ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவர்கள் தங்கள் சகாக்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் உண்டாக்கும் குறிப்புகளை எழுதப் பரிந்துரைத்தார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் வேறொரு பகுதியில் ஒரு பள்ளியில்  துயரம் ஏற்பட்டபோது, ​​அவர்களுக்கும் ஏதாகிலும் நடக்கலாம் என்று ஏற்பட்ட பயத்தையும் வேதனையையும் அவர்கள் மேற்கொள்ள, அவர்களின் குறிப்புகள் சக மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதியபோது ஊக்கமும் பரஸ்பர அக்கறையும் இருந்தது. அவர்கள் நண்பர்களை இழந்திருந்தனர், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயேசுவின் வாக்களிக்கப்பட்ட வருகையில் நம்பிக்கை வைக்குமாறு பவுல் அவர்களுக்கு அறிவுறுத்தினார் (1 தெசலோனிக்கேயர் 4:14). அது எப்போது நிகழும் என்று அவர்களுக்குத் தெரியாத நிலையில்,  அவர் திரும்பி வரும்போது விசுவாசிகளாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்களுக்கு நினைவூட்டினார் (5:9). அதற்குப் பதிலாக, அவர்கள் அவருடனான தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கவும், இதற்கிடையில் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி” (வ. 11) செய்யலாம்.

வேதனையான இழப்புகள் அல்லது புரிந்துகொள்ள முடியா துயரங்களை நாம் அனுபவிக்கும் போது, ​​பயம் மற்றும் சோகம் நம்மை மேற்கொள்வது எளிது. பவுலின் வார்த்தைகள், எழுதப்பட்ட காலத்தில் உதவியது போலவே இன்றும் நமக்கு உதவியாக உள்ளன. கிறிஸ்து அனைத்தையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போமாக. இதற்கிடையில், குறிப்புகள், நல்வார்த்தைகள், சேவைகள் அல்லது எளிய அணைப்பு மூலம் நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம்.