ளார். அநேக ஆண்டுகளாய்த் தேவனைவிட்டு விலகிச் சென்றதால், அந்நியர்களால் கைப்பற்றபட்டு, எங்கும் சிதறடிக்கபடும்படியாய், யூதா தேசத்தை தேவன் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாய், ஒரு சிறு கூட்டம்…
கொண்டாடுவோம் வாருங்கள்
2014 உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கானாவைச் சேர்ந்த அசாமோஜியன் ஜெர்மெனிக்கு எதிராக ஒரு கோல் போட்ட பொழுது அவனும் அவனது குழுவினரும், சீரான அடிகள் எடுத்து வைத்து அழகான ஒரு நடனம் ஆடினர். ஒரு சில நிமிடங்கள் கழித்து ஜெர்மெனியைச் சேர்ந்த மிரோஸ்லாவ் குலோஸ் ஒரு கோல் போட்ட பொழுது, அவன் மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்தான். “கால் பந்து விளையாட்டில் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் விதம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. ஏனெனில் அது விளையாட்டு வீரர்களின் குணாதிசயங்களையும், மதீப்பீடுகளையும், ஆவல்களையும் வெளிப்படுத்தக் கூடிய…
மிக அதிகமான நாற்றம்
2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் இருக்கும், பிப்ஸ்தாவரஇயல் பூங்காவின் கண்ணாடி அறையைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அங்கு பூத்திருந்த சவப்பூ என்ற வெப்ப மண்டலச் செடியின் பூவைப் பார்க்க வந்திருந்தார்கள். அந்த தாவரம் இந்தோனேசியாவிற்கு உரியது. அத்தோடு கூட அது அநேக ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு முறைதான் பூக்கும். ஆகவே அக்காட்சி பார்க்க வேண்டியதொன்றாகும். முள்ளுகளையுடைய அழகான சிகப்பு நிறமுடைய அந்தப் பெரிய பூ மலர்ந்தவுடன், கெட்டுப்போன மாமிச நாற்றமெடுக்கும். அந்த அழுகிப்போன மாமிச…
தேவனின் திசை காட்டும் கருவி
வட கரோலினாவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்து 27 கடல் பயணிகளை சிறிய திசை காட்டும் கருவிகள் காப்பாற்றின. ஓய்வு பெற்ற வால்டிமார் செமினோவ் என்ற கடல் வியாபாரி அச்சமயத்தில் இளநிலைப் பொறியாளராக ss அல்கோ கைடு என்ற கப்பலில் பயணம் செய்தபொழுது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பலொன்று அவர் பயணம் செய்த கப்பலை நோக்கிச் சுட்டது அந்தக் கப்பல் சுடப்பட்டு தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. செமினோவும் உடன்பயணிகளும் திசை காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை கடலில் இறக்கினார்கள்.…