தேவன் மெய்யாகவே அனைத்தையும் அறிந்தவர். ஆனால் ஒரு பத்திரிகை கட்டுரையின்படி, நமது அலைபேசி தகவல்கள் மூலம் அரசாங்கம் நம்மைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறது. அலைபேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் “மீத்தரவை” உருவாக்குகிறார்கள், அது “மின்னணு தகவல் தடயங்களை” விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு தனித்தனியான தரவுகளும் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், அதை ஒன்றிணைத்து பகுப்பாய்வு செய்யும் போது, ​​அது “வடிவமைக்கப்பட்டதிலேயே  மிகச் சக்திவாய்ந்த புலனாய்வுக் கருவிகளில் ஒன்றாக” மாறுகிறது. நமது மீத்தரவைக் கண்டுபிடிப்பதன் மூலம், எந்த நேரத்தில் நாம் எங்கிருந்தோம் அல்லது எங்கு இருக்கிறோம் என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கலாம்.

தேசியப் பாதுகாப்பு மையத்தின் இந்த மின்னணு பகுப்பாய்வை விட உன்னதமானதாக, தேவனுடனான உறவில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதனை அவரறிவார் என்று தாவீது கூறினார். சங்கீதம் 139 இல், நம்முள் இருப்பவற்றை ஆராய்ந்து அறிந்திருக்கிற (வ.1) தேவனிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறார். சங்கீதக்காரன், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்” (வ.23) என்று எழுதினார். அவர் நம்மைப் பற்றிய அனைத்தையும் அறிந்தும் (வ.2-6), எங்கும் நிறைந்தும் இருக்கிறார் (வ.7-12), மேலும் நம் “உள்ளிந்திரியங்களை” (வ.13-16) படைத்தும், அறிந்தும் உள்ளார். அவருடைய ஆலோசனைகள் நமது மனுஷீகமான புரிதலை விட உயர்ந்தவை (வ.17-18), நாம் நம் சத்துருக்களை எதிர்கொள்ளுகையிலும் அவர் நம்முடன் இருக்கிறார் (வ.19-22).

தேவனை அனைத்தையும் அறிந்தவராக, எப்போதும் இருப்பவராக, சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால்; நாம் எங்கு இருந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதனால் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர் சரியாக அறிவார். ஆனால் அவருடைய வழிகளில் நடக்க நமக்கு உதவும் ஒரு அன்பான தகப்பன் அவர். இன்று வாழ்க்கை பாதையில் அவரைப் பின்தொடர்வோம்.