எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

அந்நியரை நேசித்தல்

நான் ஒரு புதிய நாட்டிற்கு இடம்பெயர்ந்த போது என்னுடைய முதல் அனுபவம் சற்றே விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. அன்று என் கணவர் பிரசங்கம் செய்யவிருந்த சிறிய ஆலயத்திலே ஒரு இடம் கண்டுபிடித்து நான் அமர்ந்தபொழுது  வயதான ஒரு நபர் சற்றே முரடாக என்னை “தள்ளி உட்காரு” என்றார். அவருடைய மனைவி என்னிடம் மன்னிப்பு கேட்டு, அந்த இடம் அவர்கள் எப்போதும் உட்காரும் இடம் என்று எனக்கு விளக்கினார்கள். முந்திய காலத்தில் சபையார் தங்களுக்கு வேண்டிய இடத்தை ஆலயத்தில் வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றுஅறிந்தேன். இந்த பழக்கம் ஆலயத்திற்கு வருமானம் தருவது மட்டுமல்லாமல் ஒருவர் இடத்தை இன்னொருவர் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இந்த மனப்பான்மை தெளிவாக சில தசாப்தங்களுக்கு இன்னும் பரவி இருந்தது.

நான் பார்த்த இவ்வித கலாச்சார முறைகளுக்கு மாறாக, தேவன் எப்படி இஸ்ரவேலரை அந்நியர்களை வரவேற்க அறிவுறுத்தினார் என்று நான் பிறகு யோசித்தேன். தம்முடைய ஜனங்கள் செழித்து வாழ்வதற்கு வழிமுறைகளைச் கூறியபின் அந்நியரை வரவேற்க அவர்களுக்கு நினைவூட்டினார் ஏனென்றால் அவர்களும் ஒரு காலத்தில்  அந்நியராக  இருந்தவர்கள் தான். அவர்கள் அந்நியரை கனிவாக நடத்துவது மட்டுமன்றி அவர்களை நேசிக்கவும் கூட தேவன் கட்டளையிட்டார.  தேவன் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவளுக்கு கொடுத்தார் அவ்விடத்தில் இருந்த மற்றவர்களையும் அவர்கள்  நேசிக்க வேண்டும்  என்று எதிர்பார்த்தார்

நீங்கள் அந்நியரை  உங்கள் மத்தியில்  சந்தித்தால் , தேவனுடைய அன்பை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள தடையாய் இருக்கும் கலாச்சார பழக்கங்களை வெளிப்படுத்துமாறு அவரை கேளுங்கள்.

கிறிஸ்துவை எப்படி பிரதிபலிப்பது?

பிரான்ஸ் நாட்டில் லீசியு என்ற ஊரைச் சேர்ந்த தெரெஸ் என்னும் கன்னியாஸ்திரி, சிறுமியாக இருந்தபோது மகிழ்ச்சியுடனும் கவலையற்றும் இருந்தாள். ஆனால் அவளுக்கு நான்கு வயதானபோது அவளுடைய அம்மா இறந்துவிட்டார்; அப்பொழுது மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகவும் எளிதில் கலங்குகிறவளாகவும் மாறிவிட்டாள். பல வருடங்களுக்கு பின்னர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தினநாள் ஒரு திருப்பம் காணப்பட்டது. தன்னுடைய சபையோடு பண்டிகையை அனுசரிக்கும்போது, ஒரு மாற்றத்தை அவள் உணர்ந்தாள். இறைவன் அவளை பயத்தினின்று விடுவித்து மகிழ்ச்சியை அளித்தார். இந்த மாறுதல், இறைவன் வானத்தை விட்டு பூமிக்கு வந்து இயேசு என்னும் மானிடனாக அவளுக்குள் வாசம் செய்த வல்லமையால் தான் உண்டாயிற்று என்ற மாற்றத்திர்கான காரணத்தை அவள் பகர்ந்தாள்.

இறைவன் நமக்குள் வாசம் செய்வது என்றால் என்ன? அது ‘ஒரு ரகசியம்’ என்று பவுல் கொலோசெயருக்கு எழுதினார். அது “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டது” (கொலோசெயர் 1:25) என்கிறார். “இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 1:27). இப்பொழுது கிறிஸ்து கொலோசெயர் நடுவே வாசம் செய்கிறதினாலே அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய சந்தோஷத்தை அனுபவித்தார்கள். பழைய பாவத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.

நாமும் இயேசுவை நமக்கு இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் நம்மில் வாசம் பண்ணுகிற இந்த ரகசிய வாழ்வை அனுபவிப்போம். அவருடைய ஆவியின் மூலமாக திரெசை போலவே அவர் நம்முடைய பயத்தினின்றும் நம்மை விடுவிப்பார். ஆவியின் கனி - சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை போன்றவை -  ( கலாத்தியர் 5:22-23) நம்மில் வளரும்.

‘கிறிஸ்து நமக்குள் வாசமாயிருக்கும் இந்த அருமையான ரகசியத்தை இறைவன் நமக்கு தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்.

வதந்திகளை நிறுத்துதல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள புனித திருத்துவ தேவாலயத்தில் ஊழியராக சார்ல்ஸ் சிமியோன் நியமிக்கப்பட்ட போது அநேக ஆண்டுகள் அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. சிமியோனுக்கு பதிலாக இணை ஊழியர் நியமிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான சபையினர் விரும்பியதால் அவரைக் குறித்து வதந்திகளைப் பரப்பி அவருடைய ஊழியத்தை நிராகரித்தனர் - மட்டுமல்லாமல் சில நேரங்களில் அவதை ஆலயத்திற்கு வெளியே விட்டு பூட்டினர். ஆனால் தேவனின் ஆவியால் நிரம்பப்பட விரும்பிய சிமியோன், வாழ்வதற்கு சில கொள்கைகளை உருவாக்கி கொண்டு வதந்திகளை சமாளிக்க முயன்றார். “ஒருவர், வதந்திகள் முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டால், நம்பக்கூடாது. மறுபக்கத்தை கேட்டால் வதந்திகளின் வித்தியாசமான விஷயங்களை கேட்க நேரிடும்”.

இந்தச் சூழ்நிலையில், சிமியோன் “வதந்திகளும், தீங்கிழைக்கும் பேச்சுக்களும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்த முடியாது. இப்படிப்பட்டவைகளை பேசக்கூடாது” என்று தேவன் தம்முடைய மக்களுக்கு கொடுத்த கட்டளையைப் பின்பற்றினார். தேவனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது : “பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:16). “அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக (யாத். 23:1) என்று  யத்திராகமத்தில் மற்றொரு கட்டளை இதை வலுப்படுத்துகிறது.

நாம் ஒவ்வொருவரும் வதந்திகளையும் தவறான அறிக்கைகளையும் பரப்பாவிட்டாலும், அவைகளைக் கேட்ட அந்த கணத்திலே அவைகளை நிறுத்தியிருந்தால் இந்த உலகம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் அன்பினால் உண்மையைப் பேசி தேவனுக்கு மகிமையுண்டாக நம்முடைய வார்த்தைகளை உபயோகிக்க பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவோமாக.

மீன் பிடிக்க அனுமதி இல்லை

ஜெர்மானிய நாசிகளின் பேரழிவில் தப்பிப் பிழைத்த காரி டென் பூம் என்பவள் மன்னிப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். மன்னிக்கப்பட்ட பாவங்கள், கடலின் அடியில் எறியப்பட்டன என்ற காட்சியையே அவள் மனதில் பிரதானமாக வைத்திருப்பதாக அவளுடைய புத்தகத்தில் எழுதுகின்றாள். “நாம் பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் அவற்றை கடலின் ஆழத்தில் எறிந்து விடுவதால் அவை நிரந்தரமாக போய் விட்டன……பின்னர் தேவன், இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை என்ற ஓர் அடையாளத்தையும் அங்கு வைக்கின்றார்” என்பதாக எழுதியுள்ளாள்.

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் சில வேளைகளில் கவனிக்கத் தவறிய முக்கியமான உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றாள். தேவன் நம்முடைய தவறுகளை மன்னிக்கும் போது, நாம் முற்றிலுமாக மன்னிக்கப் படுகின்றோம்!  நாம் நம்முடைய வெட்கத்திற்குரிய செயல்களை தோண்டி எடுக்கத் தேவையில்லை, நம்முடைய அழுக்கான உணர்வுகளில் உழலத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவருடைய கிருபையையும் மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டு, விடுதலையோடு அவரைப் பின்பற்றுவோம்.

“இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை” என்ற ஒரு கருத்தினை சங்கீதம் 130 ல் காண்கின்றோம். தேவன் நேர்மையானவராய் இருக்கின்றார், அவர் மனம் வருந்துகின்றவர்களின் பாவத்தை மன்னிக்கின்றார், “உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (வ.4) என்கின்றார் சங்கீதக்காரன். தேவன் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு காத்திருக்கின்றான் (வ.5). “அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்” (வ.8) என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றான். அவரை நம்பியிருப்பவர்கள் “முழுமையான மீட்பை பெற்றுக் கொள்வர்” (வ.7) என்கின்றான்.

நாம் வெட்கத்தாலும், உதவாதவர்கள் என்ற எண்ணத்தாலும் பிடிக்கப்படும் போது, நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனுக்குப் பணிசெய்ய முடியாது. நம்முடைய கடந்த கால எண்ணங்கள் நம்மைத் தடைசெய்துவிடும். நீ செய்த தவறுகளை எண்ணி கஷ்டமான சூழலில், இருப்பாயானால், தேவனிடம் உதவி கேள், அவருடைய ஈவாகிய மன்னிப்பிலும், புதிய வாழ்விலும் முழு நம்பிக்கையையும் வை. அவர் உன்னுடைய பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிட்டார்!

காலா காலங்களாகப் பயணிக்கும் கடிதங்கள்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், அகில உலக கடிதம் எழுதும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் கருப்பொருள், “நீ உன்னை, காலா காலங்களாகப் பயணிக்கும் ஒரு கடிதமாக கற்பனை செய்து கொள். உன்னுடைய வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்புகின்றாய்?” என்பது.

வேதாகமத்தில் அநேக கடிதங்களை நாம் காண்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அகத்தூண்டுதலாலும், வழி நடத்தலாலும் எழுதப் பட்ட இக்கடிதங்கள், பல காலங்களின் வழியாக பயணம் செய்து நம்மை வந்தடைந்துள்ளன. கிறிஸ்தவ சபைகள் பெருகின போது, இயேசுவின் சீஷர்கள், ஐரோப்பாவிலும், ஆசியா மைனரிலும் உள்ள சபையின் மக்கள், கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்படி, கடிதங்கள் எழுதினர். இந்த கடிதங்களின் தொகுப்புகளை இன்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.

இக்கடிதங்களை எழுதிய ஆசிரியர்கள், வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்பினார்கள்? யோவான் தன்னுடைய முதல் கடிதத்தில், “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து” எழுதுகின்றார் (1 யோவா.1:1). அவர், தான் நேரடியாகச்     சந்தித்த, ஜீவனுள்ள கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார். தன்னுடைய வாசகர்கள், “ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாகவும்”, “பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும்” ஐக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி இவற்றை எழுதுகின்றார் (வ.3). நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருக்கும் போது நம்முடைய சந்தோஷம் நிறைவாய் இருக்கும் என்று எழுதுகின்றார் (வ.4). வேதாகமத்திலுள்ள இந்த கடிதங்கள், காலங்களை கடந்து வந்து நம்மை ஐக்கியத்திற்குள் இழுக்கின்றது, நித்திய தேவனோடு ஐக்கியமாக இருக்க அழைக்கின்றது.

துயரத்தின் மத்தியில் தேவனை நம்புதல்

“பப்பா ஜாண்” என்று அழைக்கப் படும் ஒரு மனிதன் தான் புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக அறிந்து கொண்டான். அவனும் அவனுடைய மனைவி கேரலும், நோயோடு தாங்கள் செய்யும் பயணத்தைக்குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தேவன் விரும்புகின்றார் என்பதை உணர்ந்தனர். அவர்களுடைய பாதிப்பின் வழியாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை விசுவாசித்தனர். அவர்களின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் வேதனை நேரங்களை, இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பதித்து வந்தனர்.

தன்னுடைய கணவன் “இயேசுவின் விரிந்த கரத்தினுள் சென்று விட்டார்” என்று கேரல் எழுதிய போது, நூற்றுக் கணக்கானோர் பதிலளித்தனர். கேரலின் வெளிப்படையான பகிர்வுக்காக அநேகர் நன்றி கூறினர். கிறிஸ்தவர்களின் மரணம் பற்றி கேட்பது ஒரு வகையில் நன்மையானது, ஏனெனில், “நாம் அனைவரும் ஒரு நாள்  மரிக்கப் போகின்றோம்” என்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், நாங்கள் இந்த தம்பதியரை நேரடியாகப் பார்த்ததில்லை எனினும், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள  நம்பிக்கையைப் பார்த்து,  நாங்களும் எங்களுடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவு ஊக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக    தெரிவித்திருந்தார்.

 சில வேளைகளில் பப்பா ஜாண், தாங்கமுடியாத அளவு வேதனையைச் சகித்த போதும், அவனும் கேரலும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேவன் அவர்களை எப்படி தாங்கினார் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் சாட்சி, தேவனுக்கென்று கனி தரும் என்பதை அறிந்திருந்தனர். பவுல் துன்பங்களைச் சகித்த போது, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12) என்றார்.

நாம் நேசிக்கும் நபரின் மரணம் மூலமாகவும் தேவன், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தை (பிறரின் விசுவாசத்தையும்) கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் (வ.9) பெலப்படுத்த முடியும். நீயும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா?  ஆறுதலையும் சமாதானத்தையும் நம் தேவனால் தர முடியும் என்பதை அறிவாயாக.

முட்டாள்தனமான புதிய வாழ்க்கைமுறை

சில காரியங்களை நாம் அநுபவித்தால் மட்டும் தான், நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான் என்னுடைய முதல் குழந்தையைக் கருவில் சுமந்த போது,  மகப்பேறு பற்றி அநேகப் புத்தகங்களை வாசித்தேன், அநேகப் பெண்களிடம் பேறுகால வேதனையைப் பற்றியும், பிள்ளை பெறுதலைப் பற்றியும் கேட்டறிந்தேன். ஆனாலும் அதனைக் குறித்து முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சரீரம்  நிறைவேற்றக் கூடிய அந்தக் காரியம், என்னுடைய பார்வைக்கு முடியாததாகத் தோன்றியது!

கிறிஸ்துவின் மூலம் தேவன் அருளிய இரட்சிப்பின் மூலம், தேவனுடைய இராஜியத்தில் பிறப்பதைக் குறித்து, பவுல், 1 கொரிந்தியரில் எழுதுகின்றார். அதனை அநுபவியாதவர்களால், அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது. அவமானத்தாலும், தோல்வியினாலும், பெலவீனத்தாலும், இயேசு சிலுவையில் அடைந்த மரணம் நமக்கு இரட்சிப்பைத் தரும் என்ற செய்தி “முட்டாள்தனமாக” தோன்றலாம். ஆனாலும் இந்த முட்டாள்தனத்தைக் குறித்தே பவுல் பிரசங்கம் செய்தார்!

அது இவ்வாறு இருக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வலிமையான அரசியல்வாதியின் மூலம் இரட்சிப்பு வரும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் ஏதோவொரு அடையாளத்தின் மூலம் இரட்சிப்பு வரும் என நினைத்தனர். சிலர் தங்களுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் அடையும் சாதனையை இரட்சிப்பு என நினைத்தனர் (1 கொரி. 1:22). ஆனால் தேவன் தம்மை விசுவாசிக்கின்றவர்களும், அதனை அநுபவிக்கின்றவர்களும் மட்டுமே உணரத்தக்கதாக, ஆச்சரியப்படும் வகையில், இரட்சிப்பைக் கொண்டுவந்தார்.

தேவன் அவமானத்துக்கு உரியதையும், பலவீனமானதையும், சிலுவை மரணத்தையும் தெரிந்துகொண்டார், அதனையே ஞானத்திற்கும், வல்லமைக்கும் அடிப்படையாக்கினார். நாம் நினைத்துப் பார்க்கமுடியாததை தேவன் முடித்தார். அவர் பெலவீனரையும், பைத்தியமானவைகளையும் தெரிந்து கொண்டார் (வ.27).

நாம் எதிர் பார்ப்பதற்கு மாறாக, அவர் தெரிந்துகொண்ட ஆச்சரியமான வழிகளே எப்பொழுதும் சிறந்தவை.

அவன் என்னை மாற்றினான்

லண்டன் பட்டணத்தில், மிகப்பெரிய விபச்சார விடுதி நடத்தி வந்த ஜாண், சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டபோது, தன்னை நல்லவன் என்று தவறாக நம்பினான். அங்கு சிறைச்சாலையில் நடைபெற்று வந்த வேதாகம வகுப்பில் தரப்படும் கேக் மற்றும் காப்பிக்காக அங்கு சென்றான். ஆனால், அங்கு வருபவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சி, அவனைச் சிந்திக்க வைத்தது. முதல் பாடல் வேளையில் அவன் அழ ஆரம்பித்தான், பின்னர் ஒரு வேதாகமத்தைப் பெற்று வாசிக்க ஆரம்பித்தான். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் அவனை மாற்றியது. எதிர்பாராத விதமாக அவன் “துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில்…………….. அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை” (எசே.18:27-28) என்ற வார்த்தையைப் படித்தான். தேவனுடைய வார்த்தைகள் அவனுக்குள் ஜீவன் பெற்றது, அவன் உணர்வடைந்தான், “நான் நல்லவனல்ல,………..நான் தீமை செய்தேன், நான் மாற வேண்டும்” என்றான், அவன் போதகரோடு சேர்ந்து ஜெபித்த போது, “நான் இயேசுவைக் கண்டேன், அவர் என்னை மாற்றினார்” என்றான்.

தேவனுடைய ஜனங்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த போது, எசேக்கியேல் தீர்க்கதரிசி, இந்த வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் தேவனை விட்டு, பின்வாங்கிப் போயிருந்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி, “புது இருதயத்தையும், புது ஆவியையும்” (வ.31) உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.32) என்ற வார்த்தைகள் ஜாணுக்கு உதவியது. பாவிகளை மனந்திரும்புங்கள் (லூக்.5:32) என்று அழைத்த இயேசுவைப் பின்பற்றினான்.

நம்முடைய ஆவியில் உணர்த்தப் படுகின்ற பாவங்களைக் குறித்து மனம் வருந்துவோம். நாமும் மன்னிப்பைப் பெற்று விடுதலையோடு வாழ்வோம்.

பிரயாணத்திற்குத் தேவையான பெலன்

ஒரு கோடை காலத்தில், என்னால் செய்து முடிக்க முடியாது என்று நான் எண்ணிய ஒருகாரியத்தை செய்து கொண்டிருந்தேன், அது ஓர் எழுதும் வேலை,  ஒரு கால வரையரையோடு கூடிய அந்த திட்டத்தை நிறைவேற்ற, அநேக நாட்களைச் செலவிட்டும் அதனை என்னால் முடிக்க முடியவில்லை, நான் மிகவும் சோர்வடைந்ததோடு, உற்சாகத்தையும் இழந்தேன். இத்திட்டத்தைக் கைவிட எண்ணினேன். அப்பொழுது ஒரு ஞானமுள்ள சினேகிதி, “எப்பொழுது கடைசியாக உன்னைப் புதிப்பித்துக் கொண்டாய்? உனக்கு ஓய்வு அவசியம், அத்தோடு ஒரு நல்ல உணவையும் நீ சாப்பிட வேண்டும்” என்றாள்.

அவள் கூறியது சரிதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுடைய ஆலோசனை, எலியாவைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவன் யேசபேலிடமிருந்து ஒரு பயங்கரமான செய்தியைக் கேள்விப் படுகின்றான்
(1 இரா.19:2). என்னுடைய எழுதும் திட்டம், எலியா தீர்க்கதரிசியின் அநுபவத்திற்கு அருகில் வைத்து ஒப்பிடத்தகுந்தல்ல, கர்மேல் பர்வதத்தில் பொய் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று போட்ட போது, யேசபேல் எலியாவிடம் ஆட்களை அனுப்பி, அவனைக் கொன்றுபோடுவதாகச் செய்தி அனுப்புகின்றாள். விரக்தியடைந்த எலியா சாவை விரும்புகின்றான், ஆனால் ஒரு நல்ல தூக்கதிற்கு உள்ளாகின்றான், இரு முறை தேவ தூதன் அவனைத் தட்டி எழுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுக்கின்றான். தேவன் அவனுடைய சரீரத்தைப் பெலப்படுத்திய பின்பு, அவனுடைய பிரயாணத்தை அவனால் தொடரமுடிந்தது.

“நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” (வச. 7) ஆக இருக்கலாம், நமக்கு ஓய்வு அவசியமாக இருக்கலாம், நம்மை திருப்தி படுத்தும் சத்தான உணவு தேவைப்படலாம். நாம் களைப்படைந்தவர்களாய், பசியோடு இருக்கும் போது, ஏமாற்றத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக நேரலாம். ஆனால் இந்த விழுந்து போன உலகத்தில், தேவன், அவருடைய படைப்புகளின் மூலம், நம்முடைய சரீரத் தேவைகளைச் சந்திக்கும் போது, நாமும் அவருக்குப் பணிசெய்யும்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.