ஒருமுறை ஜேம்ஸ் மோரிஸ் என்ற தேவமனிதர் “கல்வி அறிவில்லாத ஆனால் ஆவிக்குரிய உற்சாக இருதயமுடைய சாதாரண மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். ஆனால், ஆண்டவர்அவரைப் பயன்படுத்தினதால் அவர் அகஸ்டஸ் டாப்லேடியை இயேசு கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அவரே, புகழ்பெற்ற காலம்காலமாக பாடப்படும் “பிளவுண்ட மலையே” என்ற பாட்டின் ஆசிரியரான டாப்லேடி ஆவார். மேரரிஸ் பிரசங்கிக்கும்போது அகஸ்டஸ் டாப்லேடி தான் பெற்ற அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “தேவனுடைய மக்களுடன் ஒரு சேமிப்பு கொட்டிலில் கூடியிருந்தபோது, தனது பெயரையே சரியாக எழுத தெரியாத ஒருவரின் ஊழியம் வாயிலாக தேவனுடைய பிள்ளையாக நான் மாற்றப்பட்டேன் என்பது மிக வியப்பானது. இது நிச்சயமாக ஆண்டவரின் செயல், அது அற்புதமானது.”
மெய்யாகவே, தேவன் வியப்பூட்டும் காரியங்களை எதிர்பாராத இடங்களிலும், நாம் “தகுதி இல்லாத” அல்லது எளியவர்கள் என எண்ணும் நபர்களாலும் நிறைவேற்றுகிறார். 1 கொரிந்தியர் 1-ல், பவுல் இயேசுவை பின்பற்றும் மக்கள், உலகத்தாரின் பார்வையில் எவ்வளவு அற்பமாய் எண்ணப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறார்: “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ” (வ.26) என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கொரிந்திய விசுவாசிகள் மிக சாதாரணமாக இருந்தாலும், தேவனின் கிருபையினால் யாதொருவரத்திலும் குறைவில்லாதவர்களாய் மற்றும் பயனுள்ள பாத்திரங்காளக இருந்தார்கள் (வ.7). உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப் பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.(வ.27-29)“தகுதியற்றவர்களாக ”எண்ணுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இயேசு உங்களுடன் இருந்தால், மற்றும் அவரால் பயன்படவேண்டும் என்று விரும்பினால், அதுவே போதுமானது. அப்படியானால் உங்கள் இதயத்தில் நீங்கள் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் : “ஆண்டவரே, என்னைப் பயன்படுத்தும்! என்பதாகும்.
அமைதியாக ஆனால் வல்லமையாக தேவனானல் பயன்படுத்தப்பட்ட எந்த நபர் உடன் உங்கள் நினைவுக்கு வருகிறார்? உங்களிடமுள்ளவைகள் அல்லது இல்லாதவைகள் மீதுள்ள உங்கள் கவணத்தை தவிர்த்து, தேவன் உங்கள் மூலமாக என்ன செய்ய முடியும் என்பதில் முழுக் கவனத்தை
செலுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
பரலோக பிதாவே, என் மீது மட்டுமே என் கவனத்தை செலுத்தியதற்காக என்னை மன்னியும். நான் இருக்கிற இடத்தில் உம் பரிசுத்த பணியில்,
என்னைப் பயன்படுத்தும்.
