கர்ப்பிணிப் பெண்ணான எங்களின் அயலகத்தார் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்திக்காக நாங்கள் நீண்டகாலம் காத்திருப்பது போல் உணர்ந்தேன். “பெண் குழந்தை!” என்று அவர்களின் வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் ஒரு அடையாளத்தை இறுதியாக வைத்த போது, அவர்கள் மகளின் பிறப்பைக் கொண்டாடினோம். மேலும் புல்வெளி காட்சியைப் பார்க்காத நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினோம்.

ஒரு குழந்தையின் வருகைக்காக பெரும் குதூகலம் காத்திருக்கிறது. இயேசு பிறப்பதற்கு முன்பு, யூதர்கள் ஏதோ சில மாதங்கள் மட்டும் காத்திருக்கவில்லை, தலைமுறை தலைமுறையாக இஸ்ரவேல்  எதிர்பார்க்கும் மீட்பரான மேசியாவின் பிறப்புக்காக ஏங்கினார்கள். ஆண்டுகள் கடந்து செல்ல,  உண்மையுள்ள யூதர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமோவென்று சந்தேகித்திருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன்.

ஒரு நாள் இரவு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி வானத்தில் தோன்றியது, அப்போது ஒரு தூதன் பெத்லகேமில் மேய்ப்பர்களுக்குத் தோன்றி மேசியா இறுதியாகப் பிறந்தார் என்று அறிவித்தான். அவன் அவர்களிடம், “பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” (லூக்கா 2:12). மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்த்த பிறகு, அவர்கள் தேவனைப் புகழ்ந்து, பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (வ.17).

இயேசுவின் பிறப்பைப் பற்றி பிறரிடம் சொல்ல, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிள்ளை பிறந்ததை மேய்ப்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இன்னும் அவருடைய பிறப்பைக் கொண்டாடுகிறோம், காரணம் அவரை விசுவாசிக்கிற எவருக்கும் இவ்வுலகின் மாறுபாட்டிலிருந்து அவரது ஜீவனானது மீட்பை வழங்குகிறது. நாம் சமாதானத்தை அறியவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை, இதுவே அறிவிக்க ஏற்ற நற்செய்தியாகும்.