“தீவரமான ஊக்கம்”, லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் எனும் காவிய தொகுப்பை எழுதும்போது ஜே.ஆர்.ஆர். டோல்கியன், தனது நண்பரும் சக எழுத்தாளருமான சி.எஸ்.லூயிஸ் தனக்களித்த தனிப்பட்ட ஆதரவை விவரிக்கப் பயன்படுத்திய சொற்றொடர் இது. இந்த எழுத்து தொடரில், டோல்கீனின் பணி கடினமானதாகவும் பிழையற்றதுமாக இருந்தது, மேலும் அவர் தனிப்பட்ட முறையில் இரண்டு முறைக்கு மேல் நீண்ட கையெழுத்துப் பிரதிகளைத் தட்டச்சு செய்தார். அவர் அவைகளை லூயிஸிடம் அனுப்பியபோது, ​​”நீண்ட வருடங்கள் அதற்காக நீங்கள் செலவழித்தது நியாயமானது” என்று லூயிஸ் பதிலளித்தார்.

வேதாகமத்தில் நன்கு அறியப்பட்ட ஊக்குவிப்பாளர், சீப்புருவை சேர்ந்த யோசே ஆவார். அவர் பர்னபா (“ஆறுதலின் மகன்” என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறார், அப்போஸ்தலர்கள் அவருக்குக் கொடுத்த பெயர் (அப்போஸ்தலர் 4:36). பவுலுக்காக அப்போஸ்தலர்களிடம் வாதிட்டவர் பர்னபா (9:27). பின்னர், யூதரல்லாத விசுவாசிகள் இயேசுவில் நம்பிக்கை வைக்கத் தொடங்கியபோது பர்னபா, ​”சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்” (11:23) என்று லூக்கா நமக்கு கூறுகிறார். லூக்கா அவரை, “அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்” என்று விவரிக்கிறார், மேலும் அவரால் “அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்” (வச. 24) என்கிறார்.

ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் மதிப்பை அளவிட இயலாது. விசுவாசமும் அன்பும் கொண்ட வார்த்தைகளை நாம் பிறரிடம் பகிருகையில், “நித்திய ஆறுதலை” (2 தெசலோனிக்கேயர் 2:16) அளிக்கும் தேவனானவர், ஒருவரின் வாழ்வை நித்தியகாலத்திற்கும் மாற்றிடும்படி நாம் பகிா்ந்துகொள்வதை வைத்து கிரியை செய்வாராக. இன்று ஒருவருக்கு “”தீவரமான ஊக்கம் ” வழங்க அவர் நமக்கு உதவுவாராக!