1986 இல், உக்ரைனில் செர்னோபில் அணுசக்தி விபத்து, உலகின் கவனத்தை மிகவும் ஈா்த்தது. பேரழிவின் ஆற்றல் அப்பட்டமாகத் தெரிந்ததால், கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அத்தியாவசியப் பணியில் அதிகாரிகள் விரைந்து பணியாற்றினர். அதிக கதிரியக்க குப்பைகளிலிருந்து வரும் ஆபத்தான காமா கதிர்கள், குப்பைகளைச் சுத்தம் செய்த ரோபோக்களை அழித்துக்கொண்டே இருந்ததது.

ஆகையால் அவர்கள் மனிதர்களை ”மனிதா்களை இயந்திரங்களாக” பயன்படுத்த வேண்டியிருந்தது! தொண்ணூறு வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான வேலை நேரத்தில், அபாயகரமான பொருட்களை அகற்றி, ஆயிரக்கணக்கான வீரமிக்க தனிநபர்கள் “செர்னோபில் அணுமின் நிலைய கலைப்பாளர்களாக” மாறினார்கள். தொழில்நுட்பம் செய்ய முடியாததை, தனிப்பட்ட துணிவுடன் மக்கள் செய்தனர்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுக்கு எதிரான நமது கலகமும் ஒரு பேரழிவை உண்டாக்கியது, அது மற்ற எல்லா பேரழிவுகளுக்கும் வழிவகுத்தது (ஆதியாகமம் 3 ஐப் பார்க்கவும்). ஆதாம் மற்றும் ஏவாள் மூலம், நாம் நமது சிருஷ்டிகரைப் பிரிந்திடத் தெரிந்துகொண்டோம், மேலும் அந்த செயல்முறையில், நம் உலகையே ஒரு நச்சுக் குப்பைகூளமாக மாற்றினோம். அதை நாமே சுத்தம் செய்ய முடியவே முடியாது.

அதுதான் கிறிஸ்துமஸின் முழு கருத்தே. அப்போஸ்தலன் யோவான் இயேசுவைப் பற்றி, “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்திமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:2) என்றெழுதினார். பின்னர் யோவான், “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (வ. 7) என்று அறிவித்தார்.

தம்முடைய சிருஷ்டிகளால் இயலாததை, இயேசு அருளியுள்ளார். நாம் அவரை விசுவாசிக்கும்போது, ​​அவர் நம்மை தம்முடைய பிதாவுடன் சரியான உறவிற்கு மீட்டெடுக்கிறார். அவர் மரணத்தையே கலைத்துவிட்டார். ஜீவன் தோன்றியது.