ஆவிக்குரிய ஏற்ற தகுதி
நிர்மல், உடற்பயிற்சி கூடத்தில் தவறாமல் பயிற்சி செய்வான். அது அவன் உடலில் வெளிப்படையாகத் தெரியும். அவனுடைய அகன்ற தோள்கள், புடைத்த தசைகள், மேலும் அவனது மேற்கைச் சுற்றளவு என் தொடைகளின் அளவாக இருக்கும். அவனது இந்த கட்டழகே, அவனோடு தேவனைக் குறித்துப் பேச, என்னைத் தூண்டியது. உடல் தகுதிக்கான அவனது அதே அர்ப்பணிப்பு, தேவனுடனான ஆரோக்கியமான உறவிலும் வெளிப்படுகிறதா என்று நான் அவனிடம் கேட்டேன். நாங்கள் மிகவும் ஆழமாகப் பேசவில்லை என்றாலும், நிர்மல் "தன் வாழ்க்கையில் தேவன் இருப்பதை" ஒப்புக்கொண்டார். நானூறு பவுண்டு எடையுள்ள, பொருத்தமற்ற, ஆரோக்கியமற்ற உருவத்திலிருந்த அவனது பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவனது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் ரீதியாக ஆச்சரியமானவற்றைச் செய்திருந்தது.
1 தீமோத்தேயு 4:6-10 இல், உடல் மற்றும் ஆவிக்குரிய பயிற்சி மீது நம் கவனத்தை திரும்புகிறது. “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (வ. 7-8). ஒருவருடைய வெளிப்புறத் தகுதி, தேவனுடனான நமது நிலையை மாற்றாது. நமது ஆவிக்குரிய தகுதி, உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். இது இயேசுவை நம்புவதற்கான தீர்மானத்தோடு தொடங்குகிறது, அவர் மூலமே நாம் மன்னிப்பைப் பெறுகிறோம். அந்த புள்ளியிலிருந்தே, தேவபக்தியான வாழ்க்கைக்கான பயிற்சி தொடங்குகிறது. இதில், “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்.. நற்போதகத்திலும்” (வ. 6) தேறி வருதல் மற்றும் தேவனுடைய பெலத்தால், நம் பரலோகத் தகப்பனைக் கனம் பண்ணுகிற வாழ்க்கையை வாழ்தல் ஆகியன அடங்கும்.
தீங்கின் வழியில்
எனது காலை நடைப்பயிற்சியின் போது, தவறான திசையில் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டதைக் கவனித்தேன். ஓட்டுநர் தூங்கியதாலும், மது போதையிலிருந்ததாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து குறித்து அறியவில்லை. நிலைமை ஆபத்தானது, நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளை விழிப்பூட்டி வாகனத்தின் பயணிகள் பக்கத்திற்கு நகர்த்திய பிறகு, நான் ஓட்டுநர் இருக்கையில் ஏறினேன், நான் அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு ஒட்டி சென்றேன்
உடல் சார்ந்த ஆபத்து மட்டுமே நாம் எதிர்கொள்ளும் தீங்கு அல்ல. அத்தேனேவில் உலக ஞானமும் புத்திசாலித்தனமும் நிரைந்த ஜனங்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருப்பதை பவுல் பார்த்தார், காரணம் "பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது" அவர் "தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தார்" (அப்போஸ்தலர் 17:16). கிறிஸ்துவைக் கருத்தில் கொள்ளாமல் தவறான கருத்துக்களுடன் சுற்றித்திரிபர்களுக்கு அப்போஸ்தலனின் உள்ளார்ந்த பதில், இயேசுவின் மூலமாகவும் இயேசுவுக்குள்ளாகவும் தேவனுடைய நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும் (வ.18, 30-31). கேட்ட சிலர் நம்பினர் (வ.34).
கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வாழ்வின் மெய்யான அர்த்தத்தைத் தேடுவது ஆபத்தானது. இயேசுவில் மன்னிப்பையும் மெய்யான நிறைவையும் கண்டவர்கள், மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டு ஒப்புரவாகுதலின் செய்தியைப் பெற்றுள்ளனர் (பார்க்க 2 கொரிந்தியர் 5:18-21). இந்த உலக வாழ்க்கையின் மயக்கத்தில் இருப்பவர்களுடன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது, தீங்கிழைக்கும் வழியிலிருந்து ஜனங்களைத் தட்டிப்பறிக்கத் தேவன் இன்னும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
ஆரோக்கியமான இருதயம்
மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.
மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்" பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார்.
வேதாகம பிரியர்கள்
அழகான மணமகள், தனது பெருமிதமான தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு, பலிபீடத்திற்குச் செல்லத் தயாராக இருந்தாள். ஆனால் அவளுடைய பதின்மூன்று மாத தமக்கையின் மகன் அவளை முந்திக்கொண்டான். பொதுவாக உபயோகிக்கும் "மோதிரத்தை" எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவன் வேதாகமத்தை ஏந்திக்கொண்டிருந்தான். இந்த முறையில் மணமகனும், மணமகளும், இயேசுவின் உறுதியான விசுவாசிகளாக, வேதாகமத்தின் மீதான தங்கள் அன்பிற்கு சாட்சியமளிக்க விரும்பினர். பெரிதாய் கவனம் சிதறாமல், அந்த பிள்ளையும் குறுநடை போட்டு சபையின் முன்புறம் சென்றது. வேதாகமத்தின் தோல் அட்டையில் காணப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையின் பற்களின் அடையாளங்கள் எவ்வளவு அழகாய் இருந்தது. கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு அல்லது அவரை அறிய விரும்புபவர்களுக்கு வேதத்தைச் சுவைத்து எடுப்பதைக் காண்பிக்கச் செயல் விளக்கமாகும் சித்திரம்.
சங்கீதம் 119, வேதாகமத்தின் விஸ்தாரமான மதிப்பைப் போற்றுகிறது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்களின் (வ.1) ஆசீர்வாதத்தை அறிவித்த பிறகு, ஆசிரியர் கவிதை நடையில் அதைப் பற்றி முழங்கினார், அதில் அதின் மீதான அவரது அன்பும் அடங்கும். "இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்" (வ.159); "பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்." (வ.163); "என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்" (வ.167)
தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும் உள்ள நமது அன்பை எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறோம் என்பதை நாம் எத்தகைய வண்ணம் அறிவிக்கிறோம்? அவர் மீதான நம் அன்பைச் சோதிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், நான் எதில் பங்குகொள்கிறேன்? நான் வேதத்தின் இனிமையான வார்த்தைகளை "சுவைக்கிறேனா"? என்று நம்மை நாமே ஆராய்வதாகும். பின்னர் "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" (34:8) என்ற இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நம் பெலனை புதுப்பித்தல்
ஒரு ஜோடி கழுகுகள் என் வீட்டில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஒரு பெரிய கூடு கட்டின. நீண்ட காலத்திற்கு முன்பே, மகத்தான அந்த கழுகுகளுக்கு குஞ்சுகள் இருந்தன. வயது முதிர்ந்த கழுகுகளில் ஒன்று கார் மோதி பரிதாபமாக இறக்கும் வரை, அவைகள் தங்கள் குஞ்சுகளை இணைத்து பராமரித்தது. பல நாட்களாக, உயிரோடிருந்த அந்த கழுகு, தொலைந்து போன துணையைத் தேடுவது போல், அருகில் உள்ள ஆற்றில் ஏறி இறங்கி பறந்தது. இறுதியாக, தன் கூட்டிற்குத் திரும்பி, தன்னுடைய சந்ததிகளை தொடர்ந்து வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
எந்தவொரு சூழ்நிலையும் ஒற்றை பெற்றோருக்கு சவாலாகவே இருக்கலாம். ஆனால் தன்னுடைய குழந்தை கொண்டுவரும் பொருளாதார ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியானது பரந்த அளவிலான அனுபவங்களை உருவாக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலைகளில் வாழ்பவர்களும், அல்லது தங்களை மேற்கொள்ளக்கூடிய பல சூழ்நிலைகளை சமாளிப்பவர்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
நாம் சோர்வாகவும் பெலவீனமாகவும் உணரும்போது தேவன் நம்முடன் இருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ளவர்; அனைத்து வல்லமையும் உடையவர்; மாறாதவர். அவருடைய பெலன் ஒருபோதும் குன்றிப்போவதில்லை. வேதம் சொல்வதை நாம் நம்பலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடை(வார்கள்)” (ஏசாயா 40:31). நம்முடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நடக்கிற யாவும் நமக்கு எதிர்த்து நிற்பதில்லை. ஏனென்றால், இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் நம்மை தகுதிப்படுத்தும் தேவனை நாம் சார்ந்து செயல்படுகிறோம். அவர் மீது நம்பிக்கை வைப்பது நம்மை தொடர்ந்து நடக்கவும், பெலவீனமடையாமல் இருக்கவும், “கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து” எழும்பவும் நம்மை அனுமதிக்கிறது (வச. 31).
கிறிஸ்துவில் நம் போராயுதங்கள்
பாஸ்டர் பெய்லியின் புதிய நண்பர், அவரது வாழ்க்கையில் சந்தித்த துஷ்பிரயோகங்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கதையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞன் இயேசுவின் விசுவாசியாக இருந்தபோதிலும், சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவனாயிருந்ததினால், அவனுடைய வயதிற்கு மிஞ்சிய பிரச்சனைகளை அந்த பருவத்தில் அவன் சந்திக்க நேரிட்டது. அவனுடைய அந்த இக்கட்டான வாழ்க்கை தருணத்தில் அந்த போதகர் அவனுக்கு உதவிசெய்தார்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளுடன் போரிடுகிறோம் (2 கொரிந்தியர் 10:3-6). ஆனால் நமது ஆவிக்குரிய யுத்தங்களை போராடுவதற்கு நமக்கு யுத்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை உலகத்தின் ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவைகள் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (வச. 4). அதற்கு என்ன பொருள்? "பலம்" என்பது நன்கு கட்டப்பட்ட, பாதுகாப்பான இடங்கள். நமது தேவன் கொடுத்த ஆயுதங்களில், “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருக்கிறதிலும்” (6:7) நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போம். எபேசியர் 6:13-18, வேதம், விசுவாசம், இரட்சிப்பு, ஜெபம் மற்றும் பிற விசுவாசிகளின் ஆதரவு உட்பட நம்மைப் பாதுகாக்க உதவும் காரியங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது. நம்மை விட பெரிய மற்றும் வலிமையான சக்திகளை எதிர்கொள்ளும்போது, இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை கையகப்படுத்துவது, நிற்பதற்கும் தடுமாறுவதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய சக்திகளுடன் போராடுபவர்களுக்கு உதவ தேவன் ஆலோசகர்களையும், பல நிபுணர்களையும் பயன்படுத்துகிறார். நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவின் மூலமாக நாம் போராடும் போது, நாம் முடங்கிப்போக அவசியமில்லை. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் நம்மிடத்தில் இருக்கிறது!
சங்கடங்களும் ஆழமான விசுவாசமும்
சனிக்கிழமை காலை வேதவகுப்பின் போது, ஒரு அப்பா தனது அன்பான , திசைமாறிய மகள் ஊருக்குத் திரும்பியதால் பதற்றமடைந்தார். அவளுடைய நடத்தை காரணமாக, வீட்டில் அவளுடன் சங்கடத்துடனே இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட கால நோய் மற்றும் முதுமையின் தாக்கம் அதிகம் வாட்டத் துவங்கின. பல மருத்துவர்களிடம் பல முறை சென்றது குறைந்த பலனையே அளித்தது. அவள் மனம் தளர்ந்தாள். தேவனின் நடத்துதலின்படி, அன்று படித்த வேதபகுதி மாற்கு - 5 அவளுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.
மாற்கு 5:23 இல் வியாதிப்பட்டிருந்த பிள்ளையின் தகப்பனான யவீரு, "என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள்" என்று தத்தளித்தான். அச்சிறுமியைப் பார்க்கச் செல்லும் வழியில், பேரெழுதப்படாத ஒரு பெண்ணின் நீண்டகால உடல்நலக் குறையை இயேசு குணப்படுத்தினார். "மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" (வ.34) என்றார். யவீருவும் அந்தப் பெண்ணும், இயேசுவின் மீதான விசுவாசத்தால் உந்தப்பட்டு அவரைத் தேடினர், அவர்கள் ஏமாற்றமடையவில்லை. ஆனால் இரண்டு சம்பவங்களிலும், இயேசுவைச் சந்திக்கும் வரை, அவ்விருவரின் காரியங்களும் இன்னும் மோசமாகிக்கொண்டே இருந்தது.
வாழ்க்கையின் சங்கடங்களுக்குப் பாகுபாடு கிடையாது. ஆண்,பெண், வயது, இனம் ,வர்க்கம் என்ற எந்த பேதமும் இன்றி ,நாம் அனைவரும் குழப்புகிற, விடை தேடி அலைகிற சூழல்களை எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்குப்படிக்கு அனுமதிப்பதற்கு மாறாக, நாம் அவரைத் தொடும்போது அதை உணருகிறவரும் (வ. 30) நம்மை குணப்படுத்துகிறவருமாகிய அவரில் நமது விசுவாசத்தை வைக்கும்படி உந்தப்படுவதற்கு முயல்வோம்.
விசுவாசத்தின் ஜெயம்
நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.
அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர்.
தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார்.
வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.
தேவனே என் துணையாளர்
என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.
தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.
வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?