அழுகிறவர்களுடன் அழுங்கள்
எங்கள் நாட்டிலுள்ள ஓர் பெண்கள் ஐக்கிய ஜெபக்குழு கானாவுக்காகவும், இதர ஆப்பிரிக்க நாடுகளுக்காகவும் தொடர்ந்து இடைவிடாது மாதாமாதம் கூடி ஜெபித்து வருகிறார்கள். ஏன் இவ்வாறு தேசங்களுக்காக இடைவிடாது அவர்கள் ஜெபிக்கிறார்கள் என்று கேட்டபொழுது, சுற்றிலும் பாருங்கள், செய்திகளை கவனித்துக் கேளுங்கள். போர், பேரழிவுகள், நோய்கள், வன்முறைகள் போன்றவை மனுக்குலத்திற்காக தேவன் கொண்டுள்ள அன்பையும், நம்மீது இருக்கும் ஆசீர்வாதங்களுக்கும் தடையாக மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றன. இதனால் நம் தேசங்கள் பாழாகின்றன. தேசங்களின் காரியங்களில் தேவன் இடைபட்டு செயல்படுகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவரை…
விலகிச் செல்லுதல் அல்ல
பள்ளி ஆண்டில் ஓரு பருவநிலை முடிந்த தருணத்தில் என் மனைவியும், நானும், 100 கிலோ மீட்டர் (60 மைல்) தூரத்திலுள்ள பள்ளியிலிருந்து எங்கள் மகளை அழைத்து வந்தோம். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், சற்று வழிவிலகிச் சென்று அருகாமையில் உள்ள கடற்கரை உணவு விடுதியில் சென்று சிற்றுண்டி அருந்தச் சென்றோம். எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கடற்கரையில் அநேகப் படகுகளைக் கண்டோம். பொதுவாக அவை நீரில் அடித்துச் செல்லாதபடிக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். ஆனால் ஓர் படவு மாத்திரம், எவ்விதத் தங்கு தடையுமின்றி மெதுவாக,…
இதை பிரசித்தம் பண்ணு!
என் வாழ்க்கையில் 1975ம் ஆண்டு மிக முக்கியமான ஓர் காரியம் நடந்தது. நான் என் சிநேகிதன் பிரான்சிசை சந்தித்து என் தனிப்பட்ட பல காரியங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு நடந்ததைக் கூற விரும்பினேன். அவன் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் நான் அவனை சற்று தாமதித்துப்போகக் கூறினேன். அவன் என்னிடம் பேச ஆரம்பித்ததிலிருந்து நான் ஏதோ முக்கியமான காரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை உணர்ந்து கொண்டு,“என்ன காரியம்”? என்று கேட்டான். நான் மிகவும் அமைதலாக…
ஆடுகளைப் போல
நான், என் தாத்தாவுடன் வடக்கு கானாவில் வாழ்ந்து வந்தபொழுது, ஆடுகளைக் கவனிப்பது எனது அனுதின வேலையாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் புல்வெளியில் மேய்வதற்கு அவைகளை அழைத்துச்சென்று சாயங்காலம் வீடு திரும்புவேன். அந்த நாட்களில் ஆடுகள் அதிக பிடிவாதமாக இருக்கக்கூடியவை என்பதை முதல் முதலாவதாக கவனித்தேன். உதாரணமாக, அவைகள் ஒரு வயலைப் பார்க்கும்பொழுது அவைகளின் உள் உணர்வு தூண்டுதலினால் அவைகள் மேய்வதற்கு நேராக அந்த வயல்களுக்குள் ஓடிவிடும். அதனால், எனக்கும் அந்த வயலின் சொந்தக்காரருக்கும் இடையே அநேக முறை பிரச்சனைகள் ஏற்படும்.
சில சமயங்களில்,…
திருப்திப்படுத்தும் அப்பம்
நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய ஜெபத்தை மனப்பாடமாக சொல்லக் கற்றுக்கொண்டேன். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்ற வரியைக் கூறும்பொழுது, எங்களுடைய வீட்டில் என்றைக்கோ ஒரு நாள் தான் கிடைக்கக்கூடிய ரொட்டியை என்னால் நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. எங்களது தகப்பனார் நகரத்திற்கு சென்று திரும்பும் பொழுது மட்டும்தான் எங்களுக்கு ரொட்டி கிடைக்கும். ஆகவே அனுதினமும் எங்களுக்கு ரொட்டி வேண்டும் என்று தேவனிடம் கேட்பது மிகவும் அர்த்தமுள்ள ஜெபமாக எனக்கு இருந்தது.
சில ஆண்டுகள் கழித்து…
மறக்கப்படவில்லை
குக்குவாவின் தாயாருடைய 50வது பிறந்த நாளின் கொண்டாட்டத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்த பொழுது, அவளது தாயாருக்கு தலை மகளான குக்குவா அவளுக்கு அவள் தாயார் செய்த பல தியாகங்களை நினைவுபடுத்திக் கூறினாள். பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தகப்பன் இல்லாமல் தனியாக இருந்து பிள்ளைகளை வளர்த்த அவளது தாயார், அவளது விலை மதிப்புள்ள நகைகளையும், பொருட்களையும் விற்று குக்குவாவை உயர்நிலைக் கல்வி பயில வைத்தாள். வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தபொழுதும், அவளது தாயார் அவளையும், அவளது உடன் பிறந்தவர்களையும் ஒருபொழுதும் கைவிட்டுவிடவே இல்லை.…
பச்சோந்தி நகர்வு
நாம் பச்சோந்தியை பற்றி நினைக்கும் பொழுது, அது தான் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறமையைப் பற்றி சிந்திப்போம். ஆனால் இந்த பல்லியினப் பிராணிக்கு மற்றுமோர் வேடிக்கையான பண்பும் உண்டு. பல முறை ஒரு பச்சோந்தி, தான் நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து செல்வதைப் பார்த்து, இது தான் போய் சேரவேண்டிய இடத்தை சேர முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வேண்டாவெறுப்பாக அந்த பச்சோந்தி தன் ஒரு காலை விரித்து வைக்கும், பின் தன் மனதை மாற்றி மீண்டும் முயற்சிக்கும். தான்…
மாற்றத்தில்
கானா நாட்டில் இறந்தவர்களின் அறிக்கையை விளம்பரப் பலகைகளிலும், கான்க்ரீட் சுவர்களிலும் ஒட்டி வைப்பது வழக்கம். “வெகு சீக்கிரம் சென்று விட்டார்”, வாழ்வின் கொண்டாட்டம்” “என்ன அதிர்ச்சி” போன்ற தலைப்புகளைக் கொண்ட விளம்பரங்களைத் தங்களுக்கு அருமையானவர்கள் இறக்கும் பொழுதும், அடக்க ஆராதனை நடப்பதற்கு முன்னும் காணலாம். நான் ஒன்றை வாசித்தேன் - மாற்றத்தில் (In transition)
மரியாளும், மார்த்தாளும் தங்கள் சகோதரன் லாசரு மரித்த பொழுது துக்கத்தில் ஆழ்ந்திருந்தது போல நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ மரிக்கும் பொழுது துக்கப்படுகிறோம் (யோவா 11:17-27). இயேசு…
எப்பொழுது விலகிச் செல்ல வேண்டும்
எனது தகப்பனார் அவரது வயது முதிர்ந்த காலத்தில் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பொழுது, சோதனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த, அவரது திட்டம் என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சில நேரங்களில் சோதனையை சந்திக்க நேரும் பொழுது, அவர் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றுவிடுவார். உதாரணமாக அவருக்கும் அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக சச்சரவில் போய் முடிவது போலிருந்தால் அந்த வாய்ச் சண்டை தீவிரப்படுத்தப்படுவதை தவிர்க்க அந்த இடத்தை விட்டு விலகிக் சென்றுவிடுவார்.
ஒரு நாள்…