எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

உறுதியாயிருத்தல்

ஏட்ரியனும், அவனுடைய குடும்பமும் வாழ் ந்த நாட்டில், இயேசு கிறிஸ்துவின் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் துன்பங்களைச் சகித்தனர். ஆனால் இவற்றின் மத்தியிலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் காட்டினர். தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி மையமாக பயன்படுத்தி, நொருக்கிய அந்த ஆலய வளாகத்தில் நின்றவாறு அவர், “இன்று பெரிய வெள்ளிக் கிழமை, இயேசு நமக்காகச் சிலுவையில் பாடுகளைச் சகித்தார் என்பதை நினைவு கூருகின்றோம்” என்றார், பாடுகள் என்பது விசுவாசிகள் புரிந்து கொண்ட ஒன்று. அவருடைய குடும்பம் அவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிந்து கொண்டது, “நாங்கள் இவ்விடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம்” என்றார். இயேசு சிலுவையில் மரித்தபோது அருகிலிருந்த பெண்களை, இந்த விசுவாசிகளும் பின்பற்றுகின்றனர் (மாற்.15:40). அங்கு மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் தைரியமாக அங்கிருந்தனர். ஒரு தேச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்ட இயேசுவின் நண்பர்களையும், குடும்ப நபர்களையும் கூட அவர்கள் தரக்குறைவாக பேசவும், தண்டிக்கவும் கூடும். ஆயினும் அந்த பெண்கள் இயேசுவின் மீதுள்ள அன்பை அவரோடு கூட இருப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். “அவர் கலிலேயாவிலிருந்த போது, அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த” (வ.40) அந்த பெண்கள் அவருடைய கடைசி நேர ஆழ்ந்த வேதனையின் போது, அவரோடேயிருந்தனர்.

இந்த நாளிலும் நமது இரட்சகர் நமக்காகச் செய்துள்ள மிகப் பெரிய ஈவை நாம் நினைத்துப் பார்ப்போம், அவர் சிலுவை மரணம் வரை சென்று, நமக்காக செய்த தியாகத்திற்காக, நாமும் பலவகையான சோதனைகளைச் சந்திக்கும் போது, இயேசுவுக்காக எப்படி உறுதியாய் நிற்கலாம் என்பதை மனதில் இறுத்திக் கொள்வோம் (யாக்.1:2-4). உலகெங்கும் விசுவாசிகள் கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்திற்காக பாடுகளைச் சகித்ததை நினைத்துக் கொள்வோம். ஏட்ரியன் கேட்டுக் கொண்டது போல, “நீங்களும் எங்களோடு கூட ஜெபத்தில் இணைந்து கொள்ள முடியுமா?”

நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே

என்னுடைய நண்பன் ராபர்ட் மற்றும் அவனுடைய மனைவி காலின் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வை நடத்தி வருகின்றனர். அவர்களின் பரிமாற்றங்களை கவனிப்பது, எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். உணவு வேளையின் போது, ஒருவர் மற்றவருக்கு வெண்ணையை கொடுப்பார், அடுத்தவர் சரியானவேளையில் டம்ளரில் தண்ணீரை நிரப்புவார், ஒருவர், ஒரு கதையையின் வாக்கியத்தை ஆரம்பிப்பார், மற்றவர் அதனை முடிப்பார். சில வேளைகளில், ஒருவர் மற்றவரின் மனதை வாசிப்பதைபோலக் காணப்படும்.

நாம் நேசிக்கும் எந்த நபரைக் காட்டிலும் தேவன் நம்மை அறிந்துள்ளார், நம்மைப் பாதுகாக்கிறார் என்பது எத்தனை ஆறுதலளிப்பதாக உள்ளது. தேவனுடைய ராஜ்யத்தில், தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள மென்மையான, ஆழ்ந்த உறவினைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு விளக்குகின்றார். “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா. 65:24). என்கின்றார். 

ஆனால் இது எப்படி உண்மையாக முடியும்? நான் அநேகக் காரியங்களைக் குறித்து வருடக்கணக்காக ஜெபித்தும் பதிலைப் பெறவில்லையே என்று நாம் நினைக்கலாம். நாம் தேவனோடு நெருங்கி வாழும் போது, நம்முடைய இருதயத்தை அவருடைய இருதயத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் போது, அவருடைய நேரத்தையும், பாதுகாப்பையும் நம்பி வாழக் கற்றுக் கொள்வோம். தேவனுடைய விருப்பதிற்கேற்ப கேட்க நாம் கற்றுக் கொள்வோம். ஜெபிக்கும் போது, நாம் கேட்கும் அநேகக் காரியங்களோடு, ஏசாயா 65ல் குறிப்பிட்டுள்ள படி, தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏற்றவைகளைக் கேட்க கற்றுக் கொள்வோம்; நம்முடைய துயரம் முடிந்து போகும்படியும் (வ.19), பாதுகாப்பான வீடுகள் அமையும்படியும், திருப்தியான உணவும், அனைவருக்கும் மன திருப்தியளிக்கும் வேலையும் கிடைக்கவும் (வச. 21-23), இவ்வுலகத்திற்குச் சமாதானம் (வச. 25) கிடைக்கும் படியாகவும் கேட்க கற்றுக் கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பூரணமாகும் போது, தேவன் இத்தகைய ஜெபத்திற்கு முற்றிலும் பதிலளிப்பார்.

பில்லுக்கான பணம் செலுத்தப்பட்டுவிட்டது

“உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார், நைஜீரியாவைச் சேர்ந்த பீட்டர் என்ற தொழிலதிபர். அவர் லோகாஸ் என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில், ஒரு படுக்கையில் படுத்திருப்பவரைக் குனிந்து பார்த்தவண்ணம் இவ்வாறு கேட்டார். “யாரோ ஒருவர் என்னைச் சுட்டு விட்டார்” என்றான் அந்த இளைஞன். அவனுடைய தொடையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பக் கூடிய அளவுக்கு சுகமாகியிருந்தாலும், அவனுடைய பில் தொகையைக் கட்டினால் தான் அவன் அங்கிருந்து விடுவிக்கப் படுவான். அவ்விடத்திலுள்ள அரசு மருத்துவ மனைகள் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தன. ஒரு சமுக சேவை செய்பவரைக் கலந்தாலோசித்தபின், பீட்டர் தன் பெயரைத் தெரிவிக்காமல், தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தான் ஏற்கனவே ஆரம்பித்து வைத்திருந்த தரும நிதியிலிருந்து, அந்த பில்லுக்கான தொகை முழுவதையும் செலுத்திவிட்டார். இந்த ஈவைப் பெற்றவர்கள் ஒரு நாள் தாங்களும் மற்றவர்களுக்கு இத்தகைய ஈவைக் கொடுப்பார்கள் என்று நம்பினார்.

தேவன் நமக்குத் தரும் செல்வத்திலிருந்து கொடுப்பதைக் குறித்து வேதாகமத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எப்படி வாழ வேண்டுமென மோசே கூறும்போது, முதலாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்றார் (உபா. 26:1-3), பின்னர், தேவையிலிருப்போரைக் கவனிக்குமாறு அறிவுறுத்துகிறார், அந்நியருக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுக்குமாறு கூறுகின்றார் (வ.12). அவர்கள் “பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்” (வச. 15) வாழ்வதால், தேவனுடைய அன்பை தேவையிலிருப்போருக்குக் காட்டுமாறு சொல்கின்றார்.

நாமும் நம்மிடமுள்ள பொருட்களை, சிறிதோ பெரிதோ, பிறரோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவனுடைய அன்பை பிறருக்குக் காட்டுவோம். பீட்டர் கொடுத்தது போல நம்மால் நேரடியாக கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், நாம் தேவனிடம் கேட்போம், நாம் உதவி செய்யத் தேவையானவர்களையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் தேவன் காட்டும் படி அவரிடம் கேட்போம்.

ஆதிகாலத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள்

1979 ஆம் ஆண்டு, முனைவர். காபிரியேல் பார்க்கேயும் அவருடைய குழுவினரும், பழைய எருசலேம் பட்டணத்தின் புறம்பேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், இரண்டு வெள்ளிச் சுருள்களைக் கண்டெடுத்தனர். இருபத்தைந்து ஆண்டுகள் அதனைக் கவனமாக ஆய்வு செய்து, 2004 ஆம் ஆண்டு அது பழைய வேதாகமத்தின் வார்த்தைகள் என்பதைக் கண்டுபிடித்தனர். கி.மு.600 ஆம் ஆண்டில் புதையுண்ட அச்சுருள் இன்னமும் அழியாதிருக்கின்றது. அந்தச் சுருளில் என்ன இருக்கிறது என்பது என்னை மிகவும் அசைத்தது. தேவன், ஆசாரியரைப் போன்று, அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்கும் வாசகத்தைப் பார்க்கிறோம். “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப் பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்”  (எண். 6:24-26) என்பதே.

இந்த ஆசீர்வாதத்தைக் கூறும்போது, தேவன் ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும், தேவனுடைய சார்பாக, ஜனங்களை எப்படி ஆசீர்வதிக்கவேண்டுமெனக் காண்பிக்கின்றார். சபை போதகர்கள் இவ்வாக்கியங்களை, அப்படியே மனனம் செய்து கொண்டு, தேவன் விரும்புகிற படி, மக்களிடம் கூற வேண்டும். இந்த வார்த்தைகள், தேவன் ஒருவரே ஆசீர்வதிப்பவர் என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் மூன்று முறை “கர்த்தர்” என்ற வார்த்தையும், ஆறு முறை “உன்” என்ற வார்த்தையும் வருகிறது. இதனைப் பார்க்கும் போது, தேவன் எவ்வளவாய் தனது ஜனங்கள், தன்னுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது.

ஒரு கணம் சிந்திப்போமாகில், அழியாமலிருந்த பழைய வேதாகமத்தின் அந்த ஒரு பகுதி, தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது. தேவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினையும், அவர் நம்மோடு உறவு கொள்ள விருப்புகின்றார் என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது. நீ தேவனை விட்டு வெகு தொலைவிலிருப்பதாகக் கருதுவாயாயின், இந்த ஆதிகால வார்த்தைகளை உறுதியாகப் பற்றிக் கொள். தேவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கிருபையை செயலில் காட்டல்

“விபத்துகள் மரணத்தைக் கொண்டுவரும் போது, அல்லது காயங்களை ஏற்படுத்தும் போது, கிருபையைக் காட்டவும் அல்லது பழிவாங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது, ஆனால் நான் கிருபையைக் காட்ட விரும்புகின்றேன்” என்றார், சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர். போதகர் எரிக் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் மனைவி, ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டாள். மிகவும் களைப்படைந்தவராய் வீடு திரும்பிய ஒரு தீயணைப்பு வீரர், வாகனத்தை ஓட்டிய போது உறங்கி விட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சட்டப்படி, அவருக்கு மிக அதிகமான சிறைத்தண்டனையை வழங்கலாமா என போதகரைக் கேட்டனர். அந்த போதகரோ, தான் அதிகமாகப் பிரசங்கித்துவரும் மன்னிப்பை, அவருக்கு வழங்க தீர்மானித்தார். அதிலிருந்து, ஆச்சரியப்படும்படியாக, அந்த இருவரும் நண்பர்களாயினர்.

போதகர் எரிக், தன்னுடைய பாவங்கள் யாவற்றையும் மன்னித்த தேவனிடமிருந்து, தான் பெற்ற கிருபையை, பிறருக்கு வழங்கி, வாழ்ந்து காட்டினார். அவருடைய செயலின் மூலம், தீர்க்கதரிசி மீகாவின் வார்த்தைகளைப் பிரதிபலித்தார். மீகா, நம்முடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவனைப் போற்றுகிறார். (மீகா 7:18) தேவன் தன்னுடைய ஜனங்களின் பாவங்களை எவ்வளவு தூரம் மன்னிக்கிறார் என்பதை, மீகா தீர்க்கதரிசி, பார்க்கக் கூடிய அடையாளங்களால் காட்டுகின்றார். தேவன் “நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்” (வ.19) என்கின்றார். அந்த தீ அணைப்பாளர், அன்றைய தினம், விடுதலையை ஈவாகப் பெற்றார், அது அவரைத் தேவனிடம் கொண்டு வந்தது.

 நாம் எவ்வகையான துன்பங்களைச் சகித்தாலும், தேவன் அன்போடு, தம்முடைய  கரங்களை விரித்தபடி, தம்முடைய பாதுகாப்பிற்குள் அரவணைக்கும் படி, நம்மை வரவேற்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்” (வ.18). போதகர் எரிக் செய்ததைப்  போல, அவருடைய கிருபையையும், அன்பையும் நாம் பெறும் போது, நம்மைக் காயப்படுத்தினவர்களையும் மன்னிக்க பெலன் தருகின்றார்.

கிறிஸ்மஸ் விருந்தாளி

1944 ஆம் ஆண்டு, கிறிஸ்மஸ் அன்று மாலை, “ஓல்ட் பிரிங்கர்” என்று அழைக்கப்பட்ட ஒரு கைதி, சிறைச்சாலை மருத்துவமனையில், மரிக்கும் தருவாயில், சக கைதிகளால் நடத்தப்படும்  எளிய கிறிஸ்மஸ் ஆராதனையை எதிர்பார்த்திருந்தார். அவர், “எப்பொழுது இசை ஆரம்பமாகும்?” என்று வில்லியம் மேக்டோகல் என்ற கைதியிடம் கேட்டார். இவரும் பிரிங்கரோடு, சுமத்ராவிலுள்ள முன்டோக் சிறைச்சாலையில், கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். “சீக்கிரத்தில்” என்றார், மேக்டோயல். “நல்லது, அப்படியானால் நான் அவர்களின் பாடலை, தூதர்களின் பாடலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்,” என்று மரிக்கும் நிலையிலுள்ள பிரிங்கர் கூறினார்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிங்கர் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விலகிப் போயிருந்தாலும், கடைசி நாட்களில், அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு, தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார். யாரையும் கசப்பான முகத்தோடு பார்க்கும் அவர், இப்பொழுது புன்முறுவலோடு, “முற்றிலும் மாற்றம் அடைந்தேன்” என்று கூறுவதாக மேக்டோகல் தெரிவித்தார்.

மெலிந்து போன, பதினோரு கைதிகளாலான பாடகர் குழு, பிரிங்கரின் விருப்பப்படி, அமைதியான இரவு (Silent Night) என்ற பாடலைப் பாடி முடித்ததும், பிரிங்கரும் அமைதியாக மரித்தார். அவர் மீண்டும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், இப்பொழுது தேவனோடு பரலோகத்தில் இருப்பார் என்றும், “பிரிங்கருக்கு சாவு என்பது, இனிய கிறிஸ்மஸ் விருந்தாளியாக அமைந்தது” என்றும் மேக்டோகல் கூறினார்.

பிரிங்கர், சாவை எதிர் நோக்கிய விதம், எனக்குச் சிமியோனை நினைவுபடுத்துகின்றது. இந்த பரிசுத்தவானுக்கு, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய்” என்று பரிசுத்த ஆவியினாலே அறிவிக்கப் பட்டிருந்தது. (லூக். 2:26) சிமியோன் தேவாலயத்தில் இயேசுவைக் கண்டு,    “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்… உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்றார் (வச. 29,32).

பிரிங்கரோடு சேர்ந்து, மிகப் பெரிய கிறிஸ்மஸ் பரிசாக நாம் பெற்றுக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தைக் காத்துக் கொள்வதேயாகும்.

பரத்திலிருந்து வரும் ஈவு

ஒரு பழங்கால கதையில், நிக்கோலாஸ் என்ற ஒரு மனிதன் (கிபி 270 ல் பிறந்தவர்) ஓர் ஏழை தகப்பனைக் குறித்துக் கேள்விப் படுகின்றான். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப்படுகின்றார், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கவும் அவரிடம் ஒன்றுமில்லை. அந்த தகப்பனாருக்கு ரகசியமாக உதவும் படி விரும்பிய நிக்கோலாஸ், தங்கம் வைக்கப்பட்ட ஒரு பையை, ஜன்னல் வழியே எறிகின்றார். அது அங்கு, அனல் அடுப்பின் அருகில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் விழுந்தது. அவர் தான் செயின்ட். நிக்கோலாஸ், பின்னர் சான்டா கிளாஸ் என்று நினைவு கூறப்படுகின்றவர்.

நான், பரிசுகள் மேலிருந்து வரும் என்ற கதையை கேட்டபோது, நம்முடைய பிதாவாகிய தேவன், நம்மீது உள்ள அன்பினாலும், இரக்கத்தினாலும், தம்முடைய சொந்த குமாரனை, இவ்வுலகிற்கு மிகப்பெரிய ஈவாக, ஓர் அற்புதமான பிறப்பின் மூலமாக அனுப்பினார், என்பதை நினைத்துக் கொண்டேன். பழைய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்று அர்த்தம் (1:23) என்பதை மத்தேயு சுவிசேஷத்தில் காண்கின்றோம்.

நிக்கோலாஸ்ஸின் பரிசு எத்தனை அருமையாயிருந்ததோ, அதையும் விட மிகவும் அற்புதமானது இயேசுவாகிய ஈவு. அவர் பரலோகத்தை விட்டு இறங்கி, மனிதனாகப் பிறந்தார். மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், அவர் இப்பொழுது நம்மோடிருக்கும் தேவன். நாம் கவலையும் வேதனையும் அடைந்த வேளைகளில் நமக்கு ஆறுதல் தருகின்றார், நாம் மனம் சோர்ந்த வேளைகளில், நமக்கு ஊக்கம் தருகின்றார், நாம் ஏமாற்றப்படும் போது, நமக்கு உண்மையைத் தெரிவிக்கிறார்.

புயலுக்கு அடைக்கலம்

1763 ஆம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில், சோமர்செட் என்ற இடத்தில், ஒரு மலை அடிவாரத்திலுள்ள சாலை வழியே ஒரு இளம் போதகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்பட்ட கொட்டும் மழைக்கும், பயங்கர மின்னலுக்கும் தப்பும்படி ஒரு குகையினுள் அடைக்கலமானார். அங்கிருந்து சேடர் பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்து வியந்து, தனக்கு அடைக்கலமும், சமாதானமும் ஈவாகத் தந்த தேவனைக் குறித்து தியானிக்கலானார். அங்கு காத்திருந்த வேளையில், ஒரு பாடலை எழுத ஆரம்பித்தார். “பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே...’’ என்று ஆரம்பிக்கும் பாமாலை பாடலை எழுதினார்.

அகஸ்டஸ் டோப்பிளாடி இப்பாடலை எழுதிய போது, இதேப் போன்று ஒரு மலையில் மோசே பெற்ற அனுபவத்தை நினைத்திருப்பாரோ, என்னவோ நமக்குத் தெரியாது (யாத். 33:22). ஒருவேளை அப்படியும் இருந்திருக்கலாம். தேவன் மோசேக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான உறுதியையளிக்கின்றார் என்பதனை யாத்திராகமத்தின் இப்பகுதி விளக்குகின்றது. மோசே தேவனிடம் அவருடைய மகிமையைக் காண்பிக்கும்படி கேட்ட போது, தேவன் கிருபையாக அவனிடம், ’’ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது” என்றார் (வச. 20). அவர் மோசேயை கன்மலையின் வெடிப்பிலே வைத்து அவருடைய கரத்தினால் மூடி, அவ்விடத்தில் கடந்து சென்றார். அவருடைய பின் பக்கத்தை மட்டும் அவன் காணும்படிச் செய்தார். தேவன் அவனோடு இருக்கின்றார் என்பதை மோசே தெரிந்துகொண்டான்.

மோசேயிடம் தேவன் சொல்லிய வார்த்தைகளை நாமும் நம்புவோம். “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (வச. 14) என்றார். நாமும் தேவன் தரும் அடைக்கலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மோசேயும் அந்த ஆங்கிலேயப் போதகரும் சந்தித்ததைப் போன்று நாமும் நம் வாழ்வில் அநேகப் புயல்களைச் சந்திக்கலாம். நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, அவருடைய சமாதானத்தால் நம்மை நிரப்பும்.

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.