பாப் சலம் தனது மூக்கின் மூலம் (அல்லது ஒரு கரண்டியைத் தனது முகத்தில் இணைத்துக்கொண்டு) ஒரு வேர்க்கடலையை ‘பைக்’ சிகரத்தின் மேலே நகர்த்திய வேகச் சாதனையைப் படைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவில் உழைத்து ஏழு நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த விதையை முடிக்கும் நான்காவது நபர் பாப், அதாவது இன்னும் மூன்று பேர் இதைப் பொறுமையாகச் செய்திருக்கிறார்கள்

அவர்களின் பொறுமைக்கான தேவை சுயமாக ஏற்படுத்தப்பட்டது என்று நாம் கூறலாம், ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. நமக்குப் பொறுமை வேண்டும். இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22) மேலும் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி” (யாக்கோபு 1:4) ஆக இதுவே அத்தியாவசியமான நற்பண்பு. சுற்றியுள்ள அனைவரும் முழு பீதியில் இருக்கும்போது பொறுமைசாலிகளோ அமைதி காப்பர் . அவர்களும் நிலைமை சீராக விரும்புவர், அது சீராகாவிடினும் அவர்களுக்குக் கவலையில்லை. விவேகமாய் செயல்பட ஞானத்திற்காகத் தேவனை நம்பி, அவர்கள் நிலையான போக்கில் பயணிப்பர் (வ. 5).

பொறுமையிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அதைக் கற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. யாக்கோபு கூறுகிறார் “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று” (வ. 3). இத்தகைய பரீட்சையானது பெரிய மற்றும் சிறிய வழிகளில் வருகிறது. விமான நிலையத்திலிருந்து இதை எழுதுகிறேன். எனது இரவு 11:00 மணி விமானம் 2:00 மணி வரை தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஒரு இரவு தூக்கம் இல்லாமல், நான் காபி குடித்துக்கொண்டிருக்கிறேன், எப்போதாவது வீட்டிற்கு வருவேன் என்று நம்புகிறேன். விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் என் அன்பான தகப்பன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைய நாளுக்கான எனது படிப்பினை முடிந்திட ஜெபிக்கிறேன், ஆனால் யார் அறிவார்? அடுத்த விமானத்திற்கான காத்திருப்புப் பட்டியலைச் சரிபார்க்கும் நேரம் இது.