நானும் என் கணவரும் எப்போதும் எங்கள் சபையில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளின் ஆராதனையில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருமணமான புதிதில், நாங்கள் ஒரு விசேஷித்த வழக்கத்தைக் கொண்டிருந்தோம், ஆராதனைக்குப் பிறகு கதகதப்பான ஆடைகளை அணிந்துகொண்டு அருகிலுள்ள மலையில் ஏறுவோம், அங்கே உயரமான கம்பங்களில் 350 ஒளிரும் விளக்குகள் நட்சத்திர வடிவில் கட்டி தொங்கவிடப்பிட்டிருக்கும். பெரும்பாலும் பனியிருக்கும் அங்கிருந்து நாங்கள் நகரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, மெல்லிய குரலில் இயேசுவின் அற்புதப் பிறப்பைப் பற்றிய எங்கள் கருத்துக்களைப் பேசிக்கொள்வோம். இதற்கிடையில், நகரத்தில் உள்ள பலர் கீழே பள்ளத்தாக்கிலிருந்து பிரகாசமான, சரமாய் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த நட்சத்திரம் நமது இரட்சகரின் பிறப்பை நினைவூட்டுகிறது. “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை” தேடி எருசலேமுக்கு “கிழக்கிலிருந்து” வந்த சாஸ்திரிகளைப் பற்றி வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 2:1-2). அவர்கள் வானத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் நட்சத்திரம் உதித்ததைக் கண்டனர் (வ. 2). அவர்களின் பயணம் அவர்களை எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது, அந்த நட்சத்திரம் “பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்” அவர்களுக்கு முன்னால் சென்றது (வ. 9). அங்கு, அவர்கள் “சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்(டனர்)டு” (வ.11).
கிறிஸ்து நம் வாழ்வில் அடையாளப்பூர்வமாகவும் (நம்மை வழிநடத்துகிறவராக) மற்றும் உண்மையாகவே வானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைச் சிருஷ்டித்தவராகவும் என்று நமது வாழ்வின் ஒளிக்கு ஆதாரமாக இருக்கிறார் (கொலோசெயர் 1:15-16). அவருடைய நட்சத்திரத்தை (மத்தேயு 2:10) பார்த்தபோது “மகிழ்ச்சியடைந்த” சாஸ்திரிகளைப் போல, பரலோகத்திலிருந்து நம்மிடையே வசிக்க வந்த இரட்சகராக அவரை அறிந்துகொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். “அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவான் 1:14).
இயேசு எவ்வாறு உங்கள் வாழ்வில் ஒளியைக் கொண்டு வந்தார்? அதை இன்று அதை யாருடன் பகிர்வீர்கள்?
இயேசுவே, என் வாழ்வின் ஒளியாக இருப்பதற்காக உமக்கு நன்றி.