புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி நாட்களில், சார்லி வார்டு இரண்டு விளையாட்டுகளில் மாணவர் அணி வீரராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில், இளம் பந்தெறி வீரனாக, கல்லூரி அளவில் நாட்டின் சிறந்த அமெரிக்கக் கால்பந்து வீரராக ஹெய்ஸ்மேன் கோப்பையை வென்றார். மேலும் அவர் கூடைப்பந்து அணியிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் போட்டிக்கு முன்னான உரையாடலில், அவரது கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பேசும்போது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சார்லிக்கு பிடிக்கவில்லை என்பதைக் கவனித்த அவர், “சார்லி, என்னவாயிற்று ?” என்று கேட்க, வார்டு, “அய்யா, உங்களுக்குத் தெரியும், பயிற்சியாளர் பவுடன் [கால்பந்து பயிற்சியாளர்] இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மேலும் அவர் எங்களை மிகவும் கடினமாக விளையாட வைப்பார்” என்றார்.
கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சார்லியின் சுபாவம், இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரது கூடைப்பந்து பயிற்சியாளரிடம் மென்மையாகப் பேசச் செய்தது. உண்மையில், அவர் சார்லியிடம் பேசியதை குறித்து: “ஒரு தூதன் உங்களைப் பார்ப்பது போல் இருந்தது” என்று அந்த பயிற்சியாளர் ஒரு நிருபரிடம் கூறினார்.
அவிசுவாசிகளிடம் நல்மதிப்பையும், கிறிஸ்துவுக்கென உண்மையுள்ள சாட்சியையும் பேணுவது கடினம். ஆனால் அதே சமயம், அவர் நமக்கு உதவி செய்து வழிநடத்தும்போது, இயேசுவின் விசுவாசிகள் அவரைப் போலவே மேலும் வளர முடியும். தீத்து 2ல், வாலிபரும், மற்றும் பொதுவாக அனைத்து விசுவாசிகளும், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும்” (வ.6) மற்றும் “நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பே(சவும்)சுகிறவனுமாயிருப்பாயாக” (வ.8) அழைக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் பெலத்தால் நாம் அவ்வாறு வாழும்போது, அவரைக் கனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நன்மதிப்பையும் உருவாக்குவோம். தேவன் நமக்குத் தேவையான ஞானத்தை வழங்குவதால், நாம் சொல்வதற்குச் செவிகொடுக்க ஜனங்களுக்கு நியாயமான காரணம் உண்டாயிருக்கும்.
நன்மதிப்பு, பிறரிடம் ஒரு தாக்கம் ஏற்படுத்த எவ்வாறு உதவுகிறது? கிறிஸ்துவைப் போன்ற சுபாவத்தில் வளர உங்களுக்கு எது உதவும்?
அன்புள்ள தேவனே, உம்மைப் பிரதிபலிக்கும் மற்றும் உம்மை கனப்படுத்தும் சுபாவத்தில் வளர எனக்கு உதவும்.