ரமேஷ் என்ற ஆட்டோரிக்ஷா டிரைவர் சாலையோர கடையில் காபி குடித்துள்ளார். கோவிட் -19 லாக்டவுனுக்குப் பிறகு தினசரி பயணிகள் மீண்டும் திரும்பினர். இன்றைய விளையாட்டு நிகழ்வு அதிக பயணிகளைக் குறிக்கிறது என்று அவர் நினைத்தார். இழந்த வருமானத்தை திரும்ப பெறுவேன். இறுதியாக, நான் கவலைப்படுவதை நிறுத்த முடியும்.
அவர் வாகனம் ஓட்டத் தொடங்கவிருந்தபோது, அருகிலுள்ள பெஞ்சில் சுமனைக் கண்டார். தெருவைப் பெருக்குபவர் பேச வேண்டும் என்பது போல் கலக்கத்துடன் காணப்பட்டார். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று ரமேஷ் நினைத்தான். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால தாங்க முடியல. ஆனால் சுமனை அணுக வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதை அவர் உணர்ந்தார், எனவே அவர் செய்தார்.
கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30). ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார்.
என்ன கவலைகள் உங்கள் இதயத்திற்கு பாரமாய் இருக்கின்றன? உங்கள் கவலைகளை தேவனிடம் ஒப்படைக்க நீங்கள் என்ன
முயற்சிகளை ஏறெடுக்கலாம்?
அன்பான தேவனே, நான் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் நீர் என்னைக் கவனித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளீர்.
