அவரது மனைவி இறந்த பிறகு, ஃபிரெட் தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை காலை உணவை சாப்பிடும் வரை தன்னுடைய வலியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று உணர்ந்தார். அவரோடு ஓய்வுபெற்ற சக ஊழியர்கள், அவரை அதிகமாய் உற்சாகப்படுத்தினர். சோகம் வரும்போதெல்லாம், அவர்கள் தன்னோடிருந்தால் நலமாயிருக்கும் என்று அவர் எதிர்பார்ப்பார். அவர் துக்கப்படும்போதெல்லாம் அவருடைய வீட்டின் மூலையிலிருக்கும் மேசையில் சாய்ந்துகொள்வார். 

இருப்பினும், காலப்போக்கில் அவர்களுடைய சந்திப்புகள் நின்றுவிட்டன. சில நண்பர்கள் நோய்வாய்ப்பட்டனர்; மற்றவர்கள் காலமானார்கள். அவருடைய வெறுமை, ஃபிரெட் தனது இளமை பருவத்தில் சந்தித்த தேவனிடம் ஆறுதல் தேட வழிவகுத்தது. அவர் சொல்லும்போது, “இப்போது நானே காலை உணவு சாப்பிட்டுக்கொள்கிறேன். ஆனால் இயேசு என்னுடன் இருக்கிறார் என்ற உண்மையை நான் அறிந்திருக்கிறேன். நான் உணவகத்தை விட்டு வெளியேறும்போது, எனது மீதமுள்ள நாட்களை தனியாக எதிர்கொள்ளப்போகிறேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என்கிறார்.

சங்கீதக்காரனைப் போலவே, தேவனுடைய பிரசன்னத்தின் பாதுகாப்பையும் ஆறுதலையும் ஃப்ரெட் கண்டுபிடித்தார்: “நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்” (சங்கீதம் 91:2). ஃப்ரெட் பாதுகாப்பை மறைப்பதற்கான ஒரு மாம்சீக இடமாக அல்லாமல், நம்பி ஓய்வெடுக்கக்கூடிய தேவனுடைய உறுதியான பிரசன்னமாகத் தெரிந்து கொண்டார் (வச. 1). ஃப்ரெட் மற்றும் சங்கீதக்காரன் இருவரும் கடினமான நாட்களை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று கண்டறிந்தனர். நாமும் தேவனுடைய பாதுகாப்பையும் உதவியையும் உறுதிசெய்யலாம். நாம் நம்பிக்கையுடன் அவரிடம் திரும்பும்போது, அவர் பதில்கொடுப்பதாகவும், நம்முடன் இருப்பதாகவும் உறுதியளிக்கிறார் (வச. 14-16).

வாழ்க்கை கடினமாக இருக்கும்போது நாம் செல்லும் பாதுகாப்பான இடம், வீட்டின் மூலையில் இருக்கும் மேசையா? அது நிலையானது அல்ல. ஆனால் தேவன் இருப்பார். நம்முடைய உண்மையான அடைக்கலமான அவரிடம் நாம் செல்வதற்காக அவர் காத்திருக்கிறார்.