கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு
ஜார்ஜ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை ஜார்ஜ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, "உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?" என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, "நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்" என்றார். ஜார்ஜின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.
நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே ஜார்ஜ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).
நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும்.
விசுவாசத்தால் ஆம் என்பது
வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கக்கூடுமா என்று கேட்டபோது, நான் மாட்டேன் என்று சொல்ல விரும்பினேன். நான் தடைகளைப் பற்றி யோசித்து, அவற்றைக் கையாள நான் தகுதியானவனல்ல என்று உணர்ந்தேன். ஆனால் நான் ஜெபித்து, வேதாகமம் மற்றும் பிற விசுவாசிகளிடமிருந்தும் வழிகாட்டுதலை நாடியபோது, ஆம் என்று சொல்லத் தேவன் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். வேதாகமத்தின் மூலம், அவருடைய உதவி எனக்கும் உறுதியளிக்கப்பட்டது. எனவே, நான் பணியை ஏற்றுக்கொண்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் பயமிருந்தது.
இஸ்ரவேலர்களிலும், கானானைச் சுதந்தரிப்பதிலிருந்து பின்வாங்கிய பத்து வேவுக்காரர்களிலும் நான் என்னைக் காண்கிறேன் (எண் 13:27-29, 31-33; 14:1-4). அவர்களும் கஷ்டங்களைக் கண்டு, எவ்வாறு தேசத்தில் உள்ள பலசாலிகளைத் தோற்கடித்து, அவர்களுடைய அரணான பட்டணங்களைக் கைப்பற்றுவது என்று யோசித்தார்கள். "நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்" (13:33) என்று வேவுக்காரர் கூறினர், மேலும் இஸ்ரவேலர்கள், "நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும்.. கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?" (14:3) என்று முறுமுறுத்தார்கள்.
கானானைத் தம்முடைய மக்களுக்குக் கொடுப்பதாக தேவன் ஏற்கனவே வாக்களித்திருந்ததை காலேபும் யோசுவாவும் மட்டுமே நினைவு கூர்ந்தனர் (ஆதியாகமம் 17:8; எண்ணாகமம் 13:2). அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர்கள் நம்பிக்கை பெற்றனர், எனவே தேவனின் பிரசன்னம் மற்றும் உதவியின் வெளிச்சத்தில் வரவிருக்கும் சிரமங்களை முன்னோக்கினர். அவருடைய வல்லமை, பாதுகாப்பு மற்றும் போஷிப்பில் அவர்கள் எதிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள், அவர்களுடைய சுயத்தில் அல்ல (எண்ணாகமம் 14:6-9).
தேவன் எனக்குக் கொடுத்த பணியும் எளிதானது அல்ல; ஆனால் அதினுடே அவர் எனக்கு உதவினார். அவருடைய நிர்ணயங்களில் நாம் எப்போதும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், காலேப் மற்றும் யோசுவாவைப் போல, "கர்த்தர் நம்மோடே இருக்கிறார்" (வ.9) என்பதை அறிந்து நாம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.
இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலித்தல்
ஆப்கானிஸ்தானில் ஒரு கடுமையான சுற்றுப்பயணத்தின் பின், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஸ்காட் மனமுடைந்து போனார். "நான் ஒரு இருண்ட இடத்திலிருந்தேன்" என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் "இயேசுவைக் கண்டடைந்து, அவரைப் பின்தொடர ஆரம்பிக்கையில்" அவரது வாழ்க்கை தீவிரமாக மாறியது. இப்போது அவர் கிறிஸ்துவின் அன்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறார், குறிப்பாக அவர் ஆயுதப்படைகளில் ஊனமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்வான இன்விக்டஸ் கேம்ஸில் தன்னுடன் போட்டியிடும் வீரர்களுடன் அதைச் செய்கிறார்.
ஸ்காட்டைப் பொறுத்தவரை, வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் ஆராதனை பாடல்களைக் கேட்பது ஆகியவை விளையாட்டுகளுக்குச் செல்வதற்கு முன் அவரை நிலைப்படுத்துகிறது. பின்னர், அங்குப் போட்டியிடும் சக வீரர்களுக்கு “இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கவும், இரக்கம், மென்மை மற்றும் கருணை காட்டவும்” தேவன் அவருக்கு உதவுகிறார்.
கலாத்தியாவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய ஆவியின் கனிகளில் சிலவற்றை ஸ்காட் இங்கே குறிப்பிடுகிறார். அவர்கள் கள்ள போதகர்களின் தாக்கத்தின் கீழ் போராடினர், எனவே பவுல் அவர்களை "ஆவியினால் வழிநடத்தப்பட்டு" (கலாத்தியர் 5:18) தேவனுக்கும் அவருடைய கிருபைக்கும் உண்மையாக இருக்கும்படி ஊக்குவிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஆவியின் கனியாகிய "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (வ. 22-23) ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.
தேவனின் ஆவியானவர் நம்முள் வசிப்பதால், நாமும் ஆவியின் நற்குணத்தினாலும் அன்பினாலும் நிறைந்திடுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களிடம் கனிவும் கருணையும் காட்டுவோம்.
தேவன் அருளிய பாதுகாப்பு
நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மைல்கள் மிதிவண்டியில், எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகளில் ஒட்டுகிறோம். இந்த அனுபவத்தை மேம்படுத்த, எங்கள் மிதிவண்டிகளுடன் சில பாகங்களை இணைத்துள்ளோம். ஜெனிபரின் மிதிவண்டியில் ஒரு முன் விளக்கு, ஒரு பின் விளக்கு, ஒரு ஓட்ட அளவி மற்றும் ஒரு சிறிய பூட்டு ஆகியவை உள்ளன. என்னுடையதில் தண்ணீர் புட்டி வைக்கும் பகுதியுண்டு. உண்மையில், இத்தகைய உதிரி இணைப்பு பாகங்களின்றி ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் வெற்றிகரமாகச் சவாரி செய்து, போதுமான தூரத்தை எளிதாகக் கடக்க முடியும். இவைகள் உதவிகரமானவை ஆனால் அவசியமானவையல்ல.
எபேசியர் புத்தகத்தில், அப்போஸ்தலன் பவுல் மற்றுமொரு துணை பாகங்களைப் பற்றி எழுதுகிறார்; ஆனால் இவை அத்தியாவசியமானவை. இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெற்றிகரமாக வாழ்ந்திட, இவற்றை "தரித்துக்கொள்ளுங்கள்" என்றார். நம் வாழ்க்கை எளிதான பயணங்கள் அல்ல. நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம், அதில் நாம் "பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க" (6:11) வேண்டும், எனவே நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.
வேத ஞானம் இன்றி, நாம் தவறானதை ஏற்றுக்கொள்ள நடத்தப்படலாம். இயேசு தமது "சத்தியத்தின்படி" வாழ்ந்திட நமக்கு உதவாவிடில், நாம் பொய்களுக்கு அடிபணிவோம் (வ.14). "சுவிசேஷம்" இன்றி நமக்கு "சமாதானம்" இல்லை (வ.15). "விசுவாசம்" நம்மைக் காக்காவிடில், நாம் சந்தேகத்திற்கு ஆளாவோம் (வ.16). நமது "இரட்சிப்பு" மற்றும் பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக நன்றாய் வாழும்படி நம்மை நங்கூரமிடுகிறாா் (வ.17). இதுவே நமது கவசம்.
வாழ்க்கையின் உண்மையான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் பாதையில் நாம் பயணிப்பது எவ்வளவு அவசியம். பாதையில் எதிரிடும் சவால்களுக்குக் கிறிஸ்து நம்மை ஆயத்தப்படுத்தும்போது; தேவன் அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை நாம் “தரித்துக்கொள்ளுகையில்” நாம் அதனை நிறைவேற்றுகிறோம்.