அது 1968, அமெரிக்கா வியட்நாமுடனான போரில் மூழ்கியது, நகரங்களில் இன வன்முறை வெடித்தது, இரண்டு பிரபலமான நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பு, ஏவுதளத்தில் மூன்று விண்வெளி வீரர்களின் உயிரை நெருப்பு பறித்தது, நிலவுக்குச் செல்வது ஒரு பகற்கனவாகத் தோன்றியது. ஆயினும்கூட, அப்பல்லோ 8 கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு விண்ணில் பாய முடிந்தது.
இது சந்திரனுக்கு மனிதர்களை முதன்முறையாக அனுப்பிய திட்டமாய் மாறியது. விண்கல குழுவினரான, போர்மன், ஆண்டர்ஸ், மற்றும் லவல் என்று அனைவருமே விசுவாசிகள். கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்னான செய்தியாக: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:1) என்பதை ஒளிபரப்பினர். அந்த நேரத்தில், இது உலகில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக இருந்தது, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பூமியைத் தேவனின் பார்வையில் இருப்பதுபோன்ற இப்போதும் உள்ள நினைவுச் சின்னமான புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஃபிராங்க் போர்மன் படித்து முடித்தார்: “தேவன் அது நல்லது என்று கண்டார்.” (வ.10).
சில நேரங்களில் நம் நிலையை எண்ணி, நாம் சிக்கிக்கொண்டிருக்கும் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்து, ஒரு நன்மையும் இல்லாததுபோல் உணரலாம். ஆனால் நாம் சிருஷ்டிப்பின் நிகழ்வுக்குத் திரும்பி, நம்மைப் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (வ.27). அதை மற்றொரு தெய்வீகக் கண்ணோட்டத்துடன் இணைப்போம்: “இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). இன்று, தேவன் உங்களைப் படைத்தார் என்பதையும், பாவம் இருந்தபோதிலும் நன்மையைக் காண்கிறார் என்பதையும், அவர் உங்களை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறே உங்களை நேசிக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் எத்தகைய கஷ்டங்களிலும் பாவங்களிலும் மூழ்கி இருக்கிறீர்கள்? நீங்கள் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டீர்கள் என்பதன் பொருள் என்ன?
அன்பு தேவனே, இந்த நாட்களில் நான் போராடுகிறேன். நீர் என்னை எவ்வாறு பார்க்கிறீரோ அவ்வாறே உமது கண்ணோட்டத்தில் என்னை நான் பார்க்க எனக்கு உதவும்.