2022 ஆம் ஆண்டு என் மனைவிக்கும் எனக்கும் மிகவும் விசேஷித்த ஆண்டு. அந்த ஆண்டுதான் எங்கள் பேத்தி சோபியா ஆஷ்லி பிறந்தாள். எங்கள் எட்டு பேரக்குழந்தைகளில் அவள்தான் ஒரே பேத்தி. சோபியாவின் தாத்தா பாட்டி புன்னகையை நிறுத்தவில்லை! எங்கள் மகன் காணொளி அழைப்பின் மூலம் அழைக்கும் போது, குதூகலம் இன்னும் அதிகமாகிறது. நானும் என் மனைவியும் வெவ்வேறு அறைகளில் இருக்கலாம், ஆனால் அவளது சந்தோஷமான கூச்சல், சோபியா அவளைப் பார்க்கிறாள் என்பதை வெளிப்படுத்தும். தொலைவிலிருக்கும் நமது பிரியமானவர்களைப் பார்ப்பதற்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு சொடுக்கு மட்டுமே போதும்.
நாம் தொலைப்பேசியில் பேசும் நபரைப் பார்க்கும் திறன் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் தேவனுடனான காணொளி அழைப்பு அதாவது அவரது பிரசன்னத்தில் மனமார்ந்த விழிப்புணர்வுடன் ஜெபித்தல் என்பது பழையது. 27ஆம் சங்கீதத்தில் தாவீதின் ஜெபத்தில், நெருக்கமான மனிதர்களின் திறனுக்கு அப்பாற்பட்ட ஒத்தாசை தேவைப்படுகிற எதிர்ப்பலையின் மத்தியில் (வ. 10-12) எழுப்பப்பட்ட குரல் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியது: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே (வ.8).
“அவருடைய முகத்தைத் தேட” (வ. 8) கடினமான நேரங்கள் நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால், “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (16:11) என்று போற்றப்படுகின்ற ஒருவருடன் முகமுகமாக துன்பத்தில்தான் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்றில்லை. நீங்கள் கூர்ந்து கவனித்தால், எந்த நேரத்திலும், “என் முகத்தைத் தேடுங்கள்” என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.
உங்கள் நாளின் எந்த நேரங்களில் உங்கள் இதயம் தேவனுடன் நெருங்கி இணைந்திருப்பதைக் காண்கிறீர்கள்? அவருடனான பழக்கமான ஐக்கியம், உங்களை எப்படி ஒரு "தீங்கு நாளுக்கு" உங்களை தயார்ப்படுத்தும்?
பரலோகத் தகப்பனே, உம்முடன் முகமுகமாகச் சந்திக்கும் பாக்கியத்திற்காக நான் உம்மை துதிக்கிறேன். உம்முடன் ஜெபத்தில் நேரத்தைச் செலவிட எப்போதும் ஆயத்தமாக இருக்க எனக்கு உதவும்.