Archives: நவம்பர் 2024

தேவனின் நேரம்

வேறொரு நாடு செல்ல, தனது திட்டமிடப்பட்ட பயணத்தை விமலா எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், வழக்கம் போல் அவள் முதலில் அதற்காக ஜெபித்தாள். "இது ஒரு விடுமுறை பயணம்தானே, இதற்காக ஏன் நீ தேவனிடம் ஆலோசிக்க வேண்டும்?" என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார்.  இருப்பினும், விமலா எல்லாவற்றையும் தேவனிடம் அர்ப்பணிப்பதை விசுவாசித்தாள். இம்முறை, பயணத்தை ரத்து செய்யுமாறு அவர் ஏவுவதை அவள் உணர்ந்தாள். அப்படியே செய்தாள். அவள் அங்கே இருக்க வேண்டிய நேரத்தில், அந்த நாட்டில் ஒரு பெருந்தொற்று பரவியதைப் பின்னரே அறிந்தாள். "தேவனே என்னைப் பாதுகாப்பதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டாள்.

வெள்ளம் வடிந்த பிறகு, நோவாவும் அவருடைய குடும்பமும் பேழையில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காத்திருக்கையில்  தேவனின் பாதுகாப்பை அவர் நம்பியிருந்தார். பத்து மாதங்களுக்கும் மேலாக ஒத்துழைத்த பிறகு, அவர் வெளியேற ஆர்வமாக இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, " பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று" மற்றும் " பூமி காய்ந்திருந்தது" (ஆதியாகமம் 8:13-14). ஆனால், நோவா தான் பார்த்ததை மட்டும் நம்பவில்லை; மாறாக, தேவன் அவரிடம் சொன்னபோதுதான் அவர் பேழையை விட்டு வெளியேறினார் (வ.15-19). நீண்ட காத்திருப்புக்குத் தேவனிடம் நல்ல காரணம் இருப்பதாக அவர் நம்பினார்; ஒருவேளை பூமி இன்னும் முற்றிலும் ஏற்றதாயில்லாமல் இருந்திருக்கலாம்.

நம் வாழ்வின் தீர்மானங்களைக் குறித்து நாம் ஜெபிக்கையில், ​​நமக்குத் தேவன் அளித்த மனத்திறனை பயன்படுத்தி, அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்போது; ​​நம்முடைய ஞானமான சிருஷ்டிகர்  நமக்கு எது சிறந்தது என்பதை அறிவார் என்று அவருடைய நேரத்தை நம்பலாம். சங்கீதக்காரன் கூற்றுப்படி, “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்..என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்கீதம் 31:14-15).

மற்றவர்களின் பணியில்

எங்கள் பேரக்குழந்தைகள் நான்கு பெரும் ஒரு ரயில் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், இளைய இருவருக்கும் அதின் உந்து பொறியைக் குறித்து வாக்குவாதம் உண்டானது. எங்கள் எட்டு வயது பேரன் தலையிடுகையில், ​​அவனுடைய ஆறு வயது சகோதரி, “அவர்களுடைய காரியத்தில் தலையிடாதே” என்றாள். இது பொதுவாகவே நம் அனைவருக்குமான ஞானமான வார்த்தைகள். ஆனால் வாக்குவாதம் அழுகையாக மாறியபோது, ​​​​பாட்டி தலையிட்டு, பிரித்து, சண்டையிடும் குழந்தைகளை ஆறுதல்படுத்தினார்.

பிறர் காரியங்களில் தலையிடுவது விஷயங்களை மோசமாக்கும் என்றால், விலகி இருப்பதே நல்லது. ஆனால் சில நேரங்களில் நாம் ஜெபத்தோடு தலையிட வேண்டும். பிலிப்பியருக்குக்கான நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல்,  அதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அளிக்கிறார். இங்கே அவர் இரண்டு பெண்களான எயோதியா மற்றும்  சிந்திகேயாவை, "கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க" (4:2) வலியுறுத்துகிறார். வெளிப்படையாக, அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமடைந்தது, அப்போஸ்தலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் (1:7) தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார் (வ.3).

பெண்களின் வாதம் பிரிவினை உண்டாக்குவதையும், சுவிசேஷத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதையும் பவுல் அறிந்திருந்தார். எனவே, அவர்களின் பெயர்கள் "ஜீவபுஸ்தகத்தில்" (4:3) எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுகையில் அவர் கண்ணியமாக இந்த சத்தியத்தை உரைத்தார். இந்தப் பெண்களும், சபையில் உள்ள அனைவரும் சிந்தையிலும், செயல்களிலும் தேவனின் ஜனங்களாக வாழ வேண்டும் என்று பவுல் விரும்பினார் (வ.4-9).

நீங்கள் தலையிட வேண்டுமா என்று உங்களுக்கு நிச்சயமில்லாவிடில், ​​"சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்"  (வ. 9; பார்க்க வ. 7) என்பதை நம்பி ஜெபியுங்கள்.

'கிட்டத்தட்ட உண்மை' எனப்படுவதும் பொய்யே

ஒளிப்பதிவு? சிறப்பாக இருந்தது. தோற்றம்? நம்பக்கூடியது. கருத்து? சுவாரஸ்யமானதும், தொடர்புள்ளதுமானது. பாலிவுட் நடிகரான அமீர் கான், வழக்கத்திற்கு மாறான அரசியல் ரீதியான அறிக்கைகளை வெளியிடும் காணொளியாக அது இருந்தது. இணையத்தில் பலர் இது உண்மை என்று நம்பினர், மேலும் இது நடிகரின் புதிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும்  எண்ணினர்.

ஆனால் இந்த பிரபலமான காணொளி போலியானது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி நடிகரின் போலியான ஆள்மாறாட்டம் ஆகும், மேலும் இது கலகத்தை உருவாக்கும் சுயநல நோக்கோடு புனையப்பட்டது. உண்மையில் அந்த அறிக்கைகளை நடிகர் வெளியிடவில்லை, மேலும் காணொளியானது அதிக பரபரப்பானது போலவே, அது பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

நமது தொழில்நுட்பங்களின் காரணமாக, பொய்கள் பெரிதாக்கப்பட்டு, அவை உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்குப் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறோம். தெய்வீக ஞானத்தின் தொகுப்பான நீதிமொழிகள் என்ற புத்தகம், உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. "சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்" (12:19). அடுத்த பழமொழியே நமக்குச் சொல்கிறது, "தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்" (வ.20).

தேவனின் கட்டளைகள் முதல் பாலிவுட் நடிகர்கள் பற்றிய காணொளிகள் வரை, அனைத்திற்கும் நேர்மை பொருந்தும். சத்தியம்  "என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்"

மேய்ப்பனிடமிருந்து துணிவு

2007  டீ20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலிருந்த சுமார் 1,00,000 பேர் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். மிஸ்பா முதலில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்ஸர் விளாசினார். இருப்பினும், ஜோகிந்தர் ஷர்மா இன்னும் அமைதியாக அடுத்த பந்து வீசினார். இந்த முறை பந்தை ஒரு ஜோடி இந்திய கைகள் கவ்வின, ஒரு விக்கெட் விழுந்தது. மிஸ்பா ஆட்டமிழந்தார், அரங்கம் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது, இந்தியா தனது முதல் டீ20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதுபோன்ற உணா்ச்சிமிக்க தருணங்களில்தான் சங்கீதம் 23:1 போன்ற வேதாகம வசனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். நமக்குப் பெலனும் உறுதிப்பாடும் தேவைப்படும்போது, தேவனை ​​ஒரு மேய்ப்பனாக உருவகப்படுத்துகையில், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் அவற்றைப் பெறலாம்.

சங்கீதம் 23 ஒரு பிரியமான சங்கீதம், ஏனென்றால் நம்மை அயராமல்  பராமரிக்கும் அன்பான மற்றும் நம்பகமான மேய்ப்பன் இருப்பதால், நாம் ஆறுதலையும் அல்லது சமாதானத்தையும் பெறலாம் என்று இது நமக்கு உறுதியளிக்கிறது. தீவிரமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் உண்டாகும் அச்சம் மற்றும் தேவன் வழங்கும் ஆறுதல் ஆகிய இரண்டிற்கும் தாவீது சாட்சியமளித்தார் (வ. 4). "தேற்றும்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உறுதியைக் குறிக்கிறது, அல்லது அவரது வழிநடத்தும் பிரசன்னத்தால் உண்டாகும் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது.

சவாலான சூழ்நிலைகளில், விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், நல்ல மேய்ப்பன் நம்முடன் நடப்பார் என்ற இதமான நினைவூட்டலைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி நாம் தைரியம் பெறலாம்.