கேள்விகள் தொடரும் பொழுது
2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விமானம் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது உடைந்து, மோஜோவ் பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அவ்விபத்தில் துணை விமானி மரித்துப்போனார். ஆனால் அதன் விமான ஓட்டியோ அற்புதவிதமாக பிழைத்துக் கொண்டார். அதைக்குறித்து விசாரணை நடத்தினவர்கள் என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டறிந்த போதிலும், ஏன் நடந்தது என்பதை அறியவில்லை. அச்சம்பவத்தைக் குறித்து செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு, “கேள்விகள் தொடர்கின்றன” என துவங்கிற்று.
நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் துயரங்களுக்கு போதுமான…
பற்றிக்கொள்!
டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள கால்நடைப்பண்னையில் வளர்ந்த என்னுடைய நண்பன் (cowboy), அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழி கூறுவான். அவற்றில், “நல்ல காஃபி செய்ய அதிக தண்ணீர் தேவைப்படாது” என்பது எனக்கு பிடித்த பழமொழி. ஒருவேளை, சில சமயம் யாராவது, தங்களால் அடக்க முடியாத இளங்காளையோடு போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையிலிருந்தாலோ, “உனக்குள்ளதை முழுமையாக பற்றிக்கொள். அதாவது, விட்டுவிடாதே! உதவி வருகிறது” என்னும் அர்த்தத்தில் கூக்குரலிடுவான்.
வெளிப்படுத்தின விசேஷத்தில், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் காணலாம் (2-3 அதிகாரங்கள்). தேவன், முதலாம்…
அவருடைய அனைத்து நன்மைகள்
நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் திரும்ப நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்னவெனில், நம்மிடம் என்ன உள்ளது என்பதை மறந்து, அந்த கணத்தில் நம்மிடம் என்ன இல்லை என்பதையே நாம் நோக்கி கொண்டிருக்கிறோம். எங்கள் சபையில், “என் ஆத்துமாவே…” என்று சங்கீதம் 103ல் இருந்து பாடகர் குழுவினர் பாடிய பொழுது இதை நினைவு கூர்ந்தேன். தேவன் நம்மை மன்னிக்கிறவர், சுகப்படுத்துகிறவர், மீட்கின்றவர், தேவைகளைச் சந்திப்பவர், திருப்தி அளிப்பவர், புதுப்பிப்பவர் (வசனங்கள் 4-5), இதை எப்படி நாம் மறக்கக் கூடும்? ஆயினும் நம் அன்றாட வாழ்வின் முக்கிய…
அதிசயமான அன்பு
எனது சிநேகிதி டேவிட்டினியின் கணவர் இறந்த பின், வந்த முதல் கிறிஸ்மஸ் நாட்களில், இயேசு இப்பூமியில் பிறந்த பொழுது பரலோகத்தில் எப்படி இருந்திருக்கும் என்று அவள் கற்பனை பண்ணி அழகான கடிதம் ஒன்று எழுதினாள். “இது தான் நடக்கும் என்று தேவனுக்கு தெரிந்த காரியம் தான்” என்று அவள் எழுதினாள். “பிதா, குமாரன் பரிசுத்தாவி மூவரும் பரலோகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த மூவரும் ஒன்றாக இணைந்திருந்த விலை மதிப்பற்ற ஐக்கியத்தை, தேவன் நமக்காக முறிக்க ஒப்புக் கொண்டார். ஆகவே பரலோகத்தில் தேவகுமாரனுடைய இடம் வெறுமையாக…
எப்படி என்பதின் முக்கியத்துவம்
நானும் என் சிநேகிதன் சார்லியும் வேதாகமக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் பொழுதே, பகுதி நேர வேலையாக மரச்சாமான்கள் செய்யும் கடையில் வேலை பார்த்தோம். மரச் சாமான்கள் வாங்கினவர்களின் வீட்டிற்கு அச்சாமான்களை வண்டியில் ஏற்றி ஒப்படைக்கச் செல்லும் பொழுது, எங்களுடன் கூட வீட்டின் உள்பக்கத்தை அலங்கரிப்புச் செய்யக் கூடியவரும் வருவார். அவர் அந்த வீட்டு ஆட்களுடன் அலங்கரிப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நாங்கள் வண்டியிலிருந்து சாமான்களை இறக்கி வீட்டிற்குள் கொண்டு செல்லுவோம். சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகளுக்கு சாமான்களை எடுத்துச் செல்ல பல…
கிறிஸ்மஸைப் பற்றிய செய்தி
50 ஆண்டுகளுக்கு முன்பாக “சார்லி பிரவுன் கிறிஸ்மஸ்” என்ற படம் முதல் முதலாக அமெரிக்க டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. சில வலைத்தளத்தின் இயக்குநர்கள், அப்படத்தை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணினார்கள் வேறு சிலர் வேதாகம வசனங்கள் அப்படத்தில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளதால், பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார்கள். வேறு சிலர் அக்கதையை எழுதின சார்லஸ் ஸ்கல்ஸ், அதில் கிறிஸ்மஸ் கதையை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் ஸ்கல்ஸ் கிறிஸ்மஸ் கதை அதில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் வெற்றி அடைந்ததோடு,…
ஒரு பெயரின் அர்த்தம்
நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையின்படி ஆப்பிரிக்காவிலுள்ள அநேக ஊர்களில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களால் விஷேசமானது என்று கருதப்பட்ட, வருகைதந்த புகழ்பெற்றவரின் பெயர், சிறப்பான நிகழ்ச்சி அல்லது சூழ்நிலைகள், இவற்றை குறித்த பெயர்களே சூட்டப்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது மருத்துவர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அக்குழந்தையின் சுகவீனத்தை அவர்களால் சுகப்படுத்த இயலாது என்றும் அக்குழந்தை பிழைக்குமா பிழைக்காதா என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று மருத்துவர் கூறின பொழுது, அந்த பெற்றோர் அந்த குழந்தைக்கு “கடவுளுக்குத்தான் தெரியும்” (God knows)…
மனச் சோர்வான நிலை
C.S.லூயிசும் அவரது முத்த சகோதரன் வாரன் என்ற வார்ணியும், வின்யாடு என்ற இடத்திலுள்ள ஆங்கிலேய போர்டிங் பள்ளியில் பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்துடன் படித்து வந்தனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும், தாங்க முடியாத துன்பத்திற்குள்ளாக்கக்கூடிய கொடுமையானவர். பல ஆண்டுகள் கழித்து மந்த அறிவுடையவன் என்று குறைவாக மதிக்கப்பட்ட வார்ணி கீழ்க்கண்ட குறிப்பை எழுதியுள்ளான். “இப்பொழுது எனது வயது 64க்கு மேலாகிறது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வின்யாடில் இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன் என்று நினைவு கூராத நேரமே…
மிக உயரிய விருதைப் பெறல்
ஓவ்வொரு துறையிலும் முயற்சியின் உச்சத்திற்கு மனிதரால் மதிக்கப்பெற்ற ஓர் உயரிய விருது உண்டு. நடிப்பிலே சிறந்ததற்கு தரப்படும் அகாடாமி பரிசு உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப்பதக்கம், கிராமி பரிசு, இசை, அல்லது நோபல் பரிசு போன்றவைகள், உலகில் மிக மேன்மையான பரிசுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றைம்விட பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய பரிசு ஒன்று உண்டு.
முதலாம் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் பரிசைப் பெறுவதற்காக முழுமையுமாக முயற்சி எடுத்தார்கள் என்பதை பவுல் அப்போஸ்தலன் நன்கு அறிந்திருந்தார். இதை மனதில்…