பழைய வழக்கத்தை முறித்துவிடு
டேவிடுக்கு முதல் முறையாக தன் தகப்பனிடம்மிருந்து தனது பதினாலாவது பிறந்த நாள் அன்று அடி கிடைத்தது. தெரியாமல் வீட்டு கண்ணாடியை அவன் உடைத்ததினால் “என்னை மிதித்து உன்னை குற்றினார்” என்று சொன்னான் டேவிட். ஆனால், அதர்க்கு பிறகு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றான். அவர் குடித்துவிட்டு எப்போதும் பிரச்சனை பண்ணிகொண்டிருப்பார். இதற்கு ஒரு முடிவு உண்டாகும்படி நான் பிரயாசப்படுகிறேன் என்று வருத்ததுடன் கூறினான்.
இதற்கு முடிவு வரவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த டேவிடுக்கு இந்த நிலமைக்கு வருவதர்க்கு அதிக வருடங்கள் எடுத்தது. தன் வாலிபத்தின் அதிக நாட்கள் அவன் சிறைச்சாலைகளிளும் போதை சிகிச்சை மையங்களிலும் தான் கிளத்தான். தன் கனவுகளை அனைத்தும் உடைந்து போன நிலமையில் இருக்கும்போது அவன் செல்லும் சிகிச்சை நிலையில் மூலம் இயேசு கிறிஸ்துவைபற்றி அற்நதான். அது முதல் அவன் நம்பிக்கை படி படியாக வளர தொடங்கியது. இப்போதோ டேவிட் சொல்வது என்னவென்றால் “கசப்பு நிறைந்த என் வாழ்வு இப்போது அதர்க்கு எதிர்மாறாக மாரிவிட்டது. அனுதினமும் காலையில் என வாழ்கையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
மற்றவர்களோ அல்லது நாம் நமக்கு செய்த தவறுகளால், உடைக்கப்பட்ட இருதயத்தோடு நாம் தேவனிடம் வருவோமானால், தேவன் அதை எடுத்து புதிதாக மாற்றுகிறார் (2 கொரி. 5:11). தேவ அன்பும் புது வாழ்வும் நம் பழைய வாழ்க்கையை முறித்துவிட்டு ஒரு புது வாழ்வையும் எதிர்காலத்தையும் நமக்கு தருகிறது. அதை தொடர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையும் பெலனும் அவரிடம் இருந்து பெறும்படி நம்மோடு இருக்கிறார்.
நல்ல புத்தகத்துடன் நெருங்கு
ஐஸ்லாந்து என்று சிறிய நாடு வாசிப்பவர்களின் நாடு. உண்மையில் இந்த நாட்டில், ஒரு நபருக்கு, ஒவ்வொரு வருடமும், மற்றெந்த நாடுகளையும் விட அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்லாந்து மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் புத்தகங்களைக் கொடுப்பதும் பிறகு இரவு முழுவதும் நீண்ட நேரம் வாசிப்பதும் ஒரு பாரம்பரியம். இந்தப் பாரம்பரியம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது, இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் காகிதம் மலிவாயிருந்தது. இலையுதிர் பிந்தய காலத்தில் ஐஸ்லாந்து வெளியீட்டாளர்கள் புதிய தலைப்புகளுடன் சந்தையை புத்தகங்களினால் நிரப்பினர். இப்போது நாட்டினி புதிய வெளியீடுகளின் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் ஒவ்வொரு ஐஸ்லாந்திய வீட்டிற்கும் அனுப்பப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் கிறிஸ்மஸ் புத்தக வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது.
ஓரு நல்ல கதையை உருவாக்கும் திறனையும் அதனை கற்பிக்கவும், அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கவும் தேவன் அனேகரை ஆசீர்வாதமாக வைத்திருப்பகற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஒரு நல்ல புத்தகம் போல் எதுவும் இல்லை! எல்லாவற்றிலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம், பைபிள், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட, கவிதை மற்றும் உரைநடை, சில மாபெரும் கதைகள்-சில அவ்வாறு இல்லை, ஆனால் அவையனைத்தும் ஊக்கமளித்தன. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டியது போல 'வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துக்கொள்ளுகலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியை படிப்பிக்கிறதற்கும், பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது" (2 தீமோ. 3:16-17). வேத வாசிப்பு நம்மைக் கண்டித்து உணர்த்துகிறது, ஊக்குவிக்கிறது, அவருக்காக வாழ உதவி செய்கிறது மற்றும் சத்தியத்திற்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது (2:15).
நம்முடைய வாசிப்பில், எல்லாவற்றிலும் மகத்தான புத்தகமான பைபிளை வாசிக்க நேரத்தை கடைப்பிடிக்க மறந்துவிடக்கூடாது.
சுவாசமும் அதின் சுருக்கமும்
மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.
அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.
எல்லா தேவ பிள்ளைகளுக்கும் இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.
அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை
என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.
அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1), “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8) என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.
நம்மில் அநேகர் - ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் - இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம். இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.
ஏமாற்றப்பட வேண்டாம்
வெட்டுக்கிளி, புள்ளிகளுள்ள வெளிப்புற இறக்கைகளுடனும், பறக்கும் போது ஒளிரும் தன்மையுள்ள மஞ்சள் நிறத்தில் மைப்பூச்சுப்போல படிந்திருக்கும் இறக்கைகளையுமுடைய ஒரு அழகிய பூச்சி. ஆனால் அதனுடைய அழகு சிறிது ஏமாற்றக்கூடியதாயிருக்கிறது. இந்தப் பூச்சி பயிர்களை ஆக்கிரமித்து, சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் கொண்டது. வெட்டுக்கிளி, கோதுமை, மக்காச்சோளம், மற்றும் பிற தாவரங்கள் அடங்கிய பச்சை நிறமான பகுதிகளை தின்றுவிடும். அவைகள் இந்தத் தாவரங்களிலுள்ள சாறுகளை உறிஞ்சி அவைகளை பயனற்றவைகளாக்கி விடும்.
ஆதாம் மற்றும் ஏவாளின் கதையில், நாம் ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலைப்பற்றி காண்கிறோம். சர்ப்பமாகிய சாத்தான், இந்த தம்பதியர், தேவனுக்கு கீழ்படியாமலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால் தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சொல்லி, ஏமாற்றினான் (ஆதீ. 3:1-7). ஆனால் ஏன் ஒரு சர்ப்பத்திற்கு செவிகொடுக்க வேண்டும்?. அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா?. சாத்தான் மிகவும் அழகுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டான் என்று வேதம் சொல்லுகிறது. (எசே. 28:12). ஆயினும் சாத்தான் தான் ஏவாளைக் கவர்ந்திழுக்க பயன்படுத்திய அதே சோதனையினால் தானும் விழுந்தான். : “நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14, எசே. 28:9).
இப்பொழுது சாத்தானுக்கு இருக்கும் எந்த அழுகும் ஏமாற்றத்தான் பயன்படுகிறது (ஆதி. 3:1, யோவா. 8:44, 2 கொரிந்தியர் 11:14). அவன் விழுந்ததைப்போல, மற்றவர்களையும் வளரவிடாதப்படி கீழே இழுக்க பார்க்கிறான். ஆனால் அவனைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் நம் அருகில் இருக்கிறார். நம் அழகான மீட்பர் இயேசுவிடம் நாம் ஓடலாம்.
வறண்ட பகுதியில் பிரகாசிக்கும் புள்ளிகள்
கர்நாடகா மாநிலத்தில், பாறை நிறைந்த ஒரு சிறிய பகுதியை நானும் என்னுடைய கணவனும் பார்வையிட்ட போது, ஒரு வறண்ட பாறையில் மலர்ந்திருந்த சூரிய காந்தி மலரைப் பார்த்தேன். அவ்விடத்தில் முட்களைக் கொண்ட கள்ளிச் செடிகளும், களைகளுமே வளர்கின்றன. இந்த சூரியகாந்தி செடி வீடுகளில் வளரும் மற்றவற்றைப் போல உயரமாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த மலரின் பிரகாசம் என்னை மகிழ்ச்சியாக்கியது.
ஒரு வறண்ட நிலப் பரப்பில் காணப்பட்ட எதிர் பாராதபிரகாசம், இயேசுவின் விசுவாசிகளின் வாழ்வும் வெறுமையாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருப்பதை நினைவுபடுத்தியது. பிரச்சனைகள் மேற்கொள்ள முடியாதவைகளாக காணப்படலாம். சங்கீதக்காரனின் கதறலைப் போன்று, நம்முடைய ஜெபங்களும் செவிகொடுக்கப் படாதவைகளாக காணப்படலாம். “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்” (சங். 86:1) என்கின்றார். அவரைப் போல நாமும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கலாம் (வ.4).
நாம் ஆராதிக்கும் தேவன் உண்மையுள்ளவர் என்று தாவீது வெளிப்படுத்துகின்றார், “ஆண்டவரே நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்…………கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்” (வ.5) என்கின்றார். நீர் பதிலளிக்கின்ற தேவன் (வ.7).
சில வேளைகளில், வறண்ட பகுதியில், தேவன் ஒரு சூரியகாந்தி மலரை அனுப்புகின்றார். ஊக்கம் தரும் வார்த்தையை நண்பன் மூலம் அனுப்புகின்றார், அல்லது ஆறுதலான வேத வார்த்தையைத் தருகின்றார், நம்பிக்கையுடைய சிறிய நடைகளோடு, நாம் முன்னோக்கிச் செல்ல அழகிய சூரிய உதயத்தைத் தருகின்றார். நம்முடைய கஷ்டங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பதை நாம் அநுபவிக்க காத்திருக்கும் போது, நாமும் சங்கீதக் காரனோடு சேர்ந்து, “தேவரீர் மகத்துவமுள்ளவரும், அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (வ.10) என்று தெரிவிப்போம்.
நம்முடைய இருதயங்களிலே
ஓர் இளைஞன் பள்ளியில் சில பிரச்சனைகளைச் சந்தித்தபோது, அவனுடைய தந்தை அவனுக்கு ஓர் உறுதி மொழியைக் கற்றுக் கொடுத்தார், அதனை அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சொல்லுவான், “தேவனே, இன்று காலை, என்னை எழுப்பினதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் கற்றுக் கொள்வதற்காகவும் பிறரை வழி நடத்துவதற்காகவும் பள்ளிக்குச் செல்கிறேன்………………. அதற்காகவே, .தேவன் என்னைத் படைத்தார்” என்று சொல்லுவான். இந்த உறுதி மொழியின் மூலம் அந்த தந்தை, அந்த இளைஞனுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் வரும் தவிர்க்கமுடியாத சவால்களைச் சந்திக்க தைரியத்தையும் கொடுத்தார்.
இந்த உறுதிமொழியை தன்னுடைய மகன், மனதில் வைத்துக் கொள்ள உதவிய தந்தை, வனாந்தரத்தில் பயணம் செய்த இஸ்ரவேலருக்கு தேவன் கற்பித்த கட்டளையை, ஒரு வகையில் நிறைவேற்றுபவராக காணப்படுகின்றார். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது, நீ அவைகளை உன் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதி” (உபா.6:6-7).
இஸ்ரவேலர், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் பயணம் செய்தனர், அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கப் போகின்றனர், அந்த இளைய தலைமுறையினரின் கண்களும் தேவனை நோக்கி இருந்தாலன்றி, அவர்களாலும் வெற்றியடைய முடியாது என்பதை தேவன் அறிவார். எனவே, மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்கு நினைவு படுத்துகின்றார். தேவனுக்கு கீழ்ப்படியவும், தேவனை நேசிக்கவும், தேவனுடைய வார்த்தைகளை அவர்களின் பிள்ளைகளும் அறிந்து கொள்ளும்படி செய்யவும், “நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (வ.7) என்கின்றார்.
ஒவ்வொரு புதிய நாளிலும், தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் நாம் வாழும்படி நம்மை அர்ப்பணித்து, வேத வார்த்தைகள் நம்முடைய இருதயத்தையும், மனதையும் வழி நடத்தும்படி அவரிடம் நம்மைக் கொடுப்போமாக.
ஒருவருக்காக ஒருவர் உண்டாக்கப்பட்டனர்
“நான் அவரைப் பாதுகாக்கின்றேன், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள் ஸ்டெல்லா. “அவள் என்னருகில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றார் பிரதீப். ஸ்டெல்லாவும் பிரதீப்பும் திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகின்றது. சமீபத்தில் பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது, அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, எனவே, ஸ்டெல்லா அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவருக்கு வயது 101, அவளுக்கு 95. அவள் ஒரு நடைகருவியை பயன்படுத்தி நடந்தாலும், அவருக்குப் பிடித்தமான உணவு தயாரித்தல் போன்ற, தன்னால் இயன்ற உதவியை, தன்னுடைய கணவனுக்குச் செய்து வந்தாள், அதையும் அவளால் தனிமையாகச் செய்யமுடியவில்லை. பேரப்பிள்ளைகளும், அருகில் இருப்போரும் அவளுக்கு உதவி செய்தனர்.
ஸ்டெல்லா, பிரதீப் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை, ஆதியாகமம் 2 ல் கூறப்பட்டுள்ள “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (வ.18) என்று தேவன் கூறியதற்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆதாமுக்கு முன்பாக தேவன் கொண்டு வந்த அவருடைய படைப்புகளில் எந்த உயிரினமும் இந்த வார்த்தைக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவனுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட ஏவாளைத் தனக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளருமாகக் கண்டான் (வ.19-24).
ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் அமைந்தாள், இவர்கள் மூலமாக தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார். இது, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை தொடங்கவும், அவருடைய படைப்புகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மற்ற மக்களும் அடங்குவர் (1:28). அந்த முதல் குடும்பத்திலிருந்து சமுதாயம் உருவானது, திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர், வயதானவர், இளைஞர் யாருமே தனியாக இல்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தினர், “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கத்தக்க” வாய்ப்பை தேவன் நமக்குத் தந்துள்ளார் (கலா. 6:2).
நினைவு கூர்ந்து
ஒரு நினைவு நாள் அன்று, இராணுவத்தில் பணிபுரிந்த அநேகரை நினைவுகூர் ந்தேன், அதில் என்னுடைய தந்தையும் மாமாவும் அடங்குவர். இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். இவர்கள் வீட்டிற்குத் திரும்பியவர்கள். ஆனால் இந்த யுத்தத்தில், தங்களின் தேசத்திற்காக, ஆயிரக் கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களைப் பரிதாபமாக இழந்தனர். என்னுடைய தந்தையும், அந்த நாட்களில் இருந்த அநேக இராணுவ வீரர்களும், தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், தாங்கள் சரியென நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பதற்காகவும் தங்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
தங்களின் நாட்டைப் பாதுகாப்பதற்காக யாரேனும் மரித்தால், அவருடைய தியாகத்தைக் கனப்படுத்துபடி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை” (யோவான்15:13) என்ற வாசகம், அவருடைய அடக்க ஆராதனையின் போது வாசிக்கப் படும். ஆனால் இந்த வாசகத்தின் பின்னணி என்ன?
இயேசு மரிப்பதற்கு முன்பாக, கடைசி இராப் போஜனத்தின் போது, தன்னுடைய சீஷர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். இவர்கள் ஒரு சிறிய கூட்டமான சீஷர்கள், அதிலும் யூதாஸ், நம்பிக்கை துரோகம் செய்யும் படி, அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான் (13:18-30). எல்லாவற்றையும் தேவன் அறிவார், ஆயினும், தன் நண்பர்களுக்காகவும், துரோகிகளுக்காகவும் கிறிஸ்து தன்னுடைய ஜீவனை தியாகம் பண்ணும்படி தெரிந்து கொண்டார்.
இன்னும் அவருக்கு எதிரிகளாக இருக்கின்றவர்களும் (ரோமர் 5:10), ஒரு நாள் அவர் பேரில் விசுவாசம் வைப்பார்கள், என்பதால் அவர்களுக்காகவும் மனப்பூர்வமாக தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். அதற்குப் பதிலாக, அவர் எல்லாரையும் நேசித்தது போல “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்” என்று அவர் தன் சீஷர்களிடம் (அப்பொழுதும், இப்பொழுதும்) கேட்கின்றார் (யோவா.15:12). அவருடைய மிகப் பெரிய அன்பு, நம்மையும் நம்முடைய நண்பர்களையும், எதிரிகளையும், தியாகத்தோடு அன்பு கூர கட்டாயப் படுத்துகின்றது.