Archives: நவம்பர் 2024

நியமனம்

நவம்பர் 22, 1963 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி மற்றும் கிறித்துவ விளக்க உரையாளர் சி.எஸ். லூயிஸ் ஆகியோர் மரித்தனர். முற்றிலும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட, நன்கு அறியப்பட்ட மூன்று மனிதர்கள். ஹக்ஸ்லி, ஒரு அஞ்ஞான கொள்கைவாதி, கிழக்குப் பகுதிகளின் மாய வித்தைகளில் ஈடுபாடுள்ளவர். கென்னடி, ரோம கத்தோலிக்கராக இருந்தாலும், மனிதநேயத் தத்துவத்தைக் கடைப்பிடித்தார். லூயிஸ் ஒரு முன்னாள் நாத்திகர் ஆவார், அவர் ஒரு ஆங்கிலிகன் என்ற முறையில் இயேசுவை வெளிப்படையாகப் பகிரும் விசுவாசி. மரணம் என்பது நபர்களை மதிப்பதில்லை, ஆகையால் நன்கு அறியப்பட்ட இந்த மூன்று மனிதர்களும் மரணத்துடனான தங்கள் நியமனத்தை ஒரே நாளில் எதிர்கொண்டனர்.

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3) கீழ்ப்படியாதபோது, மனித வாழ்க்கை அனுபவத்தில் மரணம் நுழைந்ததாக வேதாகமம் கூறுகிறது. இது மனித வரலாற்றில் உண்டான சோகமான உண்மை. மரணம் என்பது ஒரு பெரிய சமத்துவவாதி. அல்லது, யாரோ ஒருவர் சொன்னது போல், எவராலும் தவிர்க்க முடியாத நியமனம் இது. எபிரேயர் 9:27-ன் சத்தியமும் இதுதான், “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று நாம் வாசிக்கிறோம்.

மரணத்துடனான நமது சொந்த நியமனம் பற்றிய நம்பிக்கையை நாம் எங்கே பெறலாம்? மரணத்திற்குப் பின்பாக என்னவாகும்? கிறிஸ்துவில் மட்டுமே. ரோமர் 6:23, இந்த சத்தியத்தை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது: "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." தேவனுடைய இந்த ஈவு  எப்படிக் கிடைத்தது? தேவகுமாரனாகிய இயேசு, மரணத்தை அழிப்பதற்காக மரித்தார், நமக்கு ஜீவனையும் அழியாமையையும் (2 தீமோத்தேயு 1:10) அளிக்கக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள்

பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.

இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், "ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று" என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; ​​பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு  நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, ​​நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு" என்று கண்டார்.

கிறிஸ்துவில் வலுவான ஆதரவு

லண்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர், பெரிய பந்தயத்தில் தனியாக ஓடக்கூடாது என்பது ஏன் இன்றியமையாதது என்பதை அனுபவித்தார். பல மாதங்கள் கடினமான ஆயத்தங்களுக்குப் பிறகு, அவர் வலுவான இடத்தில் முடிக்க விரும்பினார். ஆனால் அவர் இறுதி கோட்டை நோக்கித் தடுமாறியபோது, ​​இருமடங்கு சோர்வுடன் சரிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் விழுவதற்கு முன், இரண்டு சக வீரர்கள் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர்; ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலதுபுறமும் நின்று, போராடும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஓட்டத்தை முடிக்க உதவினார்கள்.

அந்த ஓட்டப்பந்தய வீரரைப் போலவே, பிரசங்கியின் எழுத்தாளரும், பிறர் நம்முடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதால் ஏற்படும் பல முக்கியமான நன்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார். சாலொமோன், "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" (பிரசங்கி 4:9) என்ற கொள்கையை முன்வைத்தார். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர உழைப்பின் நன்மைகளை அவர் முக்கியத்துவப்படுத்தினார். கூட்டாண்மையில், "அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (வ. 9) என்றும், கடினமான காலங்களில் "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்" (வ.10) என்றும் அவர் எழுதினார். இருண்ட மற்றும் குளிரான இரவுகளில்,  ​​நண்பர்களின் அரவணைப்பில் "சூடுண்டாகும்" (வ.11). மேலும் ஆபத்தின் போது, ​​"ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்" (வ. 12). யாருடைய வாழ்க்கை ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ, அவர்களால் பெரும் வலிமையைப் பெற முடியும்.

நம்முடைய எல்லா குறைகள் மற்றும் பலவீனங்களுடன், இயேசுவை விசுவாசிக்கிற குழுவின் வலுவான ஆதரவும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. அவர் நம்மை வழிநடத்திச் செல்லுகையில், நாம் ஒன்றாக முன்னேறுவோமாக.

கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு

நெதர்லாந்தில் குளிர்காலம் அரிதாகவே நிறையப் பனியைக் கொண்டுவருகிறது, ஆனால் கால்வாய்கள் உறைந்து போகும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். என் கணவர், டாம், அங்கு வளர்ந்து கொண்டிருந்தபோது, ​​அவரது பெற்றோருக்கு ஒரு குடும்ப சட்டம் இருந்தது: "குதிரையின் எடையைத் தாங்கும் அளவில் பனிக்கட்டி இல்லையென்றால், அதை விட்டு விலகி இருங்கள்". குதிரைகள் தங்கள் இருப்புக்கான தடயங்களை விட்டுச் செல்லும் என்பதால், டாம் மற்றும் அவரது நண்பர்கள் சாலையிலிருந்து கொஞ்சம் குதிரையின் சானத்தை எடுத்து அதை மெல்லிய பனிக்கட்டி மீது எறிந்து, குடும்பச் சட்டத்தை மீறி மேற்பரப்பில் மேலே ஏறிச் சென்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, அவர்கள் செயலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதை அவர்கள் தங்கள் இதயங்களில் அறிந்திருந்தனர்.

கீழ்ப்படிதல் எப்போதும் இயல்பாக வருவதில்லை. கீழ்ப்படிவதா அல்லது வேண்டாமா என்ற விருப்பம், கடமை உணர்வு அல்லது தண்டனை பற்றிய பயத்திலிருந்தும் உருவாகலாம். ஆனால் நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையும் இருப்பதாலும் கீழ்ப்படிவதைத் தெரிவு செய்யலாம்.

யோவான் 14 இல், இயேசு தம் சீடர்களுக்கு அறைகூவல் விடுத்தார், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,. . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (வ. 23-24). கீழ்ப்படிவது எப்போதுமே எளிதான விருப்பம் அல்ல. ஆனால் நமக்குள் வாழும் ஆவியானவரின் வல்லமை, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் திராணியையும் அளிக்கிறது (வ. 15-17). அவருடைய உதவியால், நம்மை மிகவும் நேசிப்பவரின் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இது தண்டனை பயத்தால் அல்ல, மாறாக அன்பினால்.