ஒரு சாதாரண தொங்கு கயிா்கூர்தி பயணமாகப் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஆரம்பித்த அந்த பயணம், பயங்கரமான சோதனையாக மாறியது. சவாரி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டு துணை கயிறுகள் அறுந்து விழுந்ததில், பள்ளிக் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கினர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பன்னிரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் ஜிப்லைன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி பயணிகளை மீட்டனர்.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அந்த மீட்புக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆனால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி மீட்கும் இயேசுவின் நித்திய பணியுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பணி பெரிதல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஒரு தூதன் மரியாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி யோசேப்பை அறிவுறுத்தினார், ஏனெனில் அவளுடைய கரு “பரிசுத்த ஆவியினால்” (மத்தேயு 1:18, 20) அருளப்பட்டது. யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிடவும் சொல்லப்பட்டான், ஏனெனில் அவர், “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வ.21). இருப்பினும், இந்த பெயர் முதல் நூற்றாண்டில் பொதுவானதாக இருந்தபோதிலும், இந்த குழந்தை மட்டுமே இரட்சகராக இருக்கத் தகுதி பெற்றது (லூக்கா 2:30-32). மனந்திரும்பி தம்மை நம்புகிற அனைவரின் நித்திய இரட்சிப்பையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கக் கிறிஸ்து சரியான நேரத்தில் வந்தார்.
நாம் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் தொங்கூர்தியில் சிக்கி, தேவனிடமிருந்து நித்திய பிரிவின் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தம்முடைய அன்பினாலும் கிருபையினாலும் இயேசு நம்மை மீட்டு, நம் பரலோகத் தகப்பனிடம் பாதுகாப்பாகக் கொண்டுவர வந்தார். அவரை துதிப்போம்!
மரியாளின் குழந்தைக்கு எத்தகைய முக்கியமான பணி இருந்திருக்கும்? உங்களைப் பொறுத்தமட்டில் இயேசு ஈட்டு கொடுத்த மீட்பு உங்களுக்கு எப்படிப்பட்டது?
அன்பு இயேசுவே, முன்னர் நான் காணக்கூடாமல் தொலைந்து போயிருந்தாலும், உமது கிருபையால் இப்போது நான் மீண்டும் காணப்பட முடியும் என்பதில் மகிழ எனக்கு உதவும்.